• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 8 செப்டம்பர், 2010

  அன்பு வாசகர்களே!

  எழுத்துப்படையல்கள் உங்கள் எதிர்நிற்கின்றன. என் எண்ணம் என்னும் புதையலில் எழுந்து வந்த மலர்கள், இப்பக்கத்தில் மணம் வீசிநிற்கின்றன. மூளை தேக்கித்தன் முயற்சியனால், தன் பலபக்கத் தொழிற்சாலைகளில் வேலைப்பாடமைத்து கரங்களின் துணையுடன் கணனித்திரைக்கு அர்ப்பணித்துள்ளது. அன்புடன் சுவையுங்கள். சுவையின் தித்திப்புக்களையும் கசப்புக்களையும் மனச்சுத்தியுடன் பகிர்ந்தளியுங்கள். என் அன்புத் தேடல்களுக்கு ஊட்டச்சத்துத் தாருங்கள். உங்கள் அன்பை நாடிநிற்கும்

  இவள்
  வலைக்குச் சொந்தக்காரி

                                                                   

  சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கே அறிவின் பலம் கைகொடுக்கும். கண்டதைக் கேட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளாது மூளைக்குள் போட்டு ஆராய்ந்து எடுக்கும் முடிவுகளையே முழுவதுமாக நம்புகின்ற ஒரு ஜீவனே இந்த கௌசி என்று எழுத்துலகில் பயணிக்கின்ற சந்திர கௌரி சிவபாலன் ஆகிய நான். எழுத்து என்னும் மென்மையான இறகுகளால் வாசகர்கள்   சிந்தனை நரம்புகளைத் தீண்டிப்பார்க்கின்றேன். அதற்காய் இந்த இணையத்தை 2010 இல் ஆரம்பித்தேன். சமுதாயம் கண்டது கேட்டதைக்  கண்மூடி ஏற்றுக்கொள்ளாது எதிர்த்து நான்கு வார்த்தை பேச வேண்டும். அதன் மூலம் தெளிவு நான் பெறவேண்டும்  என்னும் சுயநல நோக்குடன் இப்பாலத்தில் உங்கள் இதயங்களை வந்தடைகின்றேன். பயணிக்கும் உங்கள் கருத்துக்களே என் எழுத்துக்களுக்குத்  தீனி போடும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். 

  நன்றி 


  என்னைத் தொடர்பு கொள்ள :

  Facebook:
  https://www.facebook.com/search/top/?q=gowry%20sivapalan
  https://www.facebook.com/search/str/kowsy+blog/keywords_search

  மின்னஞ்சல் முகவரி :


  kowsy2010@gmail.com

  2 கருத்துகள்:

  1. தங்களின் மொழி வடிவம் இலங்கைத் தமிழா சகோ?

   எதுவாகியிருப்பினும் இனிய வாழ்த்துகள் மென்மேலும் வளர்ந்திடவே!

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  இளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020

                                        கலாசாரக் காப்பாளர்களாக இளையோர் நம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம்...