பெற்றோரே என்றும் என் தெய்வங்கள்

கண்காணாக் கடவுள்களை நம்பி நாம் தொழுகின்றோம். கைகொடுக்கும் என்று காலமெல்லாம் துதிக்கின்றோம். ஆனால், வாழும் வரை நம் வாழ்வுக்காய்த் தம்மை அர்ப்பணித்து நாம் வேண்டியதெல்லாம் வேண்டியபோது தந்துநின்று, எம்மை இப்பூமியில் அவதரிக்கச் செய்து, எமக்காய் ஒரு வாழ்வைக் காட்டி பெருமை சேர்த்த பெற்றோரைத் துதிப்போமா? மற்றோரைத் துதிப்போமா? வாழ்வதுதான் வாழ்க்கை. அவ்வாழ்வைக் காட்டியோர் யார்? எம் தேவையை நிறைவேற்றியோர் யார்? தவறு செய்ய மன்னிப்போர் யார்? தவறுகளைச் சுட்டிக் காட்டியோர் யார்? பெற்றோர் உருவத்தில் தெய்வம் வந்தது என்று சொல்வதாக இருந்தாலும், பெற்றோர்கள் தான் தெயவங்கள். இதை மறுப்பதற்கு யாருண்டு. video

கருத்துகள்

சிவஹரி இவ்வாறு கூறியுள்ளார்…
சத்திய வரிகள் சகோ!

பகிர்ந்தமைக்கு நன்றி.

http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_4.html

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்