• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 4 அக்டோபர், 2010

  என் 18, 20 களின் இன்றைய ஏக்கம்

            
  உலகமே என் கைக்குள் அகப்பட்டது. என் ஒருவிரல் தடவத்தடவ நாய்க்குட்டி போல் என் கண்முன்னே காட்சிகள் என் ஆணைக்குக் கட்டுப்பட்டு ஆஜராகின்றன. உலகத்து மொழிப்படங்கள் எல்லாம் வீட்டில் உட்கார்ந்தபடி இரசித்துப் பார்க்கிறேன். இன்று என் இளமை வெகுதூரம் நின்று ஆதரவாய் என்னைப் பார்க்கிறது. ஒரு சினிமா பார்ப்பதற்காக ஓராயிரம் மன்றாட்டம் போட்டுப் பெற்றோர் படைசூழ பவித்திரமாய் படமாளிகை அண்மித்து, சொட்டும் வியர்வையைக் கைக்குட்டை ருசிபார்க்க, வரிசையில் நின்று அடிபட்டு உதைபட்டு நுழைவுச்சீட்டுப் பெற்று, இரத்தவெறி கொண்ட மூட்டைப் பூச்சிகளுக்கு இலவச இத்ததானம் வழங்கித் தடித்த கால்களுடன் உடல் சொறிந்த விரல் வீங்க, வீடு வந்த அந்த இளமைப்பருவம் இன்றுள்ள DVD, Internet, Ipot  பார்த்து ஏங்குகிறது. முதன்முதல் தொலைக்காட்சி பார்த்த திருநாவுக்கரசர் இன்று இருந்திருந்தால், நடந்து தவண்டு, உருண்டு, புரண்டு போய்க் கைலைக்காட்சியைக் கண்டு கழித்திருக்க மாட்டார். லெப்ரொப்பைத் தடவித்தடவியே கைலாயத்தைக் கண்முன்னே கொண்டு வந்திருப்பார்.
                  
                           நின்றபடிப் பத்துமாடி ஏறிக் கண்ணுக்கெட்டும் தூரம் வரைக் கண்டு கழிக்கின்றேன். விமானத்தில் இருந்தபடியே உண்டு குடித்து கழித்திருந்து உலகெல்லாம் வலம் வருகின்றேன். மயிலேறி உலக வலம் வந்த முருகப் பெருமானும் ஏங்கித்தான் இவ்வுலகை வாஞ்சையுடன் பார்த்திருப்பார். 
                  பாடசாலை சென்ற பிள்ளை, இன்னும் தான் வீடு வரவில்லை, என்று ஏக்கங் கொண்ட ஆச்சி, வாசற்படி நின்று செல் போன் (ர்யனெல ) கையில் இருந்திருந்தால், அழுத்தித்தான் பாhத்திருப்பாள். ஆறுதலும் அடைந்திருப்பாள்.
                     கணனி முன் இருந்தவண்ணம் கடகடவென்று கடிதம் எழுதி, கடித நண்பர் தொடர்பு கொண்டு வினாவுக்கு விடை பரிமாறும், இக்கால நிலையை எண்ணிப் பார்க்கும் போது கடித உறை வாங்கி முகவரியை முன் எழுதி முத்திரையை அதில் ஒட்டி வாய்பிளந்த பெட்டியிலே போட்டுவிட்டு வாரக்கணக்காய்க் காத்திருந்து பதில் கண்டு பதில் அனுப்பிய பருவக்கால நினைவுகள் இன்று பரிதாபமாக என்னைப் பாhக்கின்றன. 
                 எறும்பு உணவு சேர்ப்பதுபோல் பந்தி போட்ட நூலகங்களுள் நுழைந்து நுழைந்து என் பசிக்கு உணவுகளை சேகரித்து உண்டு கக்கிய ஆய்வுக் கட்டுரை பார்த்த இன்றைய சென்னை லைப்ரரி. கொம் என் காலடியில் கிடந்து ஆய்வு செய், ஆய்வு செய் என்று என்னைக் கடித்துக் கிளறுகிறது. 
                          இப்படி எத்தனையோ ஏக்கங்களுடன் என் 18, 20கள், இன்று இருந்திருக்கலாமே நான என்று என் இதயக்கதவைத் தட்டித்தட்டி தொடர்பாடல் செய்கிறது. மீண்டும் நான் இறந்து இப் பூமியில் இளையவளாய்ப் பிறக்க வேண்டும். காலம் காலமாய்க் காணுகின்ற புதுமைகளை இளமைக் காலத்திலேயே இரசித்து இன்புற வேண்டும். 

  1 கருத்து:

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...