• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 10 நவம்பர், 2010

  காற்றின் குதூகலம்


  காற்றின் குதூகலம்


  மெல்லென வீசிய காற்றுமகள் உலுப்பிவிட்டாள் மரங்களை
  சரசரவென சாலையெங்கும் இலைகள் சங்கீதம் பாடிப் பறந்தன.
  சருகுகளுடன் சல்லாபமிட்டுப் பறந்த காற்றவள்,
  அக்காசீன் மரங்களின் மலர்களை மெல்லத் தடவினாள்
  சிலிர்த்து மலர்ந்த மலர்களின் மென்மையான
  சுவாசத்தைப் பற்றியவளாய் புன்னகைத்தாள், ஒருமுறை.
  தன் உறுப்புக்குளின் உதறலுடன் ஆனந்தக் கூத்தாடினாள்
  தன் குளிர்மையை மனக் குளிர்ச்சிக்கு நன்றியாய்
  மலர்களுக்குத் தந்தளித்தாள்.
  குனிந்து வளைந்து தம் இதழ்களை மெருகேற்றிச்
  சிரித்தன, அம்மலர்கள்
  தொடர்ந்த பயணத்தில் வயல்வெளியினூடாக
  வளைந்துவளைந்து சென்றவள் - அங்கு
  நெற்கதிர்கள் சிலவற்றுடன் சேர்ந்து விளையாடினாள்.
  சேர்ந்தே பறந்தாள், காற்றுமகள்
  சலசலவென்று சத்தமிட்ட வண்ணம்
  சேர்ந்து வந்த நெற்கதிர்கள்
  தரைநோக்கி விழுந்துவிட கலகலவென்று சிரித்தபடி
  மேல்நோக்கிப் பறந்தாள்.
  நெற்கதிர்கள் விளையாட்டில் இன்பம் கண்டவள்
  மிதந்து வந்து, வாகனத்தின் நெரிசலும் - அவை 
  வாய்விட்டு அலறும் அலறலும்
  வீதிகளில் நடமாடும் மனிதர்களின் வாய்ப்பேச்சையும்
  அலக்காக அள்ளிக் கொண்டு பறந்தாள்.
  அடம்பிடித்து அழும் மழலையின் குரலுக்குள்
  நுழைந்து கொண்டாள் அதன் இனிமையைச் சுமந்து வந்தாள்
  அதன் சுகந்தத்தில் சற்று நேரம் தரித்து நின்றாள்.
  உலகெங்கும் குளிர்மை குறைந்தது.
  மீண்டும் தன் பயணத்தில் உலகத்துடன் உறவாடி மகிழ்ந்தாள்.


  1 கருத்து:

  1. இயற்கையோடு ஆடுதலென்பது இணையற்று இன்பம் தரும் இதமான அனுபவம் அது கவிதையில் புலப்புடுகிறது. கவிதைக்கேற்ற படம். இனிமை. நன்று.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...