வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

சனி, 11 டிசம்பர், 2010

எங்கே நிம்மதி

    
உனக்குள்ளே ஒரு மனிதன் - அவன்
 அடிக்கடி விழித்தெழுவான்
தனக்காய் ஒரு நியாயங்காண – உன் 
 வனப்பையும் பெருக்கிடுவான்
பிணக்காய் வரும் செய்திகளெல்லாம் 
 உனக்காய்க் காட்டிடுவான் - நீ
உறங்கிடும் போதும் விழித்திடும் போதும்
 உழுப்பியே வருத்திடுவான்
சிறப்பாய்த் தோன்றும் சிந்தனையாவும் - அவன் 
 சிதறடிக்கா விளைவுகளே 
சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கு
 நித்தமும் அவன் துணைவருமே 
உனக்காய் வாழ நினைத்திடும்போதும் – அவன்
 உறவுகள் காட்டிடுவான்
ஓடியோடி உழைத்திடும் போதும் 
 உணர்வோடு ஒன்றிடுவான்
ஓய்ந்து போய் ஒதுங்கிய போதோர்
 புதுவழி காட்டிடுவான் - நீ
ஓரிடத்தில் தரித்திடா தோடிடவே 
 உனக்குள் சேவைகள் செய்திடுவான்
தன்னை மீறிய நிம்மதிகாண – உன்னைத் 
 தனித்து விடுவதில்லை
உன்னை ஆள்பவனும் அவனே – உன்னை
 ஆதரிப்பவனும் அவனே
எங்கே நிம்மதி எங்கேயென்று – நீ
 தேடி அலைந்தாலும்
உன்னுள் இருப்பவன் உறங்கிடும் போதே
 நிம்மதி கண்டிடுவாய் - நீ 
நிம்மதி கண்டிடுவாய்         

கருத்துகள் இல்லை:

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...