• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 22 டிசம்பர், 2010

  அவள் நினைத்தாளா இது நடக்குமென்று.


                
             
             நினைப்பது யாதும் நடப்பதில்லை 
             துணைப்பொருள் துணைவருவதில்லை
             கணப்பொழுது சித்தம் கலங்கினால்
             கறைபடிந்திடும் கலங்கா மனத்தில்   

  காதல் என்ற வலையில் விழுந்து, கல்யாணம் என்ற சிறையில்  அகப்பட்டு, கலாச்சாரம் என்ற தண்டனையில் வாழ்பவளல்லவா., அவள். தாயார் வைத்தியர் வளர்ப்புத்தாயார் பொடிமெனிக்கே. இனக் கலப்பை இனபமாய் அநுபவிப்பவள். இரு தாயார் வளர்ப்பில் அறிவும் அன்பும் செல்வச் சிறப்பும் பண்பும் அன்புச் சகோதரர் இருவர் பாசப் பிணைப்பும் பற்றிய அழகான வாழ்வை அற்புதமாய் அநுபவித்தவள் அல்லவா, அவள். படுசுட்டியாக படிப்பில் படுகெட்டியாக இருந்து இன்று தொலைக்காட்சியின் அன்பையும் பாசத்தையும் அரவணைத்ததன் காரணம் தான் யாதோ? 10 வயது இடைவெளியில் பகல் இரவென்று கணனியுடன் நேருக்கு நேர் முகம் பார்த்து உரையாடி, ஏற்பட்ட காதல் மயக்கத்தில் அந்தக் காதலனைக் கைப்பிடித்து இன்று தொலைக்காட்சியே கதியாக அந்நியநாட்டிலே வாசம் செய்யும் காரிகை இவள். 
                  வேலைவிட்டு வீடு வந்தால் அலுவலகச் சுவாரசியங்களை ஆளுக்காள் பரிமாறி சிரிப்பிலும் சிந்தனையிலும் பங்கு போட்டுக் கொள்ள மனம் துடிக்கும். ஆனால், துணைவனோ வேலை நேரமெல்லாம் கணனியில் செய்தியும் பற்பலவிடயங்களும்.   அலுவலக வேலை ஸ்தம்பித்து நிற்கும். அதை முடிக்க மீண்டும் மேலதிக நேரம் அலுவலகத்தில் தஞ்சம். நித்திரையைத் தியாகம் செய்து அடுத்த நாள் காலைப்பொழுது 7 மணிக்கு வீடு நோக்கிப் பயணம். சிறிது தூக்கம். காத்திருந்து கதிரையிலேயே உறங்கி அவன் வர இவள் அலுவலகம் நோக்கிப் பயணமாகி விடுவாள். அன்று அவ்வாறே உப்பு மா அவளுக்குப் பிடித்ததும் உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும். என்று நினைவுறுத்துவதற்காகவும் அவள் அடுக்களையில் ஆயத்தமாக்கும் ஒரு சாதாரண உணவு. சமைக்கத் தொடங்க தொலைபேசி தொணதொணத்தது. கையிலெடுத்தாள் ரிசீவரை. மென்மையான அந்தக்குரல் அவள் செவிகளை வந்தடைந்தது. "குளியலறையில் சவர்க்காரத்தை எடுத்தேன், கதைகொடுக்க நீ சறுக்குவதைப் போல அது வழுக்கிச் சென்றது. சவரைத் திறந்தேன், வெடித்து வந்தது சத்தம் உன் சிரிப்பொலியைப் போல. உன் நினைவு வந்தது. தொலைபேசி எண்களைச் சுழட்டினேன். நேரமோ எட்டு. எட்டி நான் நடந்தால், உன் கிட்டே வந்து விடுவேன். சற்று உன் சம்மதத்தைத் தாராயோ" சுவையாகக் கதைத்தான். தனிமையை அகற்றத் தற்காலிகத் துணையை நாடினாள். அதுவே காலப்போக்கில் அவளுக்குச் சுவைக்கத் தொடங்கியது. சுகந்தமாகியது. பொறுப்பான கணவன் புத்தியிழந்தால்.  பண்பான வாழ்க்கை பறிபோய்விடும். நம்மைப் பற்றிச் சிந்திக்கும் நாம், நம்மைநாடிவந்தவர்கள் பற்றியும் சற்றுச் சிந்திப்போமா? கண்ணைக் கெடுத்த பின் சூரியநமஸ்காரத்தில் ஈடுபட்டு ஆவதுதான் என்ன.

  2 கருத்துகள்:

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...