வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

செவ்வாய், 4 ஜனவரி, 2011

ஆருயிர்கள் போனதெங்கே


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மத்திமம் 
ஆழ்கடலே உன் உள்நாட்டுச் சர்ச்சைக்கு – எம் 
ஆருயிர்களைப் பேரலையால் 
அள்ளிச் சென்றதென் நியாயம்
கண்கானா சக்திக்கு ஆற்றல் மிக அதிகம் 
விண்ணுக்கு விருந்தாக்க மன்னுயிர்கள் கொண்டாயோ
நடந்தவை யாவும் நன்றாகவே 
நடந்ததென்னும் கீதைக்கு
சிறந்த உதாரணமாய் விரைந்திதைக் கொள்ளலாமோ
விடைகூற யாருண்டு விரித்துரைக்க யாருண்டு
கடலுக்கே தாகமோ காற்றுக்கே புழுக்கமோ
வாழவந்த உயிர்களுக்கு வாழ்க்கை வெறுக்கவில்லை
வலிந்து நீ உயிர் எடுத்தால், வாழ்த்த யார் வரி தொடுப்பார்
உப்புக் கரிக்கும் உன் வாயாலே 
தப்பான உணவுண்ண தாகம் தான் கொண்டாயோ
ஆண்டாண்டு தூற்றுகிறார் ஆயிரமாய்க் கவி சொல்லி
நோயாலே சாகவில்லைப் பாயிலே கிடக்கவில்லை
பகைவனும் தான் கொல்லவில்லை
பாவிப் பேரலையே பரிதவிக்க உயிரெடுத்தாய்
பாவமென்ன புரிந்தாரோ சோகமதை யாம் காவ
வேகமாய் நீ கொண்ட தேகமெல்லாம் பெற்றுவிட்டோம்
தேம்பியழ எரித்து விட்டோம் தேடி நாம் நிற்பதெல்லாம் 
 ஓடி வந்து நீ பறித்தெடுத்த ஆருயிர்கள் போனதெங்கே

2 கருத்துகள்:

தமிழ்த்தோட்டம் சொன்னது…

மிகவும் அருமையான ஆழமான வரிகள்

kovaikkavi சொன்னது…

வலிந்து நீ உயிர் எடுத்தால், வாழ்த்த யார் வரி தொடுப்பார். vaalthukal.

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...