வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

வியாழன், 13 ஜனவரி, 2011

தைப்பொங்கலும் கவிப்பொங்கலும்

                                                                                                                          

பொங்கல் பானையிலே அரிசியிட்டு, நெய்யிட்டு
சக்கரையும் பயறும் அளந்தேயிட்டு
  பொங்கிய பொங்கலும் சுவையே 
மூளைப் பாத்திரத்தில் அறிவிட்டு, அணியிட்டு, 
அலங்காரமிட்டு கற்பனை அளந்தேயிட்டு 
  பொங்கிவந்த கவிவரிகளும் சுவையே 
பொங்கிய பொங்கலைப் படைத்த பாத்திரம் போல் - கவிப்
  பொங்கலைப் படைத்த இணையமும் சிறப்பே 
பொங்கலுண்டு சுவை இன்பம் பெற்று – மனப்
  பந்தலிலே இன்பச் சுவையுண்டாற் போல் - கவிப் 
பொங்கலுண்ட களிப்பினிலே கருத்தின்பம் பெற்று 
  அணிச்சுவையின்பம் கொள்வோம். 

ஓட்டைப் பானையிலே போட்ட பொங்கல் ஒட்டாது கொட்டும்- மன
ஓட்டப்பாத்திரத்தில் போட்ட அறிவும் ஒட்டாது கொட்டும் 
அறிவை மனப் பாத்திரத்தில் தேக்கி வைத்து 
அதன் பயனை அள்ள அள்ளக் குறையாது எடுத்தளிப்போம் 
பானைப் பொங்கல் அளவானது கொள்ளளவே கொட்டும் 
அறிவுப் பாத்திரப் பொங்கல் மேலானது.
கொட்டக் கொட்டக் குறையாதது.

2 கருத்துகள்:

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...