• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 21 ஜனவரி, 2011

  விடை கொடு

                                                இருமனம் கலந்த திருமணம். இல்லற வாழ்வின் தனிஅறம். உள்ளம் கலந்த உறவில் தன் இன்பம் கருதா சுவை அறம். வாழ்ந்து வளம் கண்டு வாழ்வைச் சுவைத்த வள்ளுவரின் வார்த்தைக் குவியலை அள்ளிப் பருகிய பகீரதன், தேடிப் பெற்ற தேன்மொழியும் பேச்சில் தேன் வடிப்பாள்ளூ அறிவில் வியக்க வைப்பாள்ளூ அழகில் பார்த்தறியா ரதியோவென அதிசயிக்க வைப்பாள். அனைத்துப் பெற்றும் பகீரதன் மனதை அணைத்தெடுக்கத் தெரியாது, அவன் அன்புத் தீயை அணைக்க மட்டும் தெரிந்தவள். தேன்மொழி உன் பாதங்களைப் பக்குவமாய்ப் பாதுகாக்கும் இந்த Nike பாதணி விலையோ அதிகம் ஆனாலும் என் மனதுக்குப் பிடித்தது. நான் வாங்க நீ அணிய மாட்டாயா? எனக்குப் பிடிக்காத Nike ஐ என் பாதம் தாங்காது. விட்டுவிடுங்க, இந்தப் பேச்சை. வைப்பாள் முற்றுப் புள்ளி. விதவிதமான நாகரீக அழகிகளாய் பொம்மைகள் ஆடைமாளிகையில் அவன் நெஞ்சிலே தூண்டிலைப் போட்டிழுக்க, தன் மஞ்சத்திற்குச் சொந்தக்காரி இடையில் தவழ ஓர் இரம்யமான ஆடையை அவள் உத்தரவின்றி வாங்கினான். வந்ததே உபத்திரவம். நான் கேட்டேனா? உங்கள் விருப்பத்திற்கு ஆடை அணிய வேண்டியது, நீங்கள். நானல்ல. நான் விரும்பியதை நான் கேட்பேன். அதையே நான் அணிவேன். அதை மட்டும் நீங்கள் வாங்கினால் போதும். தனக்கு உரியவளை உரிமையுடன் இரசிக்க அவனுக்கு முடியவில்லை. வாய்க்கு உருசியாகக் கொத்து ரொட்டி வீட்டில் கொத்துவோமா? பகிர்ந்து நாமிருவர் உண்போமா? கொத்தியது ரொட்டியை அல்ல. அவன் உள்ளக் கிடங்கில் உருவாகிய ஆசையை. எனக்குக் கொத்துரொட்டி செய்யத் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆவலும் எனக்கு இல்லை. அதில் பெரிதாய் நாட்டமும் இல்லை. நீங்கள் விரும்பினால் செய்து சாப்பிடலாம் நான் வேறு ஏதாவது செய்து சாப்பிட்டுக் கொள்வேன். இப்போதும் ஆசைக்கு வெட்டு.

                         என் ஆசையை ஒரு தடவையாவது தீர்த்து வைக்க மாட்டாயா? உன் ஆசையை ஒரு தடவையாவது தியாகம் செய்ய மாட்டாயா? என்னில் நீ கொண்ட காதல் கானல் நீரா? நான் உன்னில் கொண்ட காதல் உன் அலட்சியப் போக்கால் தீராக் காயமாய் என் சித்தத்தைச் சித்திரவதை செய்யுமோ? இந்த வாழ்க்கைக்குத் திருமணம் தேவையா? பலகாலம் ஒன்றாய் வாழ்ந்து திருமண பந்தத்தில் இணைகின்ற ஐரோப்பியர்களிடம் கூட பாதிரியார், இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்து அழுது ஒன்று கலந்த வாழ்க்கை வாழ்வீர்களா?  எனக் கேட்டு ஒப்புதல் பெறுகின்றார். ஆனால் கலாச்சாரத்தைக் கண்ணாகப் போற்றும் உன்னிடம் இவ்வாழ்க்கையை நான் எதிர்பார்க்கவில்லை. என் தாலியைச் சுமக்கும் தாரம் நீ என் வாரிசைச் சுமக்கவும் தயங்குகின்றாய். உன் தாலியைத் தானமாய் வேறு பெண்ணுக்குத் தந்து விடு. அவள் என் வாரிசைச் சுமக்க வழிவிடு. அவள் என் நாமத்தைச் சுமந்து, என் சந்ததி காக்கும் தனையனைத் தந்திடுவாள். எனக்கு விடைகொடு.
          
                                  விட்டுக் கொடுத்தலும், இதயங்கள் மாறி ஒன்று கலத்தலும், தியாகத்தில் இல்வாழ்க்கையில் இன்பம் காண்தலும் இன்றி, ஓடும் புளியம்பழமும் போல் ஒடடியும் ஒட்டாமலும் வாழும் வாழ்க்கையில், உண்மை அன்பில் உறைந்திருப்பவர் உள்ளம் சுக்குநூறாக உடையும். வாழ்க்கையை இரசிக்க வாழ்க்கைத்துணை இணைந்து வரவில்லையானால், அவ்வாழ்க்கை நரக வாழ்க்கை. இவ்வாறு எத்தனை உள்ளங்கள், மனஅழுத்தம் என்னும் நோயுடன் மனிதர்களாய் உலா வருகின்றார்கள்.   


  1 கருத்து:

  1. நல்ல கருத்து பந்திகளுக்கிடையில் இடைவெளி விட்டால் வாசிக்க இலகுவாய் இருக்கும்

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...