மௌனமாய்
                                                     மௌனமாய்


மௌனம், நிசப்தம், 
         வெளிப்படும் விநோதம்


மௌனமாய் பூக்கும் மலருக்கு 
 வாசனை ஒலியாகும்
மௌனமாய் உதிக்கும் கதிரவனுக்கு 
 கடும் வெயில் ஒலியாகும்
மௌனமாய் மலரும் விழிகளுக்குப்
 பார்வை ஒலியாகும்
மௌன ஒலியைப் புரிந்திட – மனம்
ஒருமைப்பட வேண்டும்


அகல் விசும்பின் மௌனம்
 இடியெனக் கலையும்
கார் இருளின் மௌனம் 
 விடியலில் கலையும்
ஓவியன் மௌனப்பார்வை
 வண்ணக்கலவையில் கலையும்
பூமியின் மௌனம் 
 பூகம்பத்தில் கலையும்
கவிஞனின் மௌனம் 
 கவிதையில் கலையும்
பொறுமை மீறிய மௌன வரிகள்
 பொங்கியே கரு சுமக்கும்

கருத்துகள்

kovaikkavi இவ்வாறு கூறியுள்ளார்…
மன ஒருமைப் பாட்டில் மௌன ஒலியும் புரிந்தால் நாமெல்லாம் ஞானிகளாகலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்