தாயார் பாடல்
கீச்சுமூச்சுத் தம்பலம் கீயோமாயோத் தம்பலம்
 கீதமாச்சு உங்கள் நினைவோ தம்பலத்தில்
 கீதமாச்சு உங்கள் நினைவோ தம்பலத்தில்

பல்லாங்குழி ஆட நானும்
 சொல்லாமத்தான் போனபோது
 சொல்லிச்சொல்லி அடிச்சஅடி வலிக்கவில்லை - நீங்க
 சொல்லாமாத்தான் போன அடி வலிக்கிறதுநெஞ்சில்
 சொல்லாமத்தான் போன அடி வலிக்கிறது.

 கிட்டிப்பொல்லு அடித்த அடி
 பட்டு நானும் பதறியதும்
 கட்டிவந்து அணைத்த சுகம் மறக்கவில்லைநீங்கள்
 விட்டுச்சென்று போனசுகம் மறக்கவில்லைஎன்னை
 விட்டுச் சென்று போனதுயர் கனக்கிறதுஎன்னை       
 விட்டுச் சென்று போனதுயர் கனக்கிறது.

 சின்னச்சோறு நான் சமைக்க
 கன்னத்திலே முத்தமிட்டு
 தித்திப்பதாய்ச் சொன்னசொல்லு மறக்கவில்லைஉங்கள்
 தித்திப்பான உணவுதேடி ஏங்கிறதுமனம்
 தித்திப்பான உணவு தேடி ஏங்கிறது

கருத்துகள்

kovaikkavi இவ்வாறு கூறியுள்ளார்…
பெற்றவர் நினைவு.. இற்றுவிடாத நினைவு.
மற்றவர் சொல்லி வருவதல்ல அந்நினைவு.
நேற்று, இன்று நாளையும் உள்ள நினைவு.
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி வேதா இலங்காதிலகம் அவர்களே. ஒவ்வொரு இடுகைக்கும் நீங்கள் தரும் அபிப்பிராயம் எனக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்துகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்