வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ஆன்மாவின் ஈடேற்றம்
மரம் இறந்தால் விறகாகும்
மனிதன் இறந்தால் என்னாகும் என
மனம் உறுத்தக் கேட்டார் வைரமுத்து
மனிதா!
உயிருடன் வாழும் காலம் வரை நீங்கள்
உலகில் ஊன்றிய சாதனைதான் யாதோ?
வாழ்ந்தோம் இறந்தோம் என்றில்லாது
மாற்றான் வாழ்வுக்கு உதவ உங்கள்
மனக்கிடங்கில் வழி இருக்க
பணக்கிடங்கு வெறுமையாகி விட்டதா?
கணக்கில்லா ஆசைகள் சுமந்து
மாசற்ற உடல் மண்ணுக்குள் மண்ணாகிடும்
மனிதநேயம் கொண்ட மானிடனே!
கருவிகள் சுமந்த உங்கள் உயிர்
பெருமைகள் சுமக்க வேண்டும்.
கருவிகளைத் தானமாய்த் தந்துவிட்டு
பெருமைகளைச் சுமந்து சென்றிடுங்கள்
மரித்த உடல் உலகில்
தரிக்கும் சாதனை விரைவில்
இறக்கும் காலத்தின் முன்,
சிறக்கும் பணியைச் சொல்லிடுங்கள்
நிலைக்கும் அவயவங்கள் இறந்த பின்பும்
சிரிக்கும் அவை வேறுடலில்
உங்களால் வாழும் மனிதன்
பூஜிக்கும் மன வார்த்தைகள் - உங்கள்
ஆன்மாவிற்கு ஈடேற்றமாகும்.

05.01.11 திண்ணை இணையத்தளத்தில் வெளிவந்தது.

1 கருத்து:

முல்லை அமுதன் சொன்னது…

கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.
முல்லைஅமுதன்.
http://kaatruveli-ithazh.blogspot.com/

உயிரைத் துச்சமாக நினைக்கும் இளம் தலைமுறையினர்

                    தமிழ் தாய்மார் தம் கணவனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விடத் தம் மகன்மாருக்குக் கொடுக்கும் முக்க...