• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

  நோய்

  நானென்ற மமதைக்கோர் குட்டுப் போடும்
  ஆண்டவனை நாடியோட வைக்கும்
  தன்னம்பிக்கைக்குத் தடைபோடும்
  தைரியத்தைத் தட்டிக் கேட்கும்
  துணைதேடி உடல் துடிக்கும்
  அமைதி தேடி ஒதுங்க வைக்கும்
  ''’’வென்ற மொழியை நாவுக்குப் பழக்கமாக்கும்
  வாழவேண்டுமெனும் ஆசையை அழிக்கும்
  கூடவிருந்தே குழி பறிக்கும் - இந்நோய்
  மனிதனுக்கோர் எச்சரிக்கை
  விஞ்ஞானி மூளைக்கு எஜாமானி
  வாழ்வின் தத்துவம் உணர்த்தும் ஞானி
  வாழ்பவரை அணைப்பதே இதன் பாணி - இது
  வாட்டாதவர் யாருமில்லை
  வருந்தாதவர் எவருமில்லை
  நோயே! உன்னையெண்ணி
  நோவதைத் தவிர வேறு வழியில்லை.


  02.02. 2011 முத்துக்கமலம் இணையத்தளத்தில் வெளியானது.

  1 கருத்து:

  1. நோயைப் பற்றி ஒரு சத்தான
   ஆரோக்கியமான கவிதை
   எளிமையான வார்த்தைகளை மட்டுமே
   பயன்படுத்தி மிக வனப்புமிக்க
   கவிதையை படைத்துள்ளீர்கள்.
   தொடர வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு

  காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாருமில்...