வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

சித்திரை நிலவே              சித்திரை நிலவே

 வானத்தில் தோன்றும் தேவதையே
 வானோடையில் நீராடும் வடிவழகே
 கானம்பாடிக் கவிவடிக்கக் கருவானவளே
 கோடிகாலம் குடியிருக்கும் பால்நிலவே
 பால் சோறு பருகவுன்
 பால்முகத்தை காட்டினாளே
 பாட்டி கதை சொன்னபோதும்
 கைநீட்டி நீட்டிக் காட்டினாளே
 போட்டி போட்டி நான் உணவுண்ண
 காட்டிய உன் உருவோ
 சித்திரை பௌர்ணமியில் முத்திரை பதிக்கிறது.
 தொட்டிலில் கண்டநிலா தொடர்கிறது இன்றுவரைஎன்னைத்
 தொட்டிலில் போட்ட நிலாவோஎன்னை
 விட்டு விட்டெங்கோ விரைந்து போயிற்று
 எட்ட நின்று காட்சி தரும் சித்திரை நிலவே
 தொட்டதில்லை உன்னை
 தொடரும் உன் நினைவோ விட்டதில்லை
 தொட்டுத் தொட்டு அணைத்தெடுத்தவளோ
 விட்டுவிட்டுச் சிட்டாய்ப் பறந்திட்டாள்
 பெற்று வளர்த்த உறவின் முத்தி வேண்டி
 சித்திரை முழுநிலவே!
 உன் முற்றுமுழு வடிவு காணநான்
 சித்திரையில் காத்திருப்பேன் - உன்னைச்
 சிந்தையில் வைத்திருப்பேன்.

2 கருத்துகள்:

யாதவன் சொன்னது…

சித்திரை முழுநிலவே!
உன் முற்றுமுழு வடிவு காண – நான்
சித்திரையில் காத்திருப்பேன் - உன்னைச்
சிந்தையில் வைத்திருப்பேன்.

kovaikkavi சொன்னது…

அம்மாவெனும் முத்திரையோடு மனதில் அழியாத நிலவு.
அனுதினமும் எண்ணும் நிலவு. தாய்

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...