07வனத்தினுள் சிங்கமும் மங்கையும்

சிங்கத்தின் அருகே சிங்காரி – அவள் 
சிந்தையில் என்ன சிக்கிக் கிடக்கிறதோ
சிங்கத்தை ஆட்கொண்ட மங்கைக்கு – மனச்
பங்கத்தை பறித்தெடுக்கப் பக்குவம் இல்லையோ

அடங்கிக் கிடக்கிறது ஆவேசம்
மயங்கிக் கிடக்கிறது மங்கையின் மையல் 
பூங்காவனத்துக்குள் ஒரு பூகம்பம் 
பொங்கிப் பின் மங்கிப் போனதுவோ

வார்த்தைகள் இங்கில்லை இங்கு
வழக்காடு முடிந்ததோ வாழ்வதற்கு - இந்த
வனத்துக்குள் மங்கையின் இராச்சியம்
மனத்துக்குள் ஆயிரம் வார்த்தைகள்

உயிரினங்கள் அனைத்துக்கும் உண்டு
உள்ளங்களுக்குள் ஆயிரம் கற்பனைகள்
அவரவர் வாழ்க்கைக்குள் தேடிப்பார்த்தால்
ஆயிரம் அர்த்தங்கள் புரிகிறது


                                              06 சிந்தித்தால் சிரிப்பு வருகிறது.

வியப்பும் வாய்ப்பும்
05

வியந்து வாய்பிழந்திங்கு வீணே வாழ்ந்திடாது
வியப்பான விடயங்கள், விரும்பிச் செய்து 
வியத்தகு சாதனை வின்னர்களாய் வாழ்ந்து 
வாழ்வின் வாய்ப்பைப் வளப்படுத்தல் சிறப்பே – பலர்
வியக்க வாழ்தலும் சிறப்பே

                                      


 பெற்றோரைத் தேடி
04
நாவடக்கம்
03


       இரவும்நிலவும்
02


அழகாய்த் தோன்றும் நிலவே – உன்னில்
நிலையாய் வாழ யாரால் முடியும்.
அண்மை வந்தால் அற்புதம் இல்லை
சேய்மையில் வண்ணம் சிறப்பாய்த் தெரியும்
இரவிலுன் முகம் இதமாய்த் தெரியும்
பகலிலுன் முகம் பார்ப்பவர் யாரோ!
கருமையின்றிக் கவரவொண்ணா கவினழகு நிலவே – உன்போல்
அகவழகின்றிப் புறவழகு புனைந்திடும் மனிதர்
அகவிருள் கொள் மாந்தர்முன் அழகாய்த் தெரிவர்
நிறையறிவின்றி குறையறிவு கொள் அறிஞர் குழாம்
குறையறி வறிஞர்முன் நிறைவாய்த் தெரிவர் 

 இரவும்நிலவும்
01

இரவும்நிலவும் இதயம் முழுதும்
இதமாய் இனித்த இளமைக் காலம்
கறியும் சோறும் கலந்தே ஊட்டி
இரவும்நிலவும் துணையாய்க் காட்டி
களித்தே மகிழ்ந்த மழலைக்காலம்
இரவும்நிலவும் துணையாய் நடக்க
இதயப்பாரம் இனிதாய் விலக
கரங்கள் இணைத்தே கதைகள் பேசி
கால் போக்கில் நடைக்கும் முதுமைக்காலம்
வாழும் காலம் கழிந்துவிடும் 
முதுமைக்காலம் முடிந்துவிடும்
நாம் மறைந்தபோதும்
இளமைமுதுமை எதுவுமின்றி
நிலையாய் நிற்கும் இரவும்நிலவும்.

கருத்துகள்

யாதவன் இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்து கவிதைகளும் அருமை
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks Yathavan
nadaasiva இவ்வாறு கூறியுள்ளார்…
முகநூல் கவிதைகள் முழுவதும் அருமை கௌரி .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்