என் படைப்புக்கள்


எனது எழுதுகோல் செதுக்கிய சிற்பங்கள்
கணனித் துணையுடன் பிரசவித்த குழந்தை
இணையங்கள் அணைத்த வாரிசு
இனிப்புத் தடவாத எலுமிச்சை
மகரந்தம் சிறிதளவே சிந்துகின்ற மலர்
உருண்டு கொண்டிருக்கும் பூமியிலே
சிரித்துக் கொண்டிருக்கும் சின்னக்கரு
என் அநுபவத்தைப் பிறருக்குக்
காட்டுகின்ற புகைப்படம்
பிறர் என்னை நேசிக்கத் துணைப் போகும்
இணைப்போலை
என் மனதில் தொடராய் ஊற்றெடுக்கும்
எண்ண அருவி
பதிக்கின்ற இடமெல்லாம் - என்
பண்பான இதயம் படிந்திருக்கும்
என்னைப் பாதித்தவை பல
என்னுள் பதிந்தவை சில
நீர்க் குமிழி போல் மறைந்தவை இன்னும் சில
யாப்பையுடைத்து வெளிவந்தவை சிற்சில
என் மனச்செடிக்குள் பூத்தாலும்
மாற்றான் பயன் பெறப் பூக்கும் ரோஜா!

முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது

கருத்துகள்

kovaikkavi இவ்வாறு கூறியுள்ளார்…
nalla vatikal. vaalthukal.
கேசுவர் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லாயிருக்கு , ஒரு கேள்வி கடைசியில ஏன் ரோஜானு முடிச்சியிருக்கிங்க
யாதவன் இவ்வாறு கூறியுள்ளார்…
யாப்பையுடைத்து வெளிவந்தவை சிற்சில

கம்பீரமான வரி எனக்கு பிடிச்சிருக்கு
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
கோவைக்கவிக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
முள்ளுக்குள்ளே இருந்தாலும் பலர் மனம் விரும்பும் மலர். மணம் பரப்பும் மலர். கவிவரிகள் கூட அனைவரையும் கவர்ந்திருக்கக் கூடியதே. கேசுவர் அவர்களுக்கு வரிகளை விட்டுச் சென்றமைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி யாதவன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்