• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 25 ஏப்ரல், 2011

  உயிர்கள் தேடி  ஒவ்வொருவர் கைகள் மேலும் கைகள் வைக்கப்பட்டன. கைகளை இறுகப்பற்றினர். ''மனத்தைரியம் கொள்ளுங்கள். துணிந்தோம் செயலில் இறங்குவோம் நெஞ்சு பஞ்சு போலுள்ள கோழை யாராவது இருந்தால், கைகள் விலகட்டும். அறுவராய் நாங்கள் கோழைகள் அல்ல என்று நிருபித்தபடி அந்த தோட்டத்தினுள் தனியாய் அமர்ந்திருக்கும் ஒரு வீட்டினுள் நுழைந்தனர் நண்பர்கள். கையில் வெள்ளைக் கடதாசி அத்துடன் ஒரு கண்ணாடிக்குவளை இருந்தது. கதவை இறுகச் சாத்தினான் ஒருவன். கடதாசியில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டன. அதன்மேல் கண்ணாடிக்குவளை வைக்கப்பட்டது. அக்குழாமில் ஒருவன் தந்தை இறந்து 6 மாதங்களே ஆகியிருக்க வேண்டும். அவரை அழைத்து உரையாடத் துணிந்தார்கள் நண்பர்குழாம். கேள்விகள் தொடுக்கப்பட்டன. கண்ணாடிக்குவளை அசைவு கண்டது. சொல்லும் உளமும் துணிவானால், துணிந்து இறங்கு செயலினிலே. உள்ளத்தெளிவு இல்லையெனில் ஒதுங்கிச் செயலை விட்டுவிடு. மனமென்ற ஒன்று வடிவின்றி உடலுள் இணைந்தது. அது உரமாகப் பதியாது நின்றால், உருவாகும் தவறான நிலை. திடீரென கதவு திறந்த அடித்து மூடியது. நிலைகுலைந்தனர் அவ் இளைஞர்கள். தவறி விழுந்து உடைந்து சிதறியது கண்ணாடிக்குவளை. குரலில் மாற்றம் கண்டவரும் உணர்வில் மாற்றம் கண்டவரும் நிலையது கண்டு அனைவரும் பதறியடித்து வீடு நோக்கிப்பறந்து சென்றனர். செயலின் உண்மைதேடி விரிந்தது மனம். 
                         திடீரென ஏற்படும் அதிர்ச்சி குரலில் மாற்றத்தைக் கொண்டுவரும். இல்லை மனிதனை ஊமையாக்கிவிடும். இது உண்மை. இறந்தவர் உண்மையாகவே ஆவியாகவே வந்திருந்தால் அவர் ஆவியாகத்தான் வர வேண்டும் என்று அவசியம் இல்லையே. கணனி, தொலைக்காட்சி, வானொலி பழுதானால் திருத்தம் செய்து பழையநிலைக்குக் கொண்டுவந்துவிடுவோம் எமது உடலைப்போலே. அப்படி முடியாது போனால், அவற்றை வீசி எறிந்துவிடுவோம். வைத்திருந்து அழகு பார்க்க மாட்டோம். அவற்றின் உயிரான மின்சாரத்தின் உருவத்தைக் காட்டமுடியுமா? அதேபோல்த்தான் வாகனம் இயங்க அதற்கு ஆதாரமான இயக்கசக்தியை யாராலும் காட்டமுடியுமா?  அவ்வாறே உடலினுள் இருந்து உடல் உறுப்புக்கள் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிர் சக்தியைக் காட்டமுடியுமா? பொருத்தமான உடலினுள் புகுந்து கொண்டு ஆட்சிசெய்யும் அந்த உயிரானது அந்த உடல் தனக்குச் சௌகரியம் அற்றதாக இருக்கும் நிலையில் அந்த உடலினுள் இருந்து வெளியேறிவிடுகின்றது. திரும்பவும் அந்த உடலினுள் புகும் சக்தியை அந்த உடல் இழந்துவிடுகின்றது. உடலற்ற அந்த உயிரை எப்படி நாம் காணமுடியும். வெறும் காற்றுக்கு மூளையின்றி உடலெங்கெ உறவெங்கே புரியப் போகின்றது. வெறும் பொருட்களுடன் உடலை ஒப்பிட முடியுமா என்று சர்ச்சை நம்மவர்களிடம் எழலாம். ஏன் மனிதனும் ஏதோ ஒன்றாய் ஆரம்பத்தில் உருவாகியிருக்கக் கூடாது? திடீரென ஏற்படும் தும்மலின் போது எமது இதயம் ஒருமுறை நின்று தொழிற்படுவதாக ஆராய்ச்சியின் போது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை எப்போதோ அறிந்த எம்மவர் தும்முகின்றபோது 100 என்று கூறுகின்றார்கள். அதாவது 100 வருடங்கள் வாழவேண்டும் இதயம் நின்று விடக்கூடாது என்பதற்காகவே. இப்படிப் பல எடுத்துக்காட்டுக்களை நாம் எடுத்துரைக்கலாம். இன்றைய விமானம் அன்றைய புஷ்பவாகனம். இன்றைய அணுவாயுதம், அன்று பாரத யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட நாகாஸ்திரம் போன்ற ஆயுதங்கள். இன்றைய தொலைக்காட்சி அன்று அப்பர் சுவாமிகள் கண்டு இரசித்த கைலைக்காட்சி. (எங்கோ நடந்த, நடக்கின்ற நிகழ்ச்சிகளை எமது வீட்டினுள் இருந்த வண்ணம் நாம் கண்டு கழிக்கின்றோம் அல்லவா! அதேபோல் எங்கோ இருக்கும் கைலையை நேரே கண்டு அப்பர் சுவாமிகள் இரசித்தார் அல்லவா) இன்றைய வானவியலாளர்கள் தொலைநோக்கிக் கருவிகள் மூலம் கண்டறிகின்ற நட்சத்திரக் கூட்டங்கள் அன்று ஞானிகள் ஞான சிருஷ்டியின் மூலம் கண்டறிந்ததாக இருக்கின்றது. இவ்வாறு நோக்கும் போது அதி மீத்திறனுள்ள புத்தி ஜீவிகள் வாழ்ந்து அழிந்து இப்போதுள்ள மனித இனம் தோன்றியிருக்கலாம். இது வளர்ந்து கொண்டு செல்லும் நிலையே இப்போது நாம் காணும் சந்ததி வளர்ச்சி நிலை. 


               மீண்டும் தொட்டதற்கே வருகின்றேன். டைனோசோரியா இனம் வாழ்ந்து மடிந்து பல கோடி ஆண்டுகளாகி விட்டன. அதேபோல் முதல் மனிதனை ஆக்கிய இனம் அல்லது அந்த அது ஏன் அழிந்திருக்க மாட்டாது. ஏன் மனித இனமும் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கக் கூடாது. அழிந்த, இறந்த, இல்லாமல் போன எதையும் தேடுவதிலோ, சிந்திப்பதிலோ எந்த பிரயோசனமும் இல்லை. போனது போனதுதான்..சிந்திக்கச் சில வரிகள் தந்தேன். உயிர் தேடி அலையும் உறவுகளுக்காக.                                                        

  2 கருத்துகள்:

  யாதவன் சொன்னது…

  உயிர் சமந்தமான உயிரோட்டமாக எழுத்யுல்லீர்கள் தும்மும் போது 100 சொல்வதற்க்கு இன்றுதான் விளக்கம் கிடைச்சிருக்கு

  சந்திரகௌரி சொன்னது…

  Thanks Yathavan

  நெஞ்சம் மட்டும் பேசும் காதல்

  நிற்பனவும் , நடப்பனவும் , பறப்பனவும் தமது மனங்களைப் பகிர்ந்து கொள்ளும் இயல்பான நிகழ்வு காதல். மனிதவளர்ச்சியில் சத்தியமானதும் சாத்தி...