• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 22 ஜூன், 2011

  வெளியில வெயில்!


                              

  வெளியில வெயிலு வேகுது உடலு

  வெய்யோன் சோதி விண்ணில் ஜொலிக்குது
  சோருது உணர்வு நாடுது நிழலு
  தாயக நினைவு மீட்டுது மனது
  வானக மைந்தன் குடைநிழல் தேடுறான்
  கானக மரங்கள் பூணுது உடைகள்
  மாடத்துப் பூங்கா பூக்குது நிறைத்து
  மாமரத்துப் பூக்களில் மகரந்தம் பறக்குது
  சிவக்குது கண்கள் விழிகள் வீங்குது
  அச்சும் அச்சும் தும்மல் வெடிக்குது
  அங்கில்லா மலரா இங்கென மனது அங்கலாய்க்குது
  இனச்சேர்க்கை புரிய துணைப்போகும் தேனீக்கள்
  மலர் விட்டு மலர் தாவுது
  ஓடித் தழுவும் ஆதவனை
  உதறித் தள்ளுது மனதுசெதுக்கிய சிற்பப் பாவை
  புளுக்கம் தவிர்த்த உடலை
  கறுப்புக் கண்ணாடி மனிதன்
  கள்ளமாய் உறுத்துப் பார்க்கிறான்
  வாட்டிய இறைச்சியை மக்களெல்லாம்
  வாடியில் வைத்து உண்ணுகிறார்
  அண்டங்கள் அனைத்தும் ஆதவன் ஆட்சியெனும்
  வாழ்வியல் வாக்கை வாழ்வினில் ஏற்று
  வெயிலின் தலைவன் வேதனை செயினும்
  வேண்டுதல் செய்தே போற்றிடுவோம்
  வருணன் நட்பை வெய்யோன் பெறவே
  வந்தனை செய்தே போற்றிடுவோம்! 

  15.06.2011 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது.

  9 கருத்துகள்:

  பெயரில்லா சொன்னது…

  அங்கே வெயில் கொடுமையாக, இருக்கு.. இங்கே வெயில் இல்லாம கொடுமையா இருக்கு. என்ன உலகமடா இது


  **************************

  ஒரு டாலர் திருடினால் தப்பா ?

  Ramani சொன்னது…

  ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
  என்ற பாடலை நினைவுறுத்திப்போகிறது
  தங்கள் கவிதை
  காட்சிகளை விளக்கிப்போகும் விதம் அருமை
  நாங்கள் அப்படியே உணர முடிகிறது
  மனப்புழுக்கத்தையும் வெய்யில் புழுக்கத்தையும்
  இணைத்துள்ள பாங்கு பாராட்டுக்குரியது
  நல்ல படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  சந்திரகௌரி சொன்னது…

  நன்றி ரமணி அவர்களே! இங்கு வெயிலையும் தாங்கமுடியாது. பனியையும் தாங்கமுடியாது. ஆனால் இன்று அடியோஅடியென்று அடிக்கிறது மழை. இயற்கையை என்னென்பேன். இங்கு சொல்வார்கள் ''Weather, Women. Work ஐ இவைகளை நம்பமுடியாது என்று.

  சந்திரகௌரி சொன்னது…

  இக்பால் செல்வன் அவர்களே, இயற்கையை இலகுவாக எடை போட்டுவிட்டீர்களா?

  கவி அழகன் சொன்னது…

  அருமையான கவிதை

  aruvi சொன்னது…

  «Õ¨Á

  aruvi சொன்னது…

  «Õ¨Á

  பிரணவன் சொன்னது…

  நிகழ்வுகளை படம்பிடித்திருக்கின்றது. . .அருமை

  vidivelli சொன்னது…

  அருமையான கவிதை
  வாழ்த்துக்கள்......

  எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவைப்பற்றி தொடர் ஓடுகிறது..
  ஓடிவாங்கோ

  பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்

  தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...