வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

ஞாயிறு, 26 ஜூன், 2011

புகுந்த நாட்டைப் போற்றித் தொழுவோம்


video
                                       video

             புகுந்து நாட்டைப் போற்றித் தொழுவோம் 
        
      
                                                            ''நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு. நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு இந்த வரிகளை உச்சரிக்காத எமது தலைமுறை உறவுகள் இருக்க முடியாது என்று நினைக்கின்றேன். பொருளுணர்ந்து பாடல் வழக்கம் பெறாத, வாழ்வு தானே நாம் வாழ்ந்து வந்தோம். உயிர்வாழ இடம் நாடி உறைந்த இடம் தானே, நாம் வாழும் நாடு. இன்று தரம் உயாந்து வளம் பெருக்கி, தரித்து நிலையூன்றி சுகதேகியாய்த் தடம்பதித்து உயர்ந்து நிற்கின்றோமேயானால், எம்முடைய ஊக்கம் மட்டும் காரணம் என்று யாரும் கூறினால் அது நன்றிமறந்த நலன்விரும்பிகளின் கூற்றே ஆகும். பிறந்தமண்ணில் வாழவழி தெரியாதவர்கள் வாழ வழிகண்ட இடம் நாம் வாழும் நாடு. கல்வி அறிவை முழுமையாகப் பெற முடியாதவர்கள் கூட முன்னேற்றம் காணும் நாடு, நாம் வாழும் நாடு. நோயுற்றுக் கலங்கி நிற்காது, நோயின் வலி தெரியாது வாழும் நாடு நாம் வாழும் நாடு. இதற்கு முதலில் நாம் வாழும் நாட்டிற்கு தலை வணங்குவோம். 
                                                     அனைத்து நலமும் ஒருபுறம் வைத்துவிட்டு, சுகநலத்தை மட்டும் விவேகத்துடன் நோக்கினால், இங்கு நோய் கண்டவுடன் மருத்துவம் அதன்பின் தான் பணம் பக்கம் பார்வை திரும்பும். நாம் பிறந்த மண்ணில் நோய்க்கான காரணம், அதற்கான விளக்கம் மருத்துவரிடம் வினவினால், ''நீங்கள் மருத்துவரா? நீங்களா வைத்தியம் பாhக்கப் போகின்றீர்கள்? என்னும் பாங்கில் மருத்துவரிடமிருந்து விளக்கம் பெறப்படும். ஆனால், இங்கோ நோயாளி, தான் பெற்றுக் கொண்ட நோய்க்கான பூரண விளக்கம் பெறுவதுடன் வந்த நோயைத் திருப்பி அனுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் சகல வைத்திய நடைமுறைகள் பற்றியும் பூரணவிளக்கம் பெற்றுவிடுவார். பணக்கார நோய் எம்மைப் பற்றிக் கொண்டால், பிறந்த மண்ணில் பணவசதியில்லாதவர்கள் சாகத்தான் வேண்டும். தாயாகும் பெண்ணைப் பெற்ற தாய் போல் பராமரிக்கும் தாதியரும், நோயாளியைப் பலவிதமான பரிசோதனைகள் செய்து குணப்படுத்த பரிசுத்தமான இதயத்துடன் வைத்தியர் மெற்கொள்ளும் நவீன ஆய்வுகூடப் பரிசோதனைகள் போன்றவற்றையும் மனிதநேய மருத்துவத் தன்மைகளையும் பண்பான இதயத்துடன் நாம் உற்று நோக்கினால், பண்பற்ற வார்த்தைகளால் இந்நாட்டைப் பழித்துப் பேச மனம் உட்படாது, என்னை இந்த நாடு எதற்காக இப்படிப் பராமரிக்க வேண்டும்? நான் இந்த நாட்டிற்கு என்ன நன்மை செய்து இங்கு வந்து குடியமர்ந்தேன்? குடியுரிமை பெற்றேன்? என்னும் வினாக்களை எமக்குள்ளே வினவிக்கொண்டால், எம்மை அறியாமலே, கையெடுத்து இந்நாட்டை வணங்க , எமது மனம் முற்படும்.
                                          எந்தத் தொழிலிலும் வந்த நாளிலிருந்து ஈடுபடாதவர்களாய் இருந்த போதும், பாரிய நோய் வாட்டிய போது எழுந்து நடக்க முடியாத வேதனையில் துடித்த போதும் கைகொடுத்து உதவி, நின்று நிமிர்ந்து ஓடி நடக்க வைக்கும் இந்த நாட்டு மருத்துவ உலகுக்கு நாம் தலை வணங்குவோம். வாழும் நாட்டிலிருந்து நாம் பெறும் வளங்களுக்காக அந்நாட்டை வழிபடுவோம்.
                                                       ஒரு எழுத்தாளன் வரிகளாவன, வாசகர், நேயர்கள் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் என் வரிகள் உங்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால், மகிழ்ச்சி கொள்வேன். 9 கருத்துகள்:

கவி அழகன் சொன்னது…

படித்தேன் ரசித்தேன்
என்மனதை பாதித்தது

சந்திரகௌரி சொன்னது…

Thanks Yathavan

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்ல பதிவு தான். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Ramani சொன்னது…

மனதை பாதிக்க வேண்டிய விஷயத்தை பாதிக்கும் படி
பதிவு செய்துள்ளீர்கள் பாதிக்காமல் என்னசெய்யும்?
அதிகம் பாதித்தது
நல்ல பதிவு(தலைப்பு புகுந்த என இருக்கலாமா)

பிரணவன் சொன்னது…

பெண்மையின் இலக்கணம் பிறந்த வீட்டை மறவாமலும், புகுந்த வீட்டின் பெறுமை பாராட்டுதலும். . . கருத்துக்கள் அருமை. . .

சந்ரு சொன்னது…

நல்ல பதிவு... பகிர்வுக்கு நன்றிகள்

kovaikkavi சொன்னது…

நல்ல சிந்தனை. வாழ்த்துகள்.

மாலதி சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

உயிரைத் துச்சமாக நினைக்கும் இளம் தலைமுறையினர்

                    தமிழ் தாய்மார் தம் கணவனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விடத் தம் மகன்மாருக்குக் கொடுக்கும் முக்க...