• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 29 ஜூன், 2011

  ஆடி வந்த வேளை


                           
            
          வாசச் சந்தனமோ!
          வடிவழகுப் பெட்டகமோ!
          தேடிப் பெற்றெடுத்த 
          தெய்வீகக் குலக்கொழுந்தோ!
          பத்து மாதம் அடைகாத்து
          பக்குவமாய் பெற்றெடுத்த
          பரிமளப் பஞ்சுமேனியோ!
          மூன்று மாதம் முகம் பார்த்து முறுவலித்தாள்.
          தேன் நிலவுச் சுகம் கொடுத்தாள்.
          தெவிட்டாத கனியமுதச் சுவை கொடுத்தாள்.
          கவியாக கனியாகக் காவியமாய்
          கரம் வந்த கிள்ளை களிப்புடன் தூங்கத் - தாய்
          தொட்டிலிலே மெத்தை இட்டாள்.
          தாலாட்டுத் தேன் கொடுத்தாள்.
          தன் உதிரப் பால் கொடுத்தாள் - அன்று
          அளவுக்கதிகமாய் வெயிலும் கொடுத்தாள் .
          அந்தோ பரிதாபம்!
          ஆடி வந்த வெயிலில்
          ஆசைக் குழந்தையை வாகனத்தில்
          அழகாய்க் கொண்டு சென்றாள் - தொட்டிலில்
          தூங்க வைத்த பிள்ளை நிரந்தரமாய்த் தூங்கிடவோ
          நடுவெயிலில் வாகனத்தைத் தரித்தாள்.
          நாடி வந்த வேலை கூடி வந்த வேளையிலே
          ஓடி வந்து பார்த்தாள் ஐயகோ!
          கட்டித் தங்கமது பெட்டியாம் வாகனத்துள் 
          கருகிக் கடைத் தேறியதோ
          ஆடிவெயிலின் அகோரப்பிடியில்
          அழகுக் குழந்தை பலியானதுவோ
          அழுதால் துடித்தாள்
          ஆண்டவன் காதுகளுக்கு 
          இது ஓர் அமுத மழையோ
          ஆடி வந்த வேளையிலே – அந்தத் தாயை
          நாடி வந்தது இந்த நாரசமோ

   உண்மைச் சம்பவம். இங்கு கவிதையாய் விரிந்துள்ளது.
                               
                                 

  8 கருத்துகள்:

  vizhivazhi சொன்னது…

  ungal tamil nadai azhaga ullathu thozhi..keep going

  வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

  படித்ததும் மனம் கலங்குது. கொடுமையான சம்பவம். வலிக்கும் கவிதை. வேண்டவே வேண்டாம் இதுபோல் மீண்டும்.

  Rathnavel சொன்னது…

  அழகு கவிதை.
  வேதனையாக இருக்கிறது.

  சிவகுமாரன் சொன்னது…

  நானும் இந்தச் சம்பவத்தைப் படித்து மனம் அதிர்ந்தேன். அஜாக்கிரதையால் வந்த வினை.
  மனதை உருக்கும் படி கவியாய் வடித்திருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள் .

  Ramani சொன்னது…

  தாய்மையின் மேன்மையை
  மிக அழகாக சொல்லிச் செல்லும் அழகில்
  அந்த உணர்வுடனே
  படித்துக்கொண்டு வந்ததால் திடுமென்று
  நீங்கள் பேயாட்டம் போட்ட விதி குறித்து
  எழுதியதும் கொஞ்சம் மனது திக்கு முக்காடிப்போனது
  உண்மையில் சம நிலை வர சிறிது நேரம் ஆனது
  நிகழ்வும் அதை நீங்கள் அழுத்தமாகச் சொல்லிச்
  சென்ற விதமும் படிப்பவர்களை நிச்சயம்
  அதிரச் செய்துதான் போகும்...
  மொழி லாவகம் உங்களுக்கு கை கூடி இருக்கிறது
  தொடர்ந்து பதிவுகள் தர வேண்டி வாழ்த்துக்களுடன்...

  சந்திரகௌரி சொன்னது…

  இவ்வாறு ஆங்காங்கே பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவை பலருக்குப் பாடமாக அமைகின்றன. இவற்றைத் தெரியப்படுத்துவது எழுத்தாளர் பாரிய பணி. அவற்றைப் பலரும் கவரும் வண்ணம் தரும்போது வாசகர் கவனம் எடுத்து வாழ்வது நிஜம் அல்லவா!

  மாலதி சொன்னது…

  கற்பனைக்கே
  உள்ளம்
  உருகிப்போகும்.
  உண்மை
  நிகழ்வென்றால்
  கண்ணீர்
  பெருகிவர
  உள்ளம் உருகிடவே
  உருக்குலைந்து
  நிற்க்கவைகிறது.
  கண்ணீரோடு ...

  சந்திரகௌரி சொன்னது…

  ஏதேதோ நடக்கிறது. வாழ்வின் அர்த்தங்கள் புரியவில்லை. சோகமோ, துயரமோ தாங்கித்தானே வாழவேண்டும். இதுவே வாழ்க்கை நன்றி மாலதி

  பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்

  தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...