• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 9 ஜூலை, 2011

  நெஞ்சம் மகிழும் நிதம்


     
    நெஞ்சம் மகிழும் நிதம் 
      
    

  தந்தனத்தோம் என்று மனம்
  தன்னந்தனியாக என்றும் 
  சிந்தை மகிழ்வதில்லையே – அது
  சொந்தம் பல கூடி
  இன்பம் பல கண்டு
  விந்தை உலகதனில் 
  நெஞ்சம் மிக மகிழுமே

  தன்னந்தனி எழுத்து
  ஒன்று சேர்ந்திடாமல்
  கன்னல் மொழி தோன்றுமா 
  இன்னல் காணும் மனம் 
  ஓன்று கூடி என்றும்
  நெஞ்சம் மகிழும் நிதமே

  பென்னம்பெரு உலகில்
  கண்ணில்காணும் பல 
  வண்ணக் காட்சிகளுமே
  கண்டு களித்திருக்க 
  நெஞ்சம் மகிழும் நிதமே

  மாலை நேரத் தண்மதியும்
  வானில் தோன்றும் தாரகையும் 
  துள்ளி ஓடும் புள்ளி மானும்
  தோகை விரிக்கும் கோல மயிலும்
  வெள்ளை நிறப் பசுவும் 
  கள்ளமில்லாப் பிள்ளைச் சிரிப்பும்
  காதில் கேட்கும் மழலை மொழியும் 
  கானம் இசைக்கும் குயிலும்
  சின்னஞ்சிறு புள் இனமும்
  சின்னக்கதை பேசும் சிட்டுக்குருவியும் 
  சிலுசிலுக்கும் நீரோடையும்
  காற்றில் ஆடும் கனிமரமும்
  வாட்டம் கொள்ளும் வேளையிலே 
  கண்டு கேட்டு இன்புற்று
  நெஞ்சம் மகிழும் நிதமே

  12 கருத்துகள்:

  1. மரபுக்கவிதை போல... நான் அந்த அளவு ஒர்த் இல்லீங்கோவ். அவ்வ்வ்வ்வ்வ்வ்

   பதிலளிநீக்கு
  2. அருமை அருமை
   படைப்பாளியின் குரலோடு
   படைப்பை ரசிப்பதில் உள்ள சுகம் அலாதியானது
   தங்கள் கவிதை அருமை
   தங்கள் குரலில் கேட்க" தேனோடு கலந்த
   தெள்ளமுது "என்ற வரிகள் ஞாபகம் வருகிறது
   மிகச் சிறப்பாக உச்சரிக்கிறீர்கள்
   முதல் பத்தியில் ஈற்றடியை இரண்டு முறை
   சொன்னதுபோல ஒவ்வொரு பத்தியின்
   ஈற்றடியையும் இரண்டுமுறை சொல்லி இருந்தால்
   இன்னும் சிறப்பாக இருக்குமோ எனத் தோன்றியது
   மனம் கவர்ந்த பதிவு
   தொடர வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  3. நன்றி ரமணி அவர்களே. நீங்கள் தரும் உற்சாகங்கள் மேலும் எழுத்திற்குச் சுவையூட்டும்

   பதிலளிநீக்கு
  4. முதல் மூன்று பந்திகளும் எனக்குப் பிடித்தது. வாழ்த்துகள் கௌசி!
   Vetha. Elangathilakam.
   http://www.kovaikkavi.wordpress.com

   பதிலளிநீக்கு
  5. //சின்னக்கதை பேசும் சிட்டுக்குருவியும்
   சிலுசிலுக்கும் நீரோடையும்
   காற்றில் ஆடும் கனிமரமும்
   வாட்டம் கொள்ளும் வேளையிலே
   கண்டு கேட்டு இன்புற்று
   நெஞ்சம் மகிழும் நிதமே//மரபுக்கவிதை போல...தொடர வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  6. அருமை... அருமை
   ...
   Reverie
   http://reverienreality.blogspot.com/
   இனி தமிழ் மெல்ல வாழும்

   பதிலளிநீக்கு
  7. //பென்னம்பெரு உலகில்
   கண்ணில்காணும் பல
   வண்ணக் காட்சிகளுமே
   கண்டு களித்திருக்க
   நெஞ்சம் மகிழும் நிதமே//நல்ல கவிதை.

   பதிலளிநீக்கு
  8. கண்டு கேட்டு இன்புற்று
   நெஞ்சம் மகிழும் நிதமே

   நிதம் நிதமே கண்டு கேட்டு மகிழ்ந்தேன்......
   rajeshnedveera
   http://maayaulagam-4u.blogspot.com

   பதிலளிநீக்கு
  9. நெஞ்சம் மகிழ்ந்தேன் , நன்று !!

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...