பருவமடைந்தார்


    Get this widget |     Track details  | eSnips Social DNA    

       
            ஒருமணிப்பொழுது கணனியில் உன் வயதுக்குப் போதுமானது. உன் மூளைக் கணனிக்கு வேலை கொடு. கொஞ்சம் நில்! எதற்காகத் தொலைக்காட்சியைப் போடுகின்றாய்? உன் உன்னிப்புக்  காட்சிகளை வரிவடிவில் அடுத்தவர் காட்சிக்கு விரித்தியம்பு. நில், நில், நில்! Mp3 Player இப்போதெதற்கு தும்பிக்கையான் புகழ் பாடி வானொலிக்கு அனுப்பி வை. Oh! mann was ist  ist denn losஅது செய்யாதே இது செய்யாதே. அப்படிச் செய் இப்படிச் செய். அம்மா! Ich kann das nicht machen. என்னால் செய்ய முடியாது. என்ன எதிர்த்துப் பேசுகின்றாயா? நாங்கள் எல்லாம் எப்படிப் பெற்றோருக்குக் கட்டுப்பட்டிருந்தோம். இப்போது நான் சொன்ன அவ்வளவும் செய்து முடிக்க வேண்டும். Nein முடியாது. அடம்பிடிக்கும் பருவம் 13. வன்முறையால் வழிக்குக் கொண்டுவர முடியாத வாலிபப் பருவம். அவதானம். அவதானம். பருவத்தின் மாற்றத்தில் பண்பான வார்த்தைகளும் கடுமையான சட்டமாய்த் தொனிக்கும். வேண்டாம் என்பதைச் செய்யத் தூண்டும். பிடிவாதம் பிடிக்கும் சமாதானம் சொல்லி சலிப்பை அடக்க அவதானம் தேவை. பாவம் உள்ளிருந்து ஓர் சுரப்பு ஓமோன் என்ற பெயருடன் உருவாகிக் கொண்டே இருக்கும். அது உடல் அமைப்பையும், உள வளர்ப்பையும், உரு மாற்றம் செய்யும். காரணம் இல்லாது எம் வாரிசுக்கள் எம்மைக் கலங்க வைக்கவில்லை. காரணம் புரிந்து நாம் கையாளப் பழக அவதானம் தேவை. 

      பெற்றோரைக் கட்டி அணைப்பர். ஒருவேளைக் கிட்ட நெருங்கவே மாட்டாது எட்ட நிற்பர். ஏனென்று புரிந்து கொள்ளும் பக்குவம் எமக்குத் தேவை. சதந்திரம் இல்லையென்று எகிறிக் குதிப்பர். தருவது போல் தந்து தடுப்பது தெரியாது தடுத்தல் வேண்டும். பாதுகாப்பைத் தவிர்க்க நினைப்பர். பாதுகாப்புத் தரத் துடிப்போம் யாமும். இங்கும் புரிந்து கொள்ளத் தயங்கி நிற்போம் யாம். துணிந்து செய்யத் தொடங்கும் போது என்ன துணிச்சல் என்று எடுத்தெறிந்து பேசுவோம். ஆர்வமாய்ப் பேச அருகில் வரும்போது தூரமாய்ச் சென்று வேலையென்று ஒதுங்கி விடுவோம். பேச்சுத் தொடர்பே இப்பருவத்தை எம்மோடணைக்கத் தகுந்த மருந்தென்று உணர்வதில்லை யாரும். தம்மைத் தாமே அழகுபடுத்தத் துடிக்கும் பருவம். அப்படியில்லையென்றால் மட்டுமே யாம் ஆராய வேண்டும். பாராட்டுப் புகழுக்கு அடிமையாகும். தன்னை விடுத்து அடுத்தவரைப் புகழும் பெற்றோரை வெறுக்கும். சற்றுச் சிந்தித்துப் பார்ப்போமா! தன்  அருகே வேறு ஒரு பெண்ணைப் புகழ்ந்து கொண்டிருக்கும் கணவனில் சந்தோஷம் தான் கொள்வாளா? மனைவி. தன் அருகே வேறு ஒரு ஆணைப் புகழ்ந்து கொண்டே இருக்கும் மனைவியில் நாட்டம் கொள்வானா, கணவன். இப்படி உங்கள் பிள்ளையின் பின் அடுத்தவர் பிள்ளைகளை நாளும் புகழ்ந்து கொண்டிருப்பதை விட்டு விட்டு, உங்கள் பிள்ளையை நாளொன்றுக்கு ஒரு தரமாவது புகழ்ந்து பாருங்கள். புரிந்து கொள்ளுவீர்கள். பருவமடைந்த பிள்ளைகள் ஊடாகப் பெற்றோர் பக்குவப்படுகின்றனர். பெற்றோர் என்பவர் யார்? பிள்ளை வளர்க்கும் பாங்கில் அநுபவம் பெற்றோரே. இங்கு உளவியலாளர் உத்தரவுக்குக் கட்டுப்படுவதா? இல்லை உள்ளம் போடும் கணிப்பீட்டு உதவியுடன் பெற்றோர் பதவி புரிவதா? அவதானம், அவதானம். இயந்திரங்களும் படைக்கப்பட்டு அது கக்கும் வாயுக்களையும் உடலேற்று அது செலுத்தும் கழிவுகள் சுரப்புக்களுக்கு ஏற்ப உடல் மனநிலையை மாற்றி நடமாடும் ஒரு உயிருள்ள 'ரொபோற்றோ'' யாம். யாரை யார் பழி சொல்ல முடியும்.

    ' உருவான உயிரொன்று உலகேறி நடமாட 
      பலமான பராமரிப்பின் பக்குவத்தைப் பழகிடுவோம்.''    

ஜேர்மனி வாழ் சிறார்கள் வாயிலிருந்து சிந்துகின்ற ஓரிரு வார்த்தைகள் அம்மொழியிலேயே வந்திருக்கின்றன) 


கருத்துகள்

கவி அழகன் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை சுவாரசியம்

எப்படி உங்களால முடிகிறது
மாலதி இவ்வாறு கூறியுள்ளார்…
இளமைபருவத்தை நல்லமுறையில் தொடங்க அல்லது நல்லமுறையில் இந்த சமுகத்திற்கு அர்பணிக்க ஒரு சிறந்த படைப்பு தொடர்க பாராட்டுகள்............
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
யாதவன் உங்களாலும் முடியும்
மாய உலகம் இவ்வாறு கூறியுள்ளார்…
பெற்றோர் என்பவர் யார்? பிள்ளை வளர்க்கும் பாங்கில் அநுபவம் பெற்றோரே

அற்புதம்
பிரணவன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல படைப்பு. . .
Rathnavel இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
nadaasiva இவ்வாறு கூறியுள்ளார்…
பிள்ளைகளின் பருவம் அறிந்து பழக வேண்டும், புலம் பெயர் பெற்றோருக்கான நல்ல பதிவு !! வரவேற்கிறேன் கௌசி .
thozhargal இவ்வாறு கூறியுள்ளார்…
சிறந்த பதிவு வாழ்த்துக்கள். . .
Ramani இவ்வாறு கூறியுள்ளார்…
தாய்மைப் பண்போடு
சமூக அக்கறையுள்ள ஒரு ஆராய்ச்சியாளரின் மனோ நிலையில்
வீட்டிலுள்ள ஒரு பெரியவரின் அக்கறையோடு
மிக அழகாக இந்தப் பதிவைச் செய்திருக்கிறீர்கள்
ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும்
ஆழ்மனத்தில் இருந்து வெளிவந்ததை
புரிந்து கொள்ள முடிகிறது
அதுவும் உங்கள் குரலில் கேட்கையில்
மேற்சொன்ன அனைத்தையுமே உணரவும் முடிகிறது
தரமான பதிவு
தங்கள் பதவினைத்
தொடர்பவன் என்கிற வகையில் உண்மையில்
நான் பெருமிதம் கொள்கிறேன்.வாழ்த்துக்கள்
Ramani இவ்வாறு கூறியுள்ளார்…
முத்தான மூன்று முடிச்சு என்ற தொடர் பதிவுக்கு
உங்களை அழைத்துள்ளேன்.
தொடர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
சிவகுமாரன் இவ்வாறு கூறியுள்ளார்…
பெற்றோருக்கான விளக்கம் அருமை. அடுத்த பிள்ளையோடு ஒப்பீடு செய்யக் கூடாது என்பதற்கான விளக்கம் சிந்திக்க வைத்தது.
அருமை .
Ramani இவ்வாறு கூறியுள்ளார்…
எனது முத்தான மூன்று முத்துக்கள் பதிவுக்கு
விரிவாகவும் மிகச் சரியாகவும் விமர்சனம் செய்தமைக்கு நன்றி
தங்கள் எழுத்திலும் தாங்கள் தெரிவு செய்கிற .பதிவுக்கான கருவும்
வித்தியாசமானதாகவும் சரியானதாகவும் இருக்கிறது
எனவே எல்லா விஷயங்கள் குறித்தும் ஒரு
தெளிவான பார்வையோடு இருக்கிறீர்கள்
என தங்கள் பதிவினைக் கொண்டே
தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது
என்வே தங்கள் முத்தான மூன்று முடிச்சுகள்
பதிவு அனைவருக்கும் பயன்படும் வகையில்
இருக்கும் என நம்புகிறேன்
தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து......
பதிவிட்ட விவரத்தை மட்டும் எனது
பதிவிற்கு தெரிவித்தால் என் பதிவைத் தொடர்பவர்கள்
தங்கள் பதிவைத் தொடர ஏதுவாக இருக்கும்
புலவர் சா இராமாநுசம் இவ்வாறு கூறியுள்ளார்…
வனப்பைக் கண்டேன் அங்கே-மன
வனப்பை விண்டீர் இங்கே
மனப்பை நிறைந்திட அறிவே-என்றும்
மறவா கருத்துகள் செறிவே

பெற்றவர் என்பவர் யாரே-பிள்ளை
பெற்றால் போறுமா கூறே
மற்றவர் போற்ற நீரே-அவரை
மாண்புற வளர்த்திடு வீரே

அருமையான பதிவு. நன்றி
புலவர் சா இராமாநுசம்
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
புலவர் இராமாநுசம் ஐயா!
கட்டியம் கூறும் கருத்துரை பதித்தீர்
வாழ்த்தும் தந்தீர்
நன்றி பற்பல
வைத்தியம் கற்க வேண்டும் - யாம்
பிள்ளை வளர்க்கும் வைத்தியம்
கற்க வேண்டும் யாம்
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ரமணி அவர்களே!
என் முடிச்சுக்கள் வரும்வரை பொறுத்திருங்கள். அதன் பின் முத்தானதா இல்லை சக்கையானதா என்று வெளிப்படுத்திவிடுங்கள்.
Reverie இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு...வாழ்த்துகள்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்