• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 6 ஆகஸ்ட், 2011

  தாரம் இழந்த தபுதாரன்


                                          

      Get this widget |     Track details  | eSnips Social DNA    

            

                                                              ஆட்டம் பாட்டுக் கொண்டாட்டம். வீட்டுச் சுவர்களில் பட்டுத் தெறித்த ஒலியின் துள்ளல் அலைஅலையாய் மிதந்து கொண்டிருந்தது. 'அப்பா! அங்கு என்னதான் செய்றீங்கள்? இஞ்ச வந்து கொஞ்சம் பாத்திரங்களைக் கழுவி வையுங்கோ''. அந்த அறையினுள் அவரால் என்னதான் செய்ய முடியும். எத்தனை வசதிகள் அந்த அறையினுள் இருந்தாலும் அவர் ஒருபுறம் ஒதுங்கிய வாழ்வுதானே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அன்று நண்பர்கள் புடைசூழ புட்டிகளின் பரிமாற்றத்தில் ஆளுக்கொரு பாடல் பாடி ஆனந்தத் திருவிழா எடுக்கும் போதெல்லாம் அடிக்கடி கேட்கும் வயளவந க்கு அடுப்படியில் நின்று அனலுக்கு அடிமையானவள், இன்று அனலுக்குள்ளேயே அஸ்தமனமாகிவிட்டாளே. அப்போதெல்லாம் கதிரேசுக்கு ஆத்திரமும் அகங்காரமும் அளவுக்கதிகமாகவே இருந்தது. ஏனென்றால், ஆட்டிப்படைக்கவும் அணைத்தெடுக்கவும், அளவுக்கு மீறி உரிமை கொண்டாடவும் பொறுமையின் பொக்கிஷம் அருகிலேயே இருந்தது. ஆனால், இன்று பொறுமையையும் அடக்கத்தையும் கண்ணுக்;குத் தெரியாமல் எங்கோ இருந்து அந்தப் பொக்கிஷம் அவருக்குப் போதித்துக் கொண்டிருக்கின்றது. இதுதான் சொல்வார்கள், கண்ணுக்குத் தெரியாததற்கு ஆற்றல் மிக அதிகம் என்று. மின்சாரம் கண்ணுக்குத் தெரியாதது. ஆற்றல் மிகுந்தது. காற்று கண்ணுக்குத் தெரியாதது. ஆற்றல் மிகுந்தது. சாய்மானைக் கதிரையில் சாய்ந்திருந்த கதிரேசுவை உலுப்பிவிட்டது, அவர் மகளின் அழைப்பு ஒலி. 
                 
                               தன்னுடைய மூன்றாவது காலைத் தொட்டு எடுத்தார், கதிரேசு. தன் மனைவியின் கரம் இணைந்த துணிவுடன். மெல்லமெல்லத் தத்தித்தத்திச் சென்றார். பாவித்துத் தள்ளிய பாத்திரங்கள் எல்லாம் கதிரேசு கரங்கள் பட்டுப் பளிச்சிட்டது. இவர் ஒரு பிரபலம்.   மனைவி மறைவில் இழந்தது மனபலம்;. தன் கற்பனைக் கண் இப்போது அரைக்குருடாகி விட்டது. காட்சிகள் தெளிவுபடத் தடங்கள் வீட்டினுள் வந்துவந்து போகின்றன. பாத்திரங்கள் கழுவித் துடைத்தவர் கண்களுக்கு உயிரற்ற கோழியொன்று இவர் உடை கழட்ட உத்தரவு தந்து உறைந்து ஒடுங்கிக் கிடந்தது. இப்போது இவர் கோழிக்கு உடை கழட்ட வேண்டும். உயிருள்ளவர்களுக்கு உயிரற்ற அவ்வுடல் அஸ்தனமாக வேண்டும். அவ்வுடலின் தென்பில் அவர்கள் புரதம் பெற வேண்டும். அதற்காக அக்கோழி இறுதிக்கிரியையாக கதிரேசு கரம்பட்டு பொரித்துப் பரிமாறப்படும். கண்பார்வை அரைவாசியாக படியிறங்கி இருந்தாலும் அவர் அகக்கண் 100 வீதம் இப்போது தெளிவாகத் தெரிகின்றது. புரிந்தோ புரியாமலோ வயதான தந்தையிடம் அன்பாய் வேலைவாங்கும் பிள்ளைகள் ஒரு நிமிடம் அவர் நிலையில் நின்று சிந்தித்தால் உடல்பலம், மனபலம் இழந்திருக்கும் உருவத்தின் வருத்தம் புரிந்துவிடும். 
         
                                                   தாரத்தின் மகிமையைத் தாரம் இழந்த நிலையிலேயே மனிதன் முழுமையாக உணர்கின்றான்.      வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு பெண் தேவை என்பார்கள். கைவிரல்களற்ற ஒருவர் வீட்டில்   இல்லாமல் இருப்பாரா? ஒரு மனையில் புகுந்த மனையாள், அம்மனையில் வாழ்வோர் அனைவரின் அனைத்திற்கும் ஒளியேற்றுவாள். அகஇருள் நீக்கி இன்ப ஒளி ஏற்றுவாள். தோழியாய், மனைவியாய், தாயாய், குருவாய், ஆலோசகராய் அனைத்துமாய் அவதாரம் எடுப்பவள் தான் தாரம். அத் தாரத்தை இழந்த தபுதாரன் தன் சக்தியில் தன் வெற்றியில் தன் இன்பத்தில் அரைப்பகுதியைத் தொலைத்தவன். அவன் ஏறுபோல் பீடுநடை போனதெங்கே. தாரத்தோடு அனைத்தும் போம் என்று புரியாமலா எழுதி வைத்தார்கள். 

            இச்சிறிய சம்பவம் தாரம் இழந்தோர் பற்றிச் சிந்திக்கச் செய்தது. சிந்தனையில் விழுந்தது. உங்கள் செவிகளில் நுழைந்தது. உங்கள் எண்ணங்கள் பரிமாற இடம்தந்தது. நன்றி.

  17 கருத்துகள்:

  1. எழுத்து நடையில் அந்தக்கால நடையின் பாதிப்பு தெரியுதே, கொஞ்சம் கவனிங்க.. சிம்ம்ப்பிளா , பேச்சு வழக்குலயே சொல்லலாமே/

   பதிலளிநீக்கு
  2. வாசிக்கும் போது மனசுக்கு வேதனையை இருக்கு

   பதிலளிநீக்கு
  3. நெஞ்சத்தை தொடும் உன்னத பதிவு தொடர்க .........

   பதிலளிநீக்கு
  4. கண்ணுக்குத் தெரியாததற்கு ஆற்றல் மிக அதிகம்//

   வலிநிறைந்த பகிர்வு.

   இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.

   பதிலளிநீக்கு
  5. அன்பின் சந்திரகௌரி,

   பதிவை படிக்கும்போதே மனதை என்னவோ செய்கிறது... திருமணம் முடித்து பெண்ணை மணையாளாக்கி தன் வீட்டில் கூட்டிக்கொண்டு வரும்போதே அவள் ஆணுக்கு மனபலம் தரும் தாயாகிறாள்... நேரத்துக்கு பார்த்து உணவூட்டி, மனபலம் குன்றும் சமயம் தோழியாய் ஆதரவாய் அணைத்து மனைவியாகவும் தன் கடமைகளை முடித்து இப்படி யாதுமாகி இருக்கும் மனைவியின் அருமை மனைவியின் மறைவின் போது தான் ஆண்கள் அறிய முடிகிறது... இது சத்தியம்....

   இருக்கும்போது அவர் அருமை தெரியாதவர் இல்லாமல் போனப்பின் அழுதாலும் திரும்பி வருவதில்லை... ஏனோ அழுகை வருகிறது...

   அருமையான விஷயங்கள் உள்ளடக்கிய பகிர்வு சந்திரகௌரி.... மனம் சோர்வடைந்து மீள வழியில்லாது அன்பை அணைப்பை நினைவுகளால் தத்தி தடவி கண்ணீரால் மறைக்க மட்டுமே முடியும் மறக்க முடியாது வாழ்ந்து முடித்த கணங்களை....

   அன்பு வாழ்த்துக்கள் சந்திரகௌரி மனசாத்மார்த்தமான பதிவு உங்களுடையது....

   பதிலளிநீக்கு
  6. தாரம் தான் ஆதாரம் என்பது எனக்கு நன்கு
   தெரியும்
   வலைவந்து வாழ்தினீர் நன்றி!

   புலவர் சா இராமாநுசம்

   பதிலளிநீக்கு
  7. தாரம் தான் ஆதாரம் என்பது எனக்கு நன்கு
   தெரியும்
   வலைவந்து வாழ்தினீர் நன்றி!

   புலவர் சா இராமாநுசம்

   பதிலளிநீக்கு
  8. என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  9. அன்பின் செந்தில்குமார்,
   நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எழுத்துநடை இருக்குமல்லவா! நீங்கள் விரும்பியபடியும் எழுதமுயற்சிக்கின்றேன். முதல்வாசகனாய்த் தடம்பதிக்கும் உங்கள் வேண்டுகோளுக்கும் செவிசாய்க்க வேண்டும் அல்லவா

   பதிலளிநீக்கு
  10. அன்பு மஞ்சுபாஷினி,
   நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆழமாக ஆக்கத்தினுள் நுழைந்து விரிவாக விடயங்களை எடுத்துரைக்கின்ற உங்கள் பண்புக்கு மிக்கநன்றி

   பதிலளிநீக்கு
  11. ராஜேஸ்வரி அவர்களே!
   வருகைக்கும் வாசித்த பயன் தந்தமைக்கும் நன்றி

   பதிலளிநீக்கு
  12. தங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் எடுத்துக்கொள்ளும்
   கருவும் அதை எழுதிச் செல்லும் விதமும்
   மிக மிக அருமை
   தாரத்தை இழந்த தபுதாரன்
   மனம் கலங்கச் செய்யும் பதிவாக மட்டுமல்ல
   ஒரு எச்சரிக்கைப் பதிவாகவும் உள்ளது
   தரமான பதிவு
   தங்கள் குரலில் கேட்க முடிந்தது கூடுதல் சிறப்பு
   தொடர்ந்து வருகிறோம்
   தொடர வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...