வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தியாகி

                   
'இரவும் பகலும் கண்விழித்து, இமையிரண்டும் தூங்காது விழித்திருந்து, வளர்த்தவளே! என் சுகமிழந்து நோய்வாங்கி சுடராய் ஏற்றிய உன் வாழ்வு சிறப்படைய மெழுகுதிரியாய் நான் இருப்பேன்''' இந்த வரிகள் சுமந்த வார்த்தைக்குள் வந்தமர்ந்த மெழுகுதிரியின் விளக்கம் காண மகள், தன் மூளை நரம்பின் வேகம் கூட்டினாள். உலகுக்கு ஒளி தரும் சூரியன், மின்குமிழ், மெழுகுதிரி இம்மூன்றின் பக்கமும் தன் பார்வையைச் செலுத்தினாள்.     
         
                      எங்கு கருத்தா இல்லாத கருவி எமது கண்களுக்குப் புலப்படுகிறது. தான்தோன்றீஸ்வரரானாலும் தோன்றியதற்கும் தோன்றுவித்ததற்கும் கருத்தா எங்கோ உள்ளார் என்று தானே தேடிக் கொண்டிருக்கின்றோம். கருத்தா இல்லாது எதுவும் காட்சிப்படுவதும் இல்லை, பயன்படுத்தப்படுவதுமில்லை. நம் தேவைக்கேற்பத் தேடிப்பெறுவோம். உலகுக்கெல்லாம் ஒளிதரும் சூரியன் பூமியில் பார்வை படும் பகுதியில் மாத்திரமே தன் ஒளியைத் தந்துதவுகின்றான். சூரியன் பார்வை படாத பகுதிகள் இருளாலே மூழ்கியிருக்கும். தானாய்த் தேடி ஒளி தரவுமில்லை, நாம் தேடிச் செல்லும் வேளையில் ஒளி தந்துதவுகின்றான். இங்கு வேண்டியவர்களுக்கே வேலைக்கதிர்கள் பயன்படும். இச்சூரியபகவானையும் மீறி நாளெல்லாம் தேவைப்படும் போதெல்லாம் ஒளி தந்து உதவிபுரிந்திடும் தோமஸ் அல்வாஎடிசன் கண்டுபிடிப்பு மின்குமிழும் ஒளி தேவைப்படும் போது மின்சாரம் ஏற்றப்படும் போதே ஒளி தந்துதவுகின்றது. அதை மீறி அழகழகாய்ப் பலவண்ணங்களில் வடிவங்களில் வார்க்கப்பட்டுத் தியாகி என்று பலரால் புகழ்ந்துரைக்கப்படும் மெழுகும், திரியும் இணைந்து மெழுகுதிரி உருகும் தன்மை பெற்றதனால் எழுத்தை ஆளுபவர்கள் வைத்த பெயர் தியாகி. அது தானாய் பிரகாசம் தரும் தன்மை பெற்றதல்ல. ஒட்சிசன் ஆட்சியும் நெருப்பின் உதவியும் ஒன்றாய் இணையும் போதே வேண்டியவர்களுக்கு விளக்காய் ஒளி தரும். அடுத்தவர் ஏற்றும் போதுதான் அழகாய் எரியும். ஒளி தந்து பெருமை சேர்க்கும். இல்லையேல், அழகாய் மட்டுமே இருக்கும். அதனால் அடுத்தவர் பயன் பெறச் சாத்தியமே இல்லை. 
     
                      சூழலில் இருப்பவர் சுகம் காணத் தன் சுகம் இழக்க ஒரு தியாகி கருதினாலும்  தன் சேவை என்ற தேவையைப் பிறர் ஏற்றுக் கொள்ளத் தேவையான பல காரணிகள் தேவை அல்லவா. உருவாக்கமே உருகலாய் இருக்கும் போது அவ்உருகலில் பல உருவாக்கங்கள் பெறுவதனால் அதை உருவாக்கியவரே சிறப்பாகின்றார். அவ்வுருகலுக்கும் துணை செய்பவரும் சிறப்பாகின்றார். அதில் உருகுபவர் உருகியே தான் ஆகவேண்டும். இது படைப்பின் தத்துவம். ஏந்தி நிற்கும் கரங்களுக்கே பிச்சை போடப்படும். அடுத்தவர்க்குத் தேவை ஏற்படும் போதுதான் தியாகமும் செய்ய முடியும். கொடுப்பவர் இருப்பாரானால் எடுப்பவரும் இங்கு முக்கியம் அல்லவா.
     
         மெல்லொளியில் புத்துணர்வின் தூண்டலே 
        தண்ணொளியில் கெடுமணம் துலைப்பவளே
        விண்ணவர் வேண்டுதலிற் குறுதுணையே 
        காரிருளின் கார்அகற்றும் காரிகையே 
        தேய்ந்தொ ளிதந்தத னால் 
        தியாகி யாய்த் திகழ்பவளே.
        தேடிடும் விடை காணத் 
        தேர்ந்தெ டுத்தேன் இவ்விடயமே15 கருத்துகள்:

ரெவெரி சொன்னது…

கொடுப்பவர் இருப்பாரானால் எடுப்பவரும் இங்கு முக்கியம் அல்லவா...
உண்மை....

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

மகேந்திரன் சொன்னது…

அழகு அழகு
விளக்கமும்
கவிதையும் விண்ணேற்றும் அழகு.

கவி அழகன் சொன்னது…

மேலோட்டமா வாசிச்சிட்டன் நாளைக்கு ஆறுதலா வாசிக்கிறேன்

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

நல்ல சிந்தனை ஓட்டம்!
அருமை!
புலவர் சா இராமாநுசம்

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

சிந்திக்க வேண்டிய கவிதை!

அருமை!

புலவர் சா இராமாநுசம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>> சூழலில் இருப்பவர் சுகம் காணத் தன் சுகம் இழக்க ஒரு தியாகி கருதினாலும் தன் சேவை என்ற தேவையைப் பிறர் ஏற்றுக் கொள்ளத் தேவையான பல காரணிகள் தேவை அல்லவா.

மனதைத்தொட்ட வரிகள் மேடம்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

// சூழலில் இருப்பவர் சுகம் காணத் தன் சுகம் இழக்க ஒரு தியாகி கருதினாலும் தன் சேவை என்ற தேவையைப் பிறர் ஏற்றுக் கொள்ளத் தேவையான பல காரணிகள் தேவை அல்லவா. உருவாக்கமே உருகலாய் இருக்கும் போது அவ்உருகலில் பல உருவாக்கங்கள் பெறுவதனால் அதை உருவாக்கியவரே சிறப்பாகின்றார். அவ்வுருகலுக்கும் துணை செய்பவரும் சிறப்பாகின்றார். அதில் உருகுபவர் உருகியே தான் ஆகவேண்டும். இது படைப்பின் தத்துவம். //

அருமையான வரிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

G.M Balasubramaniam சொன்னது…

எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று --எண்ணங்களை கடத்த எழுத்து. இரண்டு- ஒருவரின் மொழியாற்றலைக் காண்பிக்க எழுத்து.முதலாவதாக இருந்தால் எளிமை தேவை. இரண்டாவதாக இருந்தால் வாசிப்பவருக்கும் மொழியாற்றல் தேவை.

Ramani சொன்னது…

மிக உயர்ந்த விஷயத்தை உரத்துச் சிந்தித்து
மிக அழகாகப் படைக்கப் பட்ட பதிவு
அருமையிலும் அருமை
(கருத்தா என்பது கர்த்தா என இருக்கவேண்டும்
என நினைக்கிறேன்)
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani சொன்னது…

இவ்வருடத்தில் இம்மாதம்தான் மிகக்
குறைந்த பதிவுகள் தந்துள்ளர்ீகளோ?
தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து
பலர் இருக்கிறோம்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

சந்திரகௌரி சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் ரமணி அவர்களே! எமது நாட்டில் 6 கிழமைகளாக பாடசாலைகள் விடுமுறை. அதனால், நேரம் கிடைக்கின்ற போது மகளுடன் நேரத்தைச் செலவு செய்கின்றேன். எப்படியும் கடிகாரத்துடன் இணைந்து ஓட வேண்டியுள்ளது. உங்கள் அக்கறைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து ஆக்கங்களைத் தருவேன்.

சந்திரகௌரி சொன்னது…

அனைத்து வருகையாளர்களுக்கும் நன்றி. உங்கள் வாழ்த்துகளும் அறிவுரைகளும் என் வளர்ச்சிக்கு உறுதுணையாகின்றன.

பிரணவன் சொன்னது…

நல்ல படைப்பு. . .அருமை. . .

அப்பாதுரை சொன்னது…

மனித நேயம் அறியாதோர் வாழ்வில் இனிமையை உணர இயலாது. தனக்காக மட்டுமே வாழ்வோர் உலகைக் காணாமலே மறைந்து போவார்கள். நல்ல கட்டுரை.

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...