• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

  வாயில்லா ஜீவராசிகள் மௌனம் கலைகின்றன


  ( உருவகக்கதை )  அந்த நகரத்தின் ஓரத்தில் பச்சைப்பசேலென்று பசுமை படர்ந்திருந்தது அவ் வனம். அவ்வனத்தின் அருகே விளையாட்டு மைதானமொன்று அங்கு கோடைகாலப் பாடசாலைச் சுற்றுலாவை மேற்கொண்ட குதூகலத்துடன் விளையாடி மகிழும் பிள்ளைச் செல்வங்கள். சூரியனின் கதிர்கள் கண்ட பேரின்பத்தின் துள்ளலில் கையில் உருளும் பந்துடன் உல்லாசமாய் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மனிதவாடை மூக்கைத்துளைக்க அந்தப் பிஞ்சுகளின் குரலில் கவரப்பட்ட விலங்குகள் மெல்லென மரங்களின் இடையே ஒட்டி நின்று தமது சலசலப்பிற்கு அஞ்சித் தலைமறைவாகி விடுவார்களேயென்று நினைத்து சத்தமின்றி சின்னவர்கள் விளை ஆடலில் (வளரச் செய்யும் ஆட்டம் ) மதிமயங்கி நின்றனர்.
                                                   
                                              திடீரென 'மாடு! என்ற ஒரு சத்தம் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த மாடு தன் நாமம் பிரயோகப்படுத்தப்பட்ட சூழ்நிலையை உற்றுநோக்கியது. இரு குழுக்களாகப் பிரிந்த சிறுவர்கள் ஒரு குழுவிடம் பந்தைப் பறிகொடுத்த சிறுமியை வைத வார்த்தையே தன் சிறப்புப் பெயரென அறிந்து மனம் வருந்தியது அந்த மாடு. அடுத்த ஒரு நிமிடத்தில்

  'ஏய் குரங்கு! எதுக்கு இந்தக் கண்ணாடிப்புடையனிடம் பந்தை எறிந்தாய்?

  திடுக்கிட்ட பாம்பு ஒற்றுமையாய் நாம் இங்கு இணைந்திருக்கின்றோம் இந்த. அழகான மனிதர்கள் அதுவும் சிறுவர்கள் எதற்காக எங்களை இப்படி அநாவசியமாகத் திட்டுகிறார்கள். என்று நினைத்த போது அருகில் நின்ற குரங்கும் கண்களிலிருந்த கண்ணீரை வாய் மூடி வடித்தது. மீண்டும்

  'இந்தப் பன்றியை விளையாட்டில் சேர்க்கக் கூடாது. நன்றாய் வந்து வாய்த்ததே எங்கள் குழுவில் நா...ய்


              கவலையில் மனம் வருந்திய விலங்குகள். நான்கு திசைக்கும் சுற்றி வளைத்து சிறுவர்களைக் குழுமிக் கொண்டன. நடுநடுங்கிய சிறுவர்கள், அச்சத்துடன் சிலையாய் நின்றனர். நடுவே குதித்த மாடு, அம்மா.. என்று அழைத்தவண்ணம்

  'உங்களைப் போலவே பெற்றவளைப் பாசத்துடன் அம்மா என்றழைக்கும் நான், நீங்கள் கைப்பந்து கால்ப்பந்து உருட்டி விளையாட தேவையான நிறை உணவுப் பாலை உங்களுக்குத் தருகின்றேன். நான் உங்களுக்குக் கேவலமாய்த் தோன்றும் ஒரு பிராணியா? சொல்லுங்கள் பிள்ளைகளே. நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ வீர விளையாட்டு என்று சொல்லி, எங்களைத் துன்புறுத்துகின்றீர்கள். உங்களுக்கு உடனே இரும்புச்சத்து, புரதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எங்கள் வாழ்நாள் முடிவதற்குள்ளேயே அநியாயமாக எங்களைக் கொன்று உண்டு மகிழுகின்றீர்கள். ஏர் பூட்டி உழவு செய்கின்ற போது எங்களால், உங்கள் உணவுக்கு உதவி செய்ய முடிகிறதே என்று உழவுத் தொழிலுக்குத் துணையாக இருக்கின்றோம். என்றாவது ஒருநாள் உழவு செய்ய முடியாது என்று பகிஷ்கரித்திருக்கின்றோமா? உங்களுக்குத் தெரியுமா! நிலநடுக்கம் வரப் போகிறது, பெரும் வெள்ளம் வரப் போகிறது என்று முன்னமே அறிந்து நாம், எங்களைப் பாதுகாப்பது போல் உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம். இத்தனையும் செய்கின்ற போது எம்மை வாழ்த்திச் சொல்லா விட்டாலும் வசைச் சொல்லுக்கு எங்கள் பெயரை உச்சரிக்காதீர்கள்‘‘
   
  என்று மாடு சொல்லிக் கொண்டிருக்கும் போதே பொறுக்க முடியாத நாயும் குறுக்கிட்டு

  'வீட்டிற்குக் காவல், மோப்பத்திற்குத் துணை, காவல் நிலையத்தின் வீரன். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருள். ஏன்! இருதய நோயாளிக்கும் துணை என உங்கள் இனத்திற்குத் தொண்டுபுரியும் நான் உங்களுக்குகு; கேவலமா? என்று நாயார் தன் திறமைகளை நயமாய் உரைக்க

  இஸ்... என்ற சத்தத்துடன் அழகான படமெடுத்து வளைந்து வளைந்து ஆடித் தன் திறமைகளை வெளிக்காட்டிய பாம்பும்

  'என் தோலைப் பயன்படுத்தும் மனிதக் குழந்தைகளே! என்னைத் தீண்டியவரைத் தற்காப்புக்காகத் தீண்டுவேனே தவிர வேறு யாரையும் நான் வேண்டுமென்றே தீண்டியதில்லை. இந்தப் பெருந்தன்மை படைத்த என்னையும் உங்கள் வசைச் சொற்களுக்குள் அடக்கி விட்டீர்களே. உங்கள்  காலுக்குள் கிடப்பவன் நான், என்ன செய்வது மனதில் என் வார்த்தைகளைப் பதித்துக் கொள்ளுங்கள்.

  பாம்பு பதுங்கிக் கொள்ளப் பாய்ந்தது குரங்கு. தன் இரு கைகளாலும் நெஞ்சில் அடித்த வண்ணம் துள்ளித் துள்ளிப் பல சாகசங்கள் காட்டி பற்களைக் காட்டிச்சிரித்த வண்ணம்

  ``என் தலைமுறையே! உங்கள் மூதாதையர் யாரென்று உணரீரோ! இராமனுக்குத் துணைப்போனதும் எம்மினமே. என்பதை அறிவீரோ? என்றைக்கு நாம் உங்களைத் துன்புறுத்தினோம்? எங்கள் இனத்தின் வளர்ச்சியில் பூரித்துப் போயிருக்கும் எங்களை உங்கள் கோபத்தின் துணைச் சொல்லாய்ப் பயன்படுத்தி விடுகின்றீர்களே! உணர்ந்து கொள்ளுங்கள். இன்று முதல் எங்களைக் கேவலமாய் எண்ணும் உங்கள் அற்பப் புத்தியை பூண்டோடு அழித்துவிடுங்கள். டீலந டீலந என்று கூறி அகன்றன.

                                       தமிழில் மட்டுமல்ல. விலங்குகளிலே பாசமுள்ள ஜேர்மனியர் Blinde Kuh(குருட்டு மாடு) Schweine(பன்றி) Brillen Schlange (கண்ணாடிப்புடையன்) போன்ற பதங்களைக் கோபம் மிகும் போது பயன்படுத்துகின்றார்கள். மிருகங்களும் படைப்பின் ஒரு வடிவங்களே. அவற்றையும் ஆதரிப்போம். அன்புள்ளவர்களாக வாழ எமது சிறார்களுக்கு அறிவுரை கூறுவோம்.  13 கருத்துகள்:

  1. வாயில்லா ஜீவன்கள்
   வாய்திறப்பது அதிசயமே..
   திறந்தபின் அதைக் கேட்பது
   மிக இனிமையே....

   பதிலளிநீக்கு
  2. உங்கள் கதை படித்தேன், கேட்டேன், நல்ல முயற்சி. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்று சிறார்களுக்குப் போதிப்போம். சிலர் வையும் போது கூறும் வார்த்தைகள் காதால் கேட முடியாததாக இருக்கிறது.

   பதிலளிநீக்கு
  3. மிக அருமையான ஒரு அறிவுரை கதை.....

   அதையே உங்கள் குரலிலும் குழந்தை மெனூஷா குரலிலும் கேட்டது இன்னும் சிறப்பு.....

   உண்மையே.....

   மிருகங்கள் மனிதரை உதாரணம் சொல்லி தன் இனத்தை கேவலப்படுத்தவில்லை...

   ஆனால் ஆறறிவுள்ள மனிதர்களாகிய நாம் தான் இப்படிப்பட்ட செயல்களை செய்கிறோம்...

   மிக அருமையான தலைப்பு சந்திரகௌரி.....

   உங்கள் தமிழ் உச்சரிப்பு தித்திப்பு.... அருமையான அழகிய தமிழ் உச்சரிப்பை கேட்டேன்பா....

   என் அன்பு வாழ்த்துகள்பா அருமையான படைப்புக்கு...

   பதிலளிநீக்கு
  4. நிச்சயமாக அவற்றிற்கு மட்டும் நாம் பேசும் மொழி தெரிந்திருந்தால், பெரிய இசைக்கச்சேரியே வைக்கலாம். அந்த ஒரு ஆக்கமும் செய்திருக்கின்றேன். வருகின்ற வாரங்களில் தருகின்றேன்.

   பதிலளிநீக்கு
  5. மஞ்சுபாஷிணி! உங்கள் வாழ்த்தும் தித்திப்பே

   பதிலளிநீக்கு
  6. இனிமை....
   இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
   ரெவெரி...

   பதிலளிநீக்கு
  7. நன்றி உங்களுக்கும் என் வாழ்த்துகள்

   பதிலளிநீக்கு
  8. அர்த்தமுள்ள உருவகக்கதையைப் படைத்து
   அதை மிக அழகாக தங்கள் குரலில் கேட்டு
   மகிழச் செய்த தங்களுக்கும்
   மிக அழகாக மிருகங்களின் குரலில் பேசி அசத்திய
   தங்கள் அன்பு மகள் மெனுஷாவிற்கும்
   என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
   மனம் கவர்ந்த தரமான பதிவு
   தொடர வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  9. சி.பி.செந்தில்குமார்//


   வருகைக்கும் பதிவுக்கும் வாழ்த்துகள்

   பதிலளிநீக்கு
  10. Ramani //

   எனதும் எனது மகளின் நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...