வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

மாற்றங்கள்கல்லுங் கத்தியாய் வாளும் வான்குண்டாய்
மனிதன் கண்டது மாற்றம்
நடையாய் நடந்தின்று நாடு கடந்து
படையாய் தொடர்வது பறக்கும் மாற்றம்
மாற்றங்கள் தொடர்கிறது உலகில் - மனிதன்
மனமாற்றம் அடையத் துடித்தாலும்
அழியவில்லை ஆரம்ப ஆச்சாரம்
துடிப்புடன் சொல்பவரும் சொந்தத்தில் மாற்றமில்லை
எடுப்புடன் வருபவரும் பழைமையை எடுத்தெறிய மனமில்லை
மாற்றங்கள் காண வேண்டும் - ஐயோ
மாற்றங்கள் காண வேண்டும் யாம்
புத்தி சொல்லப் போபவரை புரிந்துணர வேண்டும் - பழம்
புத்தியைக் கத்திபோல் வெட்ட வேண்டும்
பூவாய் மணக்க வேண்டும் மாற்றம்
இசையாய் இனிக்க வேண்டும் மாற்றம்
இல்லத்தில் இருந்து உள்ளப் படுக்கையில்
உறைய வேண்டும் மன மாற்றம்
நல்லதைத் தேடி நாம் வாழப் பழக வேண்டும்
செல்லும் இடமெல்லாம் சிந்தனை தேடவேண்டும்
நாலுபேரோடு நாமும் பழகி நல்லவராய் நாம் வாழ
மாற்றங்கள் காண வேண்டும் - ஐயோ
மாற்றங்கள் காண வேண்டும் யாம்இக் கவிதை முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது.

30 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தங்களின் இந்த ஆதங்கக்கவிதை அனைவரின் மனதையும் மாற்றத்தான் போகிறது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

சம்பத்குமார் சொன்னது…

//நல்லதைத் தேடி நாம் வாழப் பழக வேண்டும்
செல்லும் இடமெல்லாம் சிந்தனை தேடவேண்டும்
நாலுபேரோடு நாமும் பழகி நல்லவராய் நாம் வாழ
மாற்றங்கள் காண வேண்டும் - ஐயோ
மாற்றங்கள் காண வேண்டும் யாம்//

முதல் வருகை

சிந்திக்கத் தூண்டிய வரிகள்

மீண்டும் வரத்தூண்டிய வரிகள்

மஞ்சுபாஷிணி சொன்னது…

மாற்றங்கள் நல்லமுறையாக எனும்போது அதை வரவேற்பதில் தப்பில்லை....

ஆனால் மாற்றங்கள் எத்தனை கண்டாலும் ஆச்சாரம் பார்ப்பது மட்டும் இன்னும் அப்படியே பின் தங்கி இருப்பதை மிக அழகான வரிகளில் சொல்லி இருக்கீங்க சந்திரகௌரி...

மாற்றங்கள் நம்மை நல்ல நிலையில் கொண்டு செல்லும்படியாக இருக்கவேண்டும் என்றும்....

இனிய இசையாக மனம் கவரும்படி இருக்கவேண்டுமென்றும்....

மனதை நிறைக்கும் பூ மணம் கமழும்படி இருக்கவேண்டுமென்றும்....

மென்மை மென்மை மென்மை....
வரிகளில் எல்லாம் மல்லிகைப்பூ வருடும் மென்மை....

இறகாய் வருடும் மென்மை.....

அத்தனை அழகாய் வரிகளில் கொண்டுவந்து....
கவிதையின் தாக்கத்தில் மாற்றமில்லாது அதே அற்புதம் கொண்டு வந்த என் அன்புத்தோழி சந்திரகௌரிக்கு என் அன்பு வாழ்த்துகள்....

மஞ்சுபாஷிணி சொன்னது…

அருமையான கருத்துகள் நிறைந்த கவிதை முத்துக்கமலம் இணையத்தில் வெளிவந்ததற்கு என் அன்பு வாழ்த்துகள்பா...

பிரணவன் சொன்னது…

நல்ல கவிதை. . .

மதுரை சரவணன் சொன்னது…

kavithai thanthathu maarram.. vaalththukkal

Ramani சொன்னது…

மாறுதல் ஒன்றே மாறாத விதி என்பார்கள்
அதை அறிந்தும் கூட மாறாது ஜடமாய் இருக்கும்
பாலாயிரக் கணக்கோருக்கான இந்த அறை கூவல் கூட
காலத்தின் கட்டாயமே.அதை சிந்தித்து
அழகிய வார்த்தை மலர்களைக் கொய்து
சந்தமணம் பூசித் தந்தமைக்கு நன்றி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
( தாங்கள் தமிழ் மணத்தில் இணைந்து கொள்ளலாமே
தங்கள் சிறந்த பதிவுகள் அதிகமானவர்களைப்
போய்ச் சேர ஏதுவாகுமே )

மகேந்திரன் சொன்னது…

மாற்றங்கள் விளையும் காலம் வரும் சகோதரி...

மாற்றங்கள் ஒன்றே என்றும் மாற்றமில்லாதது.

Rathnavel சொன்னது…

செல்லும் இடமெல்லாம் சிந்தனை தேடவேண்டும்
நாலுபேரோடு நாமும் பழகி நல்லவராய் நாம் வாழ
மாற்றங்கள் காண வேண்டும் - ஐயோ
மாற்றங்கள் காண வேண்டும் யாம்

அருமையான வரிகள்.
அழகு கவிதை.
வாழ்த்துக்கள் அம்மா.

ரெவெரி சொன்னது…

மனமாற்ற கவிதை நல்லாயிருக்கு சகோதரி....சிறப்பாய் இருந்தது...ரெவெரி

சந்திரகௌரி சொன்னது…

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது//


நன்றி உங்கள் வாழ்த்துப்போல் அமையவேண்டும்.

சந்திரகௌரி சொன்னது…

சம்பத்குமார் சொன்னது


வருக சம்பத் அவர்களே! தொடரும் வருகையில் என் எழுத்துக்கள் பொலிவுறட்டும். நன்றி

சந்திரகௌரி சொன்னது…

மஞ்சுபாஷிணி//

சிலருடைய எழுத்துக்களில் மனம் வேதனைப்படும். மாற்றம் தேவையில்லை என எண்ணத் தோன்றும். தடியால் அடித்துப் புரியவைப்பதில் புண்ணியமில்லை அல்லவா! உங்கள் வாழ்த்தில் மட்டும் மாற்றம் தேவையில்லை என்று நினைக்கின்றேன். நல்லதையே நினைக்க வேண்டும். உங்கள் வரிகளிலும் பூமணம் கமழுகின்றது. இறகாய் வருடும் மென்மை ஏற்படுகின்றது. அதனால், மஞ்சுபாஷினி எழுத்துலகில் பிரகாசிக்க வாழ்த்துகள்.

சந்திரகௌரி சொன்னது…

ரெவெரி//

வாருங்கள் ரெவரி. வந்து கருத்திட்டமைக்கு நன்றி

சந்திரகௌரி சொன்னது…

Rathnavel//

நன்றி ஐயா! தவறாது வந்து என் ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுத்து வாழ்த்தும் உங்கள் பண்பிற்கு வாழ்த்துகள்

சந்திரகௌரி சொன்னது…

மகேந்திரன்//

உண்மைதான் சகோதரா! பழைமை வாதிகளின் தேவையற்ற மூடநம்பிக்கைகள், இளஞ்சந்ததியினரையும் ஆட்டிப்படைக்கின்றதே. அப்போதுதான் மனம் வெம்பி வெடிக்கின்றது.வருகைக்கு நன்றி. வாழ்த்தும் கூடவருகின்றது.

சந்திரகௌரி சொன்னது…

Ramani //

ஆம். முதலில் சேர்ந்திருந்தேன். புதிய ரெம்லேட் மாற்றியபோது ஆக்கங்கள் போய்ச் சேரவில்லை எனஇறு நினைக்கின்றேன். முயற்சி செய்கின்றேன். உங்கள் கரிசனைக்கு மிக்கநன்றி

சந்திரகௌரி சொன்னது…

மதுரை சரவணன் //

வருகைக்கும் கருத்திடலுக்கும் இணைந்தே நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

சந்திரகௌரி சொன்னது…

பிரணவன் //

நன்றி சகோதரா!

சந்திரகௌரி சொன்னது…

Natarajan wrote "//

புத்தி சொல்லப் போபவரை புரிந்துணர வேண்டும் - பழம் புத்தியைக் கத்திபோல் வெட்ட வேண்டும் ......................................... நல்லதைத் தேடி நாம் வாழப் பழக வேண்டும் செல்லும் இடமெல்லாம் சிந்தனை தேடவேண்டும் நாலுபேரோடு நாமும் பழகி நல்லவராய் நாம் வாழ மாற்றங்கள் காண வேண்டும் - ஐயோ மாற்றங்கள் காண வேண்டும் யாம்// மாற்றங்களின் அடைமழையில் நனைந்தால் அத்வைதம் அடையலாம்..அழகு..பகிர்வுக்கு நன்றி கௌரி அவர்களே!!"

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை நல்லாருக்கு மேடம். ஒரு ஆலோசனை,.

>>இக் கவிதை முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது.

நான் எழுதிய இக் கவிதை முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது.

என்பதே சரி.. சிலர் வேறு யாருடைய படைப்பையோ நீங்க போட்டிருக்கீங்கன்னு நினைக்க வாய்ப்பு இருக்கு

மாலதி சொன்னது…

உங்களின் மாற்றம் வேண்டிய சிறந்த படைப்பு கண்டேன் உளம் கனிந்த பாராட்டுகள் இங்கு மாற்றம் வந்தால் தான் நல்லன விரைந்து வரும் மாறுபட்ட சிந்தனை எல்லோரும் பின்பற்றட்டும் வணக்கத்துடன்.....

சந்திரகௌரி சொன்னது…

சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள் செந்தில்குமார். ஆனால், நான் என்னுடைய தளத்தில் என்னுடைய படைப்பைத் தவிர வேறு யாருடைய படைப்பையும் போடுவதில்லை. அதனால், நான் அதைப்பற்றி நினைத்துப் பார்க்கவில்லை. நீங்கள் கூறியபோதுதான் நினைத்துப் பார்க்கின்றேன். உங்கள் ஆலோசனைக்கு மிக்கநன்றி. என்றும் என் ஆக்கங்களை ரசித்து பின்னூட்டம் இடும் உங்களுக்கு என்றும் என் நன்றி உரித்தாக இருக்கும்.

சந்திரகௌரி சொன்னது…

நிச்சயமாக மாலதி. நன்றி

கவி அழகன் சொன்னது…

மாற்றம் சம்மந்தமா மாற்று கருத்து இல்லாத மனத மற்றவைக்கும் கவிதை அம்மா ரசித்தேன்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பூவாய் மணக்க வேண்டும் மாற்றம்
இசையாய் இனிக்க வேண்டும் மாற்றம்
இல்லத்தில் இருந்து உள்ளப் படுக்கையில்
உறைய வேண்டும் மன மாற்றம்./

மாற்றம் ஒன்றே மாறாதது -மாற்றம் இனிமையாய் மனம் கவ்ர்ந்த பகிர்வுக்குப் பாரட்டுக்கள்

அம்பாளடியாள் சொன்னது…

நல்லதைத் தேடி நாம் வாழப் பழக வேண்டும்
செல்லும் இடமெல்லாம் சிந்தனை தேடவேண்டும்
நாலுபேரோடு நாமும் பழகி நல்லவராய் நாம் வாழ
மாற்றங்கள் காண வேண்டும் - ஐயோ
மாற்றங்கள் காண வேண்டும் யாம்

வணக்கம் அம்மா நிட்சயம் நீங்கள் எதிர்பார்க்கும்
இந்த மாற்றங்கள் விரைவாக மலர வேண்டும் அதிலும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான புது மாற்றம் மலர்ந்துதான் ஆகவேண்டும் .மிக்க நன்றி நல்உணர்வோடு வடித்த புரட்சிக் கவிதைக்கு வாழ்த்துக்கள் ....

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

மாற்றம் ஒன்றே மாற்றமிலாதவை-மன
மாற்றம் ஒன்றே காலத்தின்தேவை
ஏற்றம் பெற்றிட எதிர்வரும்காலம்-இதை
ஏற்றே தீரும் இப்பெருஞாலம்
நன்று! நன்றி!

காணேன் வலைப்பக்கம்
புலவர் சாஇராமாநுசம்

cineikons சொன்னது…

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

dafodil's valley சொன்னது…

மாற்றம் பற்றி அழகான எழுதிய கவிதை அற்புதம்!

பகிர்ந்தமைக்கு நன்றி!

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...