• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 20 செப்டம்பர், 2011

  மது அருந்திய மாது

                                                                           
      Get this widget |     Track details  | eSnips Social DNA    

  அவள் அடக்கமாகத்தான் இருந்தாள், அவனின் ஆசைக்கு அடிபணிய மறுத்தபோது. அவள் கற்புக்கரசியாகவே இருந்தாள், கணவன் கட்டளைக்குக் கட்டுப்பட மறுத்தபோது. கணவன் என்ன கடவுளா? மனைவி கொள்கையைக் கலைத்து எறிய. மனத்திறம் இல்லா மங்கை மதித்திறம் மாயமாய்ப் போம். இந்த மதிவதனி கலங்கப்பட்டாள். கணவன் கைகழுவி விட்டான். காரணம் அவள் அவளாக இல்லாத காலப்பொழுது. 
    
                                       நண்பர்கள் கூடிக் குடித்துக் கும்மாளம் அடிக்க மதிவதனியை அவள் கணவன் கூடவே கூட்டுச் சேர்த்தான்;. வயிற்றைக் குமட்டும் வாடை, அவளைத் திக்குமுக்காட வைத்தது. அவள் மூக்கிற்கு அவள் விரல்கள் தடைபோட்டன, அவன் இன்பத்திற்கும் களியாட்டத்திற்கும் அவள் கைப்பொம்மை.

                                                      முதல்முதலாகத்தான் அருந்தினாள். தன்னை முழுவதுமாய் இழந்தாள். அந்த மது இரத்தநாளங்களில் தன் கைவண்ணத்தைக் காட்டியது அதை அருந்திய மாதுக்கு. உள்ளே சென்ற போதை, உலகமே சுற்றுவது போன்ற உபாதையை ஏற்படுத்தியது. தட்டுத்தடுமாறித் தன் படுக்கையில் வந்து விழுந்தாள். கணவனோ மது போதையில் வரவேற்பறைத் தரையில் மல்லாந்து கிடந்தான். கட்டிலில் கிடந்தவன் ஸ்பரிசம் அவள் உள் உணர்வுகளுக்குத் தூபம் போட்டது. தன்னை மறந்தாள், தன் மானம் கெட்டாள், தன் கணவன் தோழன் போதையில் தனை இழந்தாள் நங்கை. கணவன் கண்கள் படம் பிடித்த காட்சியின் சாட்சியால், கணவனால் கைவிடப்பட்டாள். காரணமானவனோ கைவிரித்தான். 

  இன்று மதிவதனி மதி இழந்த காரணத்தால் கலங்கப் பட்டஞ்சுமந்த பாவையானாள்.
                    
                                இவை அனைத்தும் ஏன்? ஐரோப்பிய வாழ்வில் அறிவுக்கு ஆயிரம் இருக்க, இந்த அசிங்கமான வாழ்க்கை முறைக்குத்தம்மை அடிமைகளாக்குவதற்கோ விமானம் ஏறி இங்கே எம்மினம் வந்தடைந்தது. பெண்தவறி விழுந்தாலோ, தள்ளி விழுத்தப்பட்டாலோ பழிபாவங்கள் அனைத்தையும் அவளே சுமக்கவேண்டியவளாகின்றாள். தொல்பழங்காலத்தில் வரன்முறையற்ற உறவு இருந்திருக்கலாம். விலங்குகளைப் பார்த்து பழகிய மாந்தரினம் அவற்றைப் போல வாழ்ந்திருக்கலாம். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக பண்பட்ட கலாச்சாரத்தில் சீர்பெற்றுச் சிறப்புப் பெற்று வாழும் இனம் தமிழ் இனம். இன்றும் ஐரோப்பியரால் போற்றிப் புகழப்படும் ஒரு கலாச்சாரம் எம்முடையது. அதைக் கலங்கப்படுத்தவே இவ்வாhறான காடடுமிராண்டிகள் புல்லுருவிகளாய்ப் புறப்பட்டுப் புகலிடத்தில் நமது புனிதத்தைப் புதைக்கின்றார்கள்.

  பெண்ணினமே! நீ என்றும் உன் மதித்திறத்தை, மனத்திறத்தை இழந்து விடாதே.

  17 கருத்துகள்:

  1. வழுக்கும் பாதைகளில் நிதானம் தேவை, மதியின் கூர்மைகள் விதியின் கீறல்களை தடுக்க வேண்டும். புகலிட புனிதத்தைக் கெடுக்கும் புல்லுருவிகளை பிடுங்கி எறிய வேண்டும் !!!

   பதிலளிநீக்கு
  2. மது மாது எனச் சீரழிந்தான் மணவாளன்
   என்றுபார்த்தும் கேட்டும் அறிந்து கொள்வதுண்டு
   உப்படி மாதே மதுவால் சீரழிந்த நிலை கண்டு
   மன் வருந்தியது
   நல்ல படிப்பினைத் தரும் பதிவு
   புலவர் சா இராமாநுசம்

   பதிலளிநீக்கு
  3. ஆண்களுக்கும் இது பொருந்தும் தானே சகோதரி...மது...போதை பொருட்கள் செய்யும் வேலை தான் இது...நல்ல பதிவு சகோதரி...

   பதிலளிநீக்கு
  4. உண்மையை ஓபனாக பேசினால் சில பெண்ணியவாதிகள் பொங்குவார்களே

   பதிலளிநீக்கு
  5. nadaasiva சொன்னது//

   உண்மையை வெளிப்படுத்தினால் சமூக விரோதியாகி விடுவோம் இல்லையா? இருந்தாலும் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் இருக்க மனம் என்னவோ தயங்குவதாக இல்லை. உங்கள் வருகைக்கு நன்றி

   பதிலளிநீக்கு
  6. புலவர் சா இராமாநுசம் சொன்னது//

   மணவாளன் தானருந்துவது மட்டுமல்லாமல் தன்னவளையும் அருந்தத் தூண்டுவதுதான் கொடுமை. அக்கொடுமைக்குள் அகப்பட்டவளே. குற்றவாளி ஆகின்றாள். இதைத்தான் சொல்கின்றார்கள். எய்தவன் இருக்க அம்மை நோவது என்று. வருகைக்கு நன்றி ஐயா.

   பதிலளிநீக்கு
  7. ரெவெரி சொன்னது//

   ஆமாம். உடலுக்குள்ளே புகுந்துவிட்டுhல், மனிதன் மூளை தன் கட்டுப்பாடுகளை மீறி செயல்படத் தொடங்குகின்றது. இதை அறிந்தும் பலர் அதில் மயங்கிக் கிடப்பதுதான் மாயம். நன்றி ரெவரி

   பதிலளிநீக்கு
  8. DrPKandaswamyPhD சொன்னது//

   நன்றி ஐயா! நீங்கள் சொல்லும் செய்திகள் இவற்றுக்குக் காரணங்களாகின்றன. வலைக்கு வந்தமைக்கு நன்றி. உங்கள் வலையையும் நேசிக்கின்றேன். எனக்கு நன்றாகப் பிடித்திருக்கின்றது.

   பதிலளிநீக்கு
  9. சோதிடம்’’ சதீஷ்குமார் சொன்னது//

   சரியாகச் சொன்னீர்கள். என்னுடைய அடங்கிடுமா பெண்வர்க்கம் என்னும் கவிதை நீங்கள் வாசிக்கவில்லை போலும். தவறுகளைச் சுட்டிக்காட்டினால், என்னுடைய வலை பிடிக்கவில்லை என்றும், விளங்கவில்லை என்றும், வித்தவத்தைக் காட்டுகின்றேன் என்றும் பின்னூட்டங்கள் வரும். என்னசெய்வது மரபணுக்களின் தொழிற்பாட்டை மாற்றியமைக்க முடியுமா? அதற்காக நான் எழுத எடுத்த நோக்கத்திலிருந்து விடுபடப் போவதில்லை. நன்றி சதீஷ் நீண்ட நாள்களின் பின் வந்திருக்கின்றீர்கள்.

   பதிலளிநீக்கு
  10. அனைத்து தீமைகளுக்கும் ஆணிவேர் மது என்பது
   மிகச் சரியான வாசகம்தான்
   இதை அறியாது அதன் மயக்கத்தில் மூழ்கிய ஆடவன்
   பெண்டிரை அதற்கு உட்படுத்துதலும்
   அதன் காரணமாக விளைகின்ற விளைவுகளுக்கு
   அவளை பலிகடா ஆக்குதலும் எந்த விதத்தில் ஞாயம்
   தனிமனித ஒழுக்கமாயினும் சமூக ஒழுக்கமாயினும்
   இருபாலருக்கும் சமமானதே
   அந்த நிலை வருதலுக்காக அனைவரும் முயல்வோம்
   அதுவரை பெண்கள் சுய மரியாதையையும்
   சுய கௌரவம் பேணலும் மிக மிக அவசியமே
   தெளிவு ஊட்டிப் போகும் தரமான பதிவு
   தொடர வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  11. குடிப்பவர்களை ஒரு மனித ஜென்மமாகவே என்னால் மதிக்க முடிவதில்லை....

   அதற்கு அவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் உண்டாக்கிக்கொள்ள முடிகிறது....

   ஆண்கள் தான் இப்படி என்று பார்த்தால் பெண்ணும் இப்படி ஒரு கொடிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாமா என்று நெருப்பை சாட்டையாக விசிறி அடித்தது போல் இருந்தது உங்கள் தீட்சண்யமான எழுத்துகள்....

   பெண்....
   கம்பீரமானவள்....
   சக்தி ரூபம்....
   சாந்த ஸ்வரூபி.....
   அன்பானவள்.....
   அடக்கமானவள்....
   ஒழுக்கமானவள்...
   உயிரை உலகுக்கு அறிமுகப்படுத்தும் தேவதை.....
   விஸ்வரூபம் எடுத்து எல்லோரையும் அன்பால் அணைப்பவள்....

   பெண் என்றால் இப்படி தான் எல்லோருமே பார்க்க இஷ்டப்படுவது....

   ஆனால் கலாச்சார சீர் கெடுவதை மிக தத்ரூபமாக இந்த பகிர்வின் மூலம் உணர்த்தி இருக்கீங்க சந்திரகௌரி.....கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இப்படி தன்னையும் கெடுத்துக்கொண்டு வாழ்க்கையை கெடுத்துக்கொண்டு எல்லாம் இழந்த நிலையில் :(

   மன வேதனையுடன் வாசித்தேன்.

   அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு...

   பதிலளிநீக்கு
  12. ஆண் பெண் யாராயினும் மது என்ற போதைப்பொருளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். அது நம்மையறியாமலேயே தவறுகள் செய்யத் தூண்டிடும். த்வறு நடந்த பின் வருந்துவதை விட
   முன்னெச்சரிக்கையாக இருப்பதே மேல். நல்ல பதிவுக்கு பாராட்டுக்கள்.

   பெண்களால் மட்டுமே நம் கலாச்சாரத்தையும், பாரம்பர்யத்தையும் காத்து, ஆண்களை அன்பினால் திருத்தி ந்ல்லவனாக மாற்ற முடியும். அந்த மாபெரும் சக்தி அவர்களிடம் மட்டுமே உள்ளது.

   பதிலளிநீக்கு
  13. அட நாசம போவாளே
   குடிச்சிட்டு தாறு மாற நடக்கிறாலே
   படுபாவி

   பதிலளிநீக்கு
  14. பெண்ணினமே! நீ என்றும் உன் மதித்திறத்தை, மனத்திறத்தை இழந்து விடாதே./

   படிப்பினைப் பகிர்வு.

   பதிலளிநீக்கு
  15. •// பெண்ணினமே! நீ என்றும் உன் மதித்திறத்தை, மனத்திறத்தை இழந்து விடாதே.//

   பெண்களுக்கு மன உறுதி மிகவும் தேவை. விழிப்புணர்வை தூண்டும் விதமாக அமைந்துள்ளது பதிவு.பகிர்வுக்கு நன்றி.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...