வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

செவ்வாய், 4 அக்டோபர், 2011

மணமகள் மாங்கல்யம்
கொழுமை கொஞ்சும் கோமளமேனிக் 
கோதை கொண்டாள் திருமணக்கோலம்
கயல் இரண்டு களிநடம் புரியும் சாயலிலே
காரிகை கவின்மிகு கண்கள்
நித்திலமாய் நெற்றியிலே 
கச்சிதமாய் ஒரு குங்குமப் பொட்டு
வனப்பும் வாளிப்பும் வார்த்தெடுத்த ஆக்கை
சிவப்பும் செம்மஞ்சள் படடும் சீர் உடுத்து 
புனைபல புனைந்து அணிபல அணிந்து
இட்ட அடிநோக எடுத்த அடி கொப்பளிக்க
பட்டுவிரலாலே பல வண்ணச் சரமெடுத்து
பக்கம் வந்தடைந்தாள் ஏந்திழையாள்
பாதிவழித் துணை நாயகன் நாடி
நறவம் அனைய குரலாள்
நலங்கள் அனைத்தும் காக்கும்
ககனம் வாழ் காதலனோ! எனக்
கடைக்கண் பார்வை கணக்கெடுக்க
அம்மி மிதித்தோர் அருந்ததி பார்த்து 
அண்டம் ஆய பொறை அவணியில் காக்க
சங்குக் கழுத்தில் தொங்கவோர்
தங்கச் சரட்டை அங்கமாய் அணிந்து – தன்
சொந்தச் சிறையில் பந்தலிட்டான்
சொந்தப் பெயரில் திருமதி இட்டான்


என்னால் எழுதப்பட்ட இக்கவிதை மெல்லிசை மன்னன் எம்.பி. பரமேஸ் அவர்களால் திருமணவீடுகளில் பாடப்படுகின்றது.
13 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

ரெவெரி சொன்னது…

அர்த்தம் மிக்க பாடல் சகோதரி...

Rathnavel சொன்னது…

அழகு கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள் அம்மா.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

திருமணவீடுகளில் பாடப்படும் அர்த்த்ம் பொதிந்த இனிமையான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..

அமைதிச்சாரல் சொன்னது…

திருமண விழாவின் சூழலை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்திட்டுது கவிதை..

மாலதி சொன்னது…

சிறப்பான பதிவு மன்றல் நாள் கண்ணில் தெரிகிறது வாழ்த்து விண்ணை முட்டுகிறது பாராட்டுகள் .

G.M Balasubramaniam சொன்னது…

there is some problem with my computer. This is just to say IT IS GOOD.

அப்பாதுரை சொன்னது…

நன்று. பாடலையும் சேர்த்திருக்கலாமே?

சத்ரியன் சொன்னது…

அழகிய பாடல்.

kavithai (kovaikkavi) சொன்னது…

நல்ல வரிகள்.
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com

nadaasiva சொன்னது…

அழகுத் தமிழில் ஆனந்தப் பாடல், அருமை.வாழ்த்துகள்.

சிவகுமாரன் சொன்னது…

ஆகா அருமை சகோதரி.

பாடல் பதிவையும் இணைத்திருக்கலாமே

dafodil's valley சொன்னது…

இவ்வழகிய கவிதையை கட்டாயம் அனைத்து திருமணங்களிலும் பாடவேண்டும். மிகவும் நன்றாக அந்த சூழ்நிலைக்கே கொண்டு சென்றுது தங்களி கவிதை, நன்றி.

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...