• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வியாழன், 13 அக்டோபர், 2011

  தமிழர் கலாசாரத்தில் தாலி
  தாலி என்பது திருமணத்தின் போது மணவாளன் தன் உரிமைப் பெண்ணாக ஒரு பெண்ணை அடையாளப்படுத்த அணிகின்ற ஒரு சாதனமாகிய மாங்கல்யம் ஆகும். அதாவது தாலி என்பது ஒரு அடையாளச் சின்னமே. திருமணத்தின்போது ஒரு ஆண் பெண்ணுக்குக் கழுத்தில் அணிவிக்கும் ஒரு அணிகலனாகும். தலைநிமிர்ந்து வரும் ஒரு ஆடவன் தாலி அணிந்த பெண்ணைக் காணும்போது இவள் திருமணமான ஒரு பெண் என்று தன்னை விலத்திக் கொள்வான். 

  இந்த வகையிலேயே மெட்டி என்னும் ஒரு அணிகலன் ஆண்கள் கால்களில் அணியப்பட்டது. தலைகுனிந்து வரும் பெண்கள், மெட்டி அணிந்த ஆண்களைக் கண்டு விலகிச் செல்வார்கள். ஆனால், அதில் இன்னுமொரு உண்மைக் காரணமும் உண்டு. மெட்டியிலுள்ள உலோகம் விஷத்தை நீக்கக்கூடியது தன்மையுள்ளது. காடுகளில் திரிகின்றபோது விஷ ஜந்துக்களின் தாக்கத்தில் இருந்து ஆண்களைப் பாதுகாக்க இம்மெட்டி அணியப்பட்டது. ஆனால், திருமணமான ஆண்களே விஷ ஜந்துகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்களா? என்பது கேள்வி. இதன் மறுமுனியில் சிந்தித்தால், அக்காலத்தில் சிறுபிராயத்திலேயே திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள் என்பதும் உண்மையே. சிறுவயதிலேயே குடும்பத்திற்காக உழைப்புத் தேடவேண்டிய பொறுப்பு ஆண்மகனுக்கு ஏற்பட்டது. ஆனால் இந்த மெட்டி, ஐரோப்பிய மண்ணுக்கு பொருத்தமில்லாதது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டியதே. பாதணி அணியாத பாதத்துடன் விஷ ஜந்துக்கள் நடமாடும் இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இங்கு ஏற்படப் போவதில்லை. ஐம்பொன் நகைகள் அணியப்படுவதும். செம்பு பயன்படுத்தவதும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். இதைவிட இம்மெட்டியானது தற்பொழுது திருமணநாளன்னு பெண்களுக்கே அணியப்படுகின்றது. மெட்டி அணியப்படும் விரலுக்கும் கர்ப்பப்பைக்கும் இடையே தொடர்பு இருப்பதனால், இம்மெட்டியானது கர்ப்பப்பைக்கு வலிமையைக் கொடுக்கின்றது என்றுஅறியப்பட்டிருக்கின்றது. இம்மெட்டி விடயம் இவ்வாறிருக்க தாலிக்குத் திரும்புவோம்.

                ஆரம்ப காலத்தில் தான் விரும்பும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண்மகன் அன்பளிப்பாக மலரைக் கொடுத்தே பெண்ணை ஆண்மகன் ஆண்டு கொண்டான். இம்முறை குரங்குகளிடமும் இருக்கிறதாம். பிற்காலத்தில் பூமாலை அணிவித்தார்கள். இது ஒரு அன்பளிப்புப் பொருளாகவே கருதப்பட்டது. பின் மஞ்சள்கயிற்றில் அணிவிக்கப்பட்டது. மஞ்சளானது தோலுக்கு மென்மையையும், அழகையும் கொடுக்கும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. இதனால், மஞ்சள் கயிற்றில் தாலி அணிவிக்கப்பட்டது. முற்காலத்தில் வேட்டையாடி புலியைக் கொன்ற ஆடவன், அதன் பல்லை எடுத்துக் கழுத்தில் மாலையாக அணிவது வழக்கமாக இருந்தது. பின் திருமணத்தில் அதனைத் தன் மனைவிக்கு அணிவித்தான் என்றும் அறியப்படுகின்றது. அதனாலேயே மஞ்சளில் தாலி கட்டும்போது மஞ்சள் புலிப்பல் வடிவிலே எடுக்கப்படுகின்றது. தற்பொழுது அது பொற்தாலி என்னும் வடிவத்திற்குத் தாவிச் செல்வப்பெருமையை வெளிக்காட்டும் ஒரு சாதனமாக அணியப்படுகின்றது. இப்போது 25,30 பவுண்களிலும் பெண்ணின் எடைக்கு ஏற்பவும் அணியப்படுகின்றது.  தாலியைத் தாங்க முடியாத கழுத்துக்குனிய விழாக்களுக்கு மட்டும் அணியப்பட்டு மறுவேளை வீட்டு அலுமாரியில் அடைந்து கிடக்கின்றது.

                  திருமணநாளன்று சுபமுகூர்த்த நேரத்தில் கூறைச்சீலை உடுத்து மணமகனின் வலது பக்கத்திலே கிழக்கு நோக்கி மணமகள் அமர மணமகன் எழுந்து மணமகளின் வலதுபக்கம் வந்து வடக்குத் திசையை நோக்கி நின்று குருக்கள் மற்றும் பெரியோர் ஆசீர்வதித்துக் கொடுத்த மாங்கல்யத்தை எடுத்து, மாங்கல்யம் தந்துநாநே நமஜீவன ஹேதுநா கண்டே பத்தாமி ஸுபுகே சஞ்ஜிவசரதசம்' என்ற மந்திரத்தைக் குருக்கள் உச்சரிக்க, கெட்டிமேளம் முழங்க (அபசகுன வார்த்தைகள் எதுவும் காதில் கேட்காவண்ணம்) பெரியோர்கள் அர்ச்சதை, மலர்கள் தூவ மணமகன் மேற்குத் திசை திரும்பி நின்று மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவான்.
                               
                 கணவன் வாழும்வரை மனைவி மார்பில் எப்பொழுதும் இத்தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தான் தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அப்பெண் எடுத்துக்காட்ட வேண்டும். இவ்வாறு இத்தாலி அணியப்பட்ட நிலைமை மாறி இப்போது அழகுசாதனமாக்கப்பட்டு விட்டது. தமிழர் கலாசார சின்னத்துள் ஒன்றாகக் கருதப்படும். இத்தாலிக்கு ஒரு மகத்துவமும் உண்டு. மார்பிலே உயிரோட்டம் உள்ள இதயத்தில் இத்தாலி தட்டுப்பட்டுக் கொண்டு இருக்க, அது சீன மருத்துவ முறையான அக்யூபக்சர் முறைபோல் தொழிற்படுகின்றதாம். எனவே, தாலி என்பது பெண்ணுக்கு வேலி என்பது மாத்திரம் அன்றி பெண்ணுக்கு வலிமை என்றும் சொல்ல வேண்டும். கலாசார விழுமியங்கள் காரணம் இல்லாமல் தோன்றவில்லை. அது கால சூழலுக்கேற்ப கட்டிக் காக்க வேண்டியதும் அவசியமே.

  18 கருத்துகள்:

  வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

  தாலியின் சிறப்பு மகிமை மருத்துவ குணம் மங்கள குறியீடு என முழு சரித்திரத்தையும் அதன் முழு வரலாறு பற்றியும் எழுதி அசத்தி விட்டீர்கள்.

  மெட்டியும் பெண்களே அணிகின்றனர். ஆண்கள் அணிவதாகத் தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி.

  DrPKandaswamyPhD சொன்னது…

  நல்ல கருத்துக்கள். இன்றைய பெண்கள் கருத்தில் கொள்ளவேண்டியவை. பாராட்டுக்கள்.

  Rathnavel சொன்னது…

  அருமையான பதிவு.
  நிறைய விஷயங்கள் இந்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியது.
  இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

  RAMVI சொன்னது…

  அருமையான ஆராய்ச்சி பதிவு கெளரி. வாழ்த்துக்கள்..

  சந்திரகௌரி சொன்னது…

  ஆண்களுக்கான எதைத்தான் பெண்கள் விட்டுவைத்தார்கள். காற்சட்டை, சேட், காலணி இப்படிப்பல. பாவம் ஆண்கள் பெண்களுக்காக எவற்றையெல்லாம் விட்டுக்கொடுத்திருக்கி;ன்றார்கள். ஆனால், பெண்கள் இன்னும் பெண்ணுரிமை பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

  சந்திரகௌரி சொன்னது…

  DrPKandaswamyPhD சொன்னது//

  காரணம் தெரியாமலேயே பல காரியங்கள் நடக்கின்றது. அதைப் புரிந்து நடக்கின்ற போது அதன் பல மேலும் அதிகரிக்கும். பின்னூட்டம் தந்தமைக்கு மிக்கநன்றி சார்

  சந்திரகௌரி சொன்னது…

  RAMVI சொன்னது//


  நன்றி ராம்வி. தொடர்ந்து உள்வாங்குங்கள்.

  G.M Balasubramaniam சொன்னது…

  பகிர்வுக்கு நன்றி. கேள்விகள் பல எழுப்பி விடைகள்தேடி அலைந்து கிடைத்த வற்றைப் பகிரும் உங்கள் செயல் பாராட்டுக்குரியது.

  சந்திரகௌரி சொன்னது…

  G.M Balasubramaniam சொன்னது//

  நன்றி ஐயா. தேடலும் தெளிதலும் பகிர்தலும் யாவர்க்கும் சிறப்பே

  கவி அழகன் சொன்னது…

  இப்போது 25,30 பவுண்களிலும் பெண்ணின் எடைக்கு ஏற்பவும் அணியப்படுகின்றது.

  இதுக்காக தானே ஒவ்வொரு ஆண்மகனும் கஷ்டப்பட்டு உலச்சு காசு சேக்கிறான்

  Cpede News சொன்னது…

  தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

  உங்கள் தளம் தரமானதா..?

  இணையுங்கள் எங்களுடன்..

  http://cpedelive.blogspot.com

  அ. வேல்முருகன் சொன்னது…

  தாலி தவிர்த்த திருமணங்களை கண்டிருக்கிறேன். அவர்களும் நன்றாக வாழ்கிறார்கள், மோதிரம் மாற்றி வாழ்பவர்களும் நன்றாக வாழ்கிறார். அதனால் இதுஒன்றும் பெரிதாக தெரியவில்லை.

  அதென்ன வலப்பக்கம் பெண் அமர வேண்டும் என்றேன். பெண்ணிற்கு இடம் கொடுக்க கூடாதாம். சிவன் பார்வதிக்கு இடம் கொடுத்ததால் நரன் மன்னிக்கவும் நாம் பெண்ணை இடப்புறம் வைத்து தாலி கட்ட கூடாதாம்

  நம்புங்கள் கலாச்சாரத்தின் பெயரால்

  பெயரில்லா சொன்னது…

  நல்லதொரு பதிவு தந்துள்ளீர்கள் , ஆண்களும் பெண்களும் உணரவேண்டிய தாலியின் பெருமை !!

  சிவகுமாரன் சொன்னது…

  அருமையான பதிவு. தாலியின் மகத்துவத்தை மட்டுமின்றி அவசியத்தையும் விளக்கிவிட்டீர்கள்.

  பெயரில்லா சொன்னது…

  தாலியின் விவரணம் தரப்பட்டுள்ளது. நல்லது. அடுத்த அடுத்த தலைமுறைகள் இதைக் கைவிடும் தோற்றம் தெரிகிறது. 43 வருடங்களுக்கு மேலாக நல்ல கணவருடன் அருமை வாழ்வை வாழ்கிறேன். புற உலகைப் பார்க்கும் கண்களால் எனது மனதிலும் அதன் புனிதம் '' இது என்ன லைசென்சா! '' என்று தூசி கிளப்புகிறது. காலம் மாறி, கலாச்சாரங்களும், அத்தனையும் மாறுகிறது. இதை நிதானமாக ஏற்கும் மனதை நாம் பெற வேண்டும். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wpordpress.com

  PADMA சொன்னது…

  தாலி புலி பல்லில் இருத்து வந்ததாக எழுதி இருந்தீர்கள். தாலியை ஏன் கொம்பு என்று கூறுவர்?

  சிவஹரி சொன்னது…

  தாலியினைக் குறித்த பல காலம் தொடர்ந்து பேசப்பட்டு வரும் கருத்துகளையும், எழுத்தாளர் தன் கருத்துகளையும் நன்முறையில் எடுத்துக் காட்டியிருப்பது இக்கட்டுரைக்கு கூடுதல் வலுவும், வனப்பும்.

  திருமணத்தின் போது மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் வந்து வடக்கு முகமாக நின்று மாங்கால்யத்தினை வாங்கிக் கொண்டு பின்னர் மேல்முகமாய் நின்று அணிவிக்கின்றான் என்று கூறிய கருத்துகள் எல்லா இடத்திலும் தொடர்ந்து வரும் நிகழ்வு தானா என்பதினை மட்டும் அறிய ஆவல்.


  நன்றி

  பெயரில்லா சொன்னது…

  மெட்டியை சிலர் பல விதங்களில் அணிவதற்கான காரணங்கள் என்ன?

  பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்

  தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...