வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

புதன், 26 அக்டோபர், 2011


http://esnips.com/displayimage.php?pid=32947296

அகவிருளில் அறியாமை சுகங்காணு முலகில்
திரைவிலக்கி ஒளிபெருக்கி 
அகமது ஒளிர்ந்து புறமது பரவி 
பகலவன் ஒளியென அறிவதன் சுடரது
பரவியொளி பாரெல்லாம் பரிமளிக்க
பண்பெலாம் நிறைந்துலகில் படர்ந்திருக்க
வஞ்சனை தீர்ந்துலகில் வஞ்சினம் நீறாக
நெஞ்சமதில் பொறாமை இஞ்சியளவு தேங்கிடாது
வந்தனை புரிந்தெமைப் பெற்றோர் அடிபணிந்து
இத்தீபத் திருநாளதனில் நல்லனவெலாம் பெற்று 
வாழ்கவென வாழ்த்துகிறேன்.

10 கருத்துகள்:

DrPKandaswamyPhD சொன்னது…

நல்ல வாழ்த்துப்பா. வாழ்க வளமுடன்.

ஒப்பிலான் பாலு சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தங்கைக்கு ! வாழும் காலங்களில் இயற்கைய நேசிப்போம் ...அடுத்த தலைமுறைக்கு நல்லவைகளை விட்டுச் செல்வோம் ...வாழ்க வளமுடன் !

Rathnavel சொன்னது…

மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

DrPKandaswamyPhD சொன்னது…

ஏம்மா, இந்தப் பதிவுக்கு தலைப்பு வைக்கலியா?

Ramani சொன்னது…

தீமையும் இருளும் அகல
நல்லவனவற்றை நமக்குள் ஏற்பதுவும்
அதனால் உள்ளத்தில் உண்டாகும் தூய ஒளியை
புறத்தே பரவவைத்து களித்தலுமே
தீபாவளியின் பொருள் என்பதனை
உள்ளடக்கமாகக் கொண்ட உங்கள் கவிதை
அருமையிலும் அருமை.வாழ்த்துக்கள்

RAMVI சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்,கெளரி.

சத்ரியன் சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துப்பாவுக்கு நன்றிகள்

மாலதி சொன்னது…

சிறப்பான பா உளம் நிறைந்த பாராட்டுகள்

அமைதிச்சாரல் சொன்னது…

இனிய வாழ்த்துகள்.

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...