வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

வெள்ளி, 4 நவம்பர், 2011

டிக்டிக் டிக்டிக்
                                    டிக்டிக் டிக்டிக் 


டிக்டிக் டிக்டிக் டிக்டிக் டிக்டிக்
காலங் காட்டும் கடிகாரம்
கடுகதியாய் சுழன்று வர
வேகங்கொள்ளும் வாழ்வின் கணக்கு
நாளும் ஒன்று இழக்கிறது.


காலம் என்றும் நிற்பதில்லை
கனவுபோல் மறைந்து போம்
நெஞ்சில் கொள்ளும் ஆசைகள் 
கொஞ்சமும் தங்க விடவேண்டாம்.


டிக்டிக் டிக்டிக் டிக்டிக் டிக்டிக்
படபடக்கும் இதயம் என்றும்
பயத்தின் மிகுதி காட்டிவிடும்
பழக்கம் இல்லா சூழலிலும்
தவறு செய்யும் வேளையிலும் 
துடி துடித்துக் காட்டிவிடும் 


மனதின் சாட்சி மனசாட்சி
வாழ்வில் என்றும் அதனாட்சி
தேடும் உள்ளம் புகழாட்சி
போடும் வேஷம் நிஜமாச்சு
போலி வாழ்க்கை விஷமாச்சு.

டிக்டிக் டிக்டிக் டிக்டிக் டிக்டிக்
மரங்கொத்தியே! உன் உதடுகளில்
உரங்கொள் கூர்மை யார் வைத்தார்
மரங்களின் வலிமை அறிந்திருந்து
கருவியை உடலில் கொண்டாயே
பறவையே! உன் படைப்புப்போல்- மனிதப்
பிறவியின் கருவிகள் அறிவாயோ
பற்களின் கூர்மை பாhத்ததுண்டா
நகங்களின் கூர்மை அறிந்ததுண்டா – தற்காப்புக்
கருவிகள் உடலில் கொண்டும் - மனப்
பயத்தையும் சேர்த்தே கொள்ளும் 
வியத்தகு மனிதனும் வாழ்கின்றான்
வீணராய் உலகில் மடிகின்றான்.

6 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

கடிகாரத்தின் செயலை உயர்வு நவிற்சியாய் கூறி
வாழ்வை செம்மைப்படுத்தி முயற்சி கொள்ள
அருமையான கவி படைத்தீர் சகோதரி....

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//மரங்கொத்தியே! உன் உதடுகளில்
உரங்கொள் கூர்மை யார் வைத்தார்?//

அருமையான கவிதை, பாராட்டுக்கள்.

கவி அழகன் சொன்னது…

கவிதை வாசிக்க வாசிக்க மனசு டிக் டிக் எண்டுது

RAMVI சொன்னது…

//மனதின் சாட்சி மனசாட்சி
வாழ்வில் என்றும் அதனாட்சி
தேடும் உள்ளம் புகழாட்சி
போடும் வேஷம் நிஜமாச்சு
போலி வாழ்க்கை விஷமாச்சு.//

அருமையாக இருக்கு கெளரி.

ஒப்பிலான் பாலு சொன்னது…

உண்மை.
போனால் வராது...
பணம் கொடுத்தாலும் கிடைக்காது.இதன்.
மதிப்பை அறிந்தவன்
விண்ணில் பறக்கிறான்..அறியாதவன்
மண்ணில் தவிக்கிறான்!

அருமை சகோதரி..வாழ்த்துக்கள்.

Rathnavel சொன்னது…

அருமை அம்மா.
வாழ்த்துக்கள்.

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...