• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 9 டிசம்பர், 2011

  கட்டுப்பாடும் சுதந்திரமும்

  உந்தியில் தங்கியபோது
  உந்தியே வரம்பு
  உருண்டதும் உதைத்ததும்
  கருவறையுள் கட்டுப்பாடு
  உதித்ததும் பூமியில் சுதந்திரம்
  உருவாகும் உயர் வாழ்வுக்கு
  மனக் கட்டுப்பாடு
  சந்ததி காத்திடும் தாய்மடி கட்டுப்பாடு
  சரித்திரம் புகழ்ந்திட கட்டாய நிலைப்பாடு
  சிந்துகள் பாடும் சிட்டுக்குருவி வாழ்வில்
  மிஞ்சிடா துலகில் வஞ்சியாய் வாழ்ந்திட
  வாழ்வின் கறை சுமக்க வழி விடாத
  பெற்றோர் கட்டுப்பாடு

  விலங்குகள் சுதந்திரம் காட்டினுள்ளே- அவை
  வீதிக்கு வந்தால் இழப்பது வாழ்வு
  மீன்களின் சுதந்திரம் நீரினுள்ளே- அவை
  நீரைத் தாண்டினால் நிலைக்கா துலகில்

  சொற்சுதந்திரமென நாவடக்க மறந்தால்
  சொல்லுக்கேது சுதந்திரம்
  புலனடக்கம் புரியாதுலகில் தறுதலையாய் வாழ்ந்தால்
  குலநடுக்கம் குலத்தையே அழிக்கும்
  கட்டவிழ்ந்த மந்தைகளாய் மேய்ப்பாரிழந்தால்
  கெட்டழியும் வாழ்வு கெடுத்து விடும் சுதந்திரம்
  வாழ்வை உயர்த்த வழிகாட்டும் சுதந்திரம்
  வானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்
  சீரழியாது வாழ்வைச் சிறப்பாக்க
  பேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு


  01.12.2011 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது

  7 கருத்துகள்:

  Rathnavel சொன்னது…

  அழகு கவிதை.
  வாழ்த்துகள்.

  அம்பலத்தார் சொன்னது…

  //வானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்
  சீரழியாது வாழ்வைச் சிறப்பாக்க
  பேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு//
  வாழ்வு சிறக்க வழமான கருத்துக்கள்.

  கவி அழகன் சொன்னது…

  வாழ்த்துக்கள்

  மகேந்திரன் சொன்னது…

  அழகிய முத்தான சொற்களால் கோர்க்கப்பட்ட
  இனிய கவிதை..

  Ramani சொன்னது…

  கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே
  உண்மையான சுதந்திரம் என்பதை
  மிக நேர்த்தியாக விளக்கிப் போகும் படைப்பு அருமை
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 2

  dhanasekaran .S சொன்னது…

  அழகான வார்த்தை செறிவுடன் கூடிய கவிதை

  பெயரில்லா சொன்னது…

  சுதந்திரத்தை வரம்பு மீறாமல் நடந்து
  தக்க வைத்து கொள்வது பற்றி அழகாக்
  கூறி உள்ளீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.

  பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்

  தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...