• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 27 டிசம்பர், 2011

  பக்குவப்படாத பகுத்தறிவு


  Add caption
      
     
      விசித்திரமான ஓர் கருவி
         என்னுள்ளே இருந்து
       வில்லங்கம் செய்கிறது
         எடுத்து எறிந்திடவோ
       இருக்குமிடம் புரியவில்லை

  அன்று இசைக்கருவிகளின் மத்தியில் சக்கரைப்பந்தல் நிகழ்ச்சியில் தேன்மாரி பொழிந்து நான் அரங்கிலிருந்து  அகன்ற வேளை என்னருகே வந்த அந்த கம்பீரம் என் வலது கரத்தை இழுத்துக் குழுக்கியபடி 'சசி! உன் பாட்டு அபாரம். உங்கள் அம்மா இப்படியொரு கவிதை எழுதியிருப்பதை இன்று தான் கண்டேன்||;. என்றான். 'இது அம்மா எழுதிய கவிதை இல்லை' என்று நான் கூறிய போது 'நான் சொன்னது பாட்டை இல்லை. உன்னை||. என்று கூறி அகன்று விட்டான். அவன்; துடிப்பான   பேச்சு அடிக்கடி என் மனதில் தொல்லையை ஏற்படுத்துகிறது. காரணம் புரியாது என் மனதைக் கட்டுப்படுத்துவேன். இப்போது அடிக்கடி என் கண்ணில் படும் இவன் யார்? என்னை அவன் தன் பக்கம் இழுக்கின்றானா? சுவாரசியமாக துடிப்பாக அவன் ஒவ்வொரு தடவையும் கூறும் வார்த்தைகளைத் தேடி மனம் அலைகிறதே. ஏன் தந்தையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து எதையும் அவரிடம் மறைக்காத எனக்கு இதை மட்டும் ஏன் சொல்ல மனம் மறுக்கிறதுஎன்   குடும்பத்தைச் சமுதாயக்கூண்டில் நிறுத்தும் காரியத்தை எப்போதும் நான் செய்ய மாட்டேன். ஒவ்வொரு நாள் காலையிலும் அவன் கண்ணில் படக்கூடாது. என் மனதில் இருக்கும் அவன் நினைவை எரித்துவிடு
  இறைவா! என ஆண்டவனை வேண்டியபடி வீதிக்கு வரும் நான் அவனைக் கண்டவுடன் பேதலிக்கின்றேன். அனைத்தையும் மறக்கின்றேன்.

            
                         இதுதான் அலைபாயும் மனமா? எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவன் சேர்ந்து வரவேண்டும் என மனம் ஏங்குகிறது. மனதைக் கட்டுப்படுத்தி படிப்பில் கண்நிலைக்கும் போது எதிரில் அவன் படம் நிழலாடுகின்றது. இல்லை. எனக்கு வேண்டியது எனது பெற்றோர். கல்வி இதைத் தவிர வேறில்லை. பிடிக்காது> பொருந்தாது எனத் தவிர்க்க நினைக்கும் நினைவுகளுக்கு மனம் தொடர்பை ஏற்படுத்துவதும் ஏன்? பக்குவப்படாத மனம் கொண்டு துடிக்கின்றேன். இங்கு நான் யார்? நான் வேறு என் அந்தரங்க  பொக்கிஷம் வேறு. நானாக நான் மாறுவது எப்போது?
              பேதலிக்கும் இம்மடந்தையின் வேதனையை உணர்ந்தவளாய் ஓராயிரம் ஆசைகள் சுமக்கும் மனம் ஓர் நொடியில் சலிப்படைவதும் உள்ளிருந்து ஓர் காரியம் உறுத்த வெளிவேஷம் போடுவதும் கண்டொன்று பேசிக் கடந்ததும் கடிந்து பேசுவதும் நாள் முழுவதும் கடிந்து பேசும் பிள்ளையை நடுநிசியில் அணைத்து முத்தம் கொடுப்பதும் கூடாத காரியம் எனத் தெரிந்தும் அதைச் செய்து முழிப்பதும் ஆத்திரத்தில் அடித்துத் துரத்தியவனை அடுத்த நிமிடம் நினைத்து ஏங்குவதும் இந்த மனமே. விநோதமான பலர் மனதின் விந்தையான போக்கை எண்ணி வியந்தபடி
                  

  11 கருத்துகள்:

  நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

  நல்லாயிருக்குங்க.

  மகேந்திரன் சொன்னது…

  மனம் ஒரு விசித்திரம் தான்.
  உள்ளுக்குள்ளேயே ஒரு போராட்டம்
  நடத்தி உணர்வுகளுக்குள் மோதலை
  வளர்த்து.. இதுதான் சரியென்று
  முடிவெடுக்க முடியாமல் தவிக்கச் செய்யும்.
  அடிக்கச் சொல்லும் அதே மனம்தான்
  அரவணைக்கவும் சொல்லும்...

  அழகாக சிறுகதைபோல இருப்பினும்
  கவின்மிகுக் கவியே.

  திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

  நன்றாக உள்ளது சகோதரி!

  sasikala சொன்னது…

  அருமை உண்மையின் வெளிபாடு .

  Rathnavel சொன்னது…

  அருமை.

  சந்திரகௌரி சொன்னது…

  நண்டு @நொரண்டு -ஈரோடு,,sasikala ,திண்டுக்கல் தனபாலன், Rathnavel

  மிக்க நன்றி. தொடருங்கள்

  Ramani சொன்னது…

  வெட்டவெட்ட முளைக்கிற அந்த மயக்கம் தரும்
  போதைச் செடியினை
  முழுங்கவும் முடியாது துப்பவும் முடியாது தவிக்கிற
  அந்த இளமைக்கே உண்டான இரண்டுக்கெட்டான் தவிப்பை
  கவித்துவமாகச் சொல்லிப் போன பதிவு
  அருமையிலும் அருமை
  மீண்டும் மீண்டும் இந்த சொற்சித்திரத்தை படித்து ரசித்தேன்
  மனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள்

  Ramani சொன்னது…

  த.ம 4

  சந்திரகௌரி சொன்னது…

  மகேந்திரன் சொன்னது//

  மனிதர்களுக்கு மட்டும்தான் இந்நிலையோ ? மிருகங்கள் பறவைகளுக்கும் தானோ தெரியவில்லை.

  சந்திரகௌரி சொன்னது…

  வாருங்கள் ரமணி அவர்களே . மிக்க நன்றி

  வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

  //தந்தையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து எதையும் அவரிடம் மறைக்காத எனக்கு இதை மட்டும் ஏன் சொல்ல மனம் மறுக்கிறது. //

  //என ஆண்டவனை வேண்டியபடி வீதிக்கு வரும் நான் அவனைக் கண்டவுடன் பேதலிக்கின்றேன். அனைத்தையும் மறக்கின்றேன்.//

  மிகவும் இயல்பான உணர்வுகளின் வெளிப்பாடுகள்.
  எந்த அணை போட்டு தடுக்க முடியாது இதை.

  வெகு அழகாக எழுதியுள்ளீர்கள் vgk

  பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்

  தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...