• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 23 டிசம்பர், 2011

  நத்தார் தின நற்செய்தி
  நத்தார் தின நற்செய்தியாக நண்பர்கள் அனைவருக்கும் இப்படைப்பை மனமுவந்து வழங்குகின்றேன். நத்தார்தின வாழ்த்துகள். 

  கவிதா தன் எண்ணங்களுக்கு வரிவடிவம் இதயத்துத் தேக்கங்கள் வார்த்தைகளால் வழிந்தோடும். தன்னைவிடத் தன் பேனாவையே அதிகம் நேசிப்பாள். ஏனெனில் அதன் மூலமே அவளால்த் தன்னை யாரென்று பிறருக்கு இனம் காட்ட முடிகின்றது. அவள் வார்த்தைகளுக்கும் வரிகளுக்கும் வேறுபாடு இருந்ததே கிடையாது. சொல்லும் செயலும் மாறுபடும் உலகில் முடிந்தவரை எழுத்துக்குத் தன்னை அர்ப்பணித்து வரிவடிவில் தன் உளவடிவம் பிரதிபலிக்கச் செய்யும் தன்மை கொண்டவள். பேனாபிடிக்கும் விரல்களை கணனித் தட்டச்சு தட்டுகின்ற விரல்களை வினாடிக்கு வினாடி முத்தமிடும் நன்றியுணர்வுள்ள கவிதா வாழ்வில் விதியின் விளையாட்டு மனம் வருந்;தத்தக்கதாகவே விளையாடியது. விரலோடு இணைந்தே அவள் உயிரானது ஒரு விபத்தில் விடைபெறத் தகுதி பெற்றது. உயிரில்லாத உடலால் இவ்வுலகுக்கு ஆவதென்ன என்று அன்று கவிதா நினைத்திருப்பாளேயானால், இன்று இவ் அற்புதம் உருவாகியிருக்குமா? 
         
    தன் அங்கங்களில் எங்கெல்லாம் பயன்பாடு உள்ளதோ அனைத்தையும் தாரைவார்த்துத் தருவதாய் மருத்துவக் காப்புறுதி செய்திருந்தால், யு.ழு.மு என்று அழைக்கப்படும் மருத்துவக் காப்புறுதி நிறுவனம் வழங்கிய உறுப்புத்தான அட்டையை எப்போதும் தனது கைப்பையினுள் வைத்திருப்பாள். திடீரென ஏற்படும் விபத்தின்போது உடனடியாக உடலுறுப்புக்கள் தேவைப்படுவோருக்குப் பொருத்திவிட வேண்டும் அல்லவா. அதனால் திறந்த மனதுடன் அவள் உடலைத் தாங்கிய மருத்துவமனையானது அணுகுண்டு வெடிப்பில் கையிழந்த ஒரு பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது. என்ன ஆச்சரியம் செயலிழந்து உயிரிழந்த கைகளில் நரம்புகள் பொருத்தப்பட்டு இரத்த ஓட்டம் சீராகப் பயணம் செய்ய உயிருள்ள கையாய் கவிதா கை அப்பெண்ணின் உடலில் செயல்பட்டது. ஆச்சரியம் அப்பெண் ஒரு எழுத்தாளர். கவிதா விரல்கள் இன்று அந்தப் பெண்ணின் உடலில் பொருத்தப்பட்டு இன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றது. சாகாவரம் பெற்ற கவிதா கைகள் அவள் ஆசையை வேறு ஒரு உடலோடு இணைந்து இன்று நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அற்புதம் நாம் வாழும்போதே விஞ்ஞானம் எமக்குத் தந்த வரப்பிரசாதம். 
                                             


          அழிகின்ற உடலை நாடிநிற்பார் நாட்டத்தைத் தீர்க்கத் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வாருங்கள். 
   
   உயிரே பொய்யென்னும் போது - இவ்
       உடலாற் பயனென்ன
      உதிரம் உறைந்து உடலும் அழுகி
      எரியில் பொசுங்கி எரிசாம்பலானால்
      உலகுக்காவதென்ன உமக்கும் ஆவதென்ன – அதைப்
      பிற உயிர்க்காய் உவந்தளித்தால்
      பயனாகும் இவ்வுலகில் 

  அனைவருக்கும் இதயம் கனிந்த நத்தார் தின வாழ்த்துகள் 

                 
  12 கருத்துகள்:

  1. அருமையான செய்தி. பயனுள்ள பதிவு. மருத்துவ விஞ்ஞான சாதனைகள் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

   கவிதாவின் கைகள் எப்போதுமே தொடர்ந்து தொய்வில்லாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கட்டும். வாழ்த்துக்கள். vgk

   பதிலளிநீக்கு
  2. ஆம் சகோதரி,
   வெறும் காற்றடைத்த பை என்று சொல்வார்கள் உடம்பை.
   இருக்கையில் உறுப்புதான் செய்யச் சொல்லவில்லை ..
   இறந்தபின் உருப்புதானம் செய்யுங்கள் என்ற எண்ணத்தை
   ஏற்க முன்வரவேண்டும்.

   நத்தார் புதுவருடம் மற்றும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் சகோதரி.

   பதிலளிநீக்கு
  3. நாம் வாழும்போதே விஞ்ஞானம் எமக்குத் தந்த வரப்பிரசாதம்.

   அனைவருக்கும் இதயம் கனிந்த நத்தார் தின வாழ்த்துகள்

   பதிலளிநீக்கு
  4. சகோ விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி

   பதிலளிநீக்கு
  5. பயனுள்ள அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
   அருமையான பதிவு
   நிகழ்வோடு இணைத்துச் சொல்லிப் போவது
   தங்கள் கருத்துக்கு அதிக வலு சேர்க்கிறது
   பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
   த.ம 1

   பதிலளிநீக்கு
  6. நத்தார்தின செய்தியாக நல்லதொரு விழிப்புணர்வு பதிவை தந்ததற்கு வாழ்த்துக்கள். எனது மணிப்பர்சில் (organspende ausweis) உடலுறுப்புதான அட்டை ஏற்கெனவே தயாராக இருக்கிறது.

   பதிலளிநீக்கு
  7. அருமையான செய்தி. பயனுள்ள பதிவு.நத்தார்தின செய்தியாக நல்லதொரு விழிப்புணர்வு....

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...