• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 29 ஜனவரி, 2012

  ( அங்கம் 1) பொறுமையின் கனிவு ( அங்கம் 1)

                                                  தொடர்கதை

  உடற்பலம் அனைத்தும் சேர்த்து தன் தனிமுயற்சியால் உலகத்தை வெளிக்காட்ட உலோகத்துணை எதுவுமின்றி பூமிக்குத் தன் குழந்தையைக் கொண்டுவந்தாள் கவிதா. குழந்தைக் குரல் கேட்கத் தளர்ச்சி கண்ட அவள் கண்கள் விழித்துக் கொண்டன. கையிலே தரப்பட்ட குழந்தையின் கன்னங்களில் இரண்டு சொட்டுக்கண்ணீர்த் துளிகள் விழுந்தன. இது ஆனந்தக் கண்ணீரா? இல்லை அவள் தாங்கிய வேதனைகளைப் பிழிந்து வந்த கண்ணீரா? 
      
       வேதனைக் காலம் தொடர்வதில்லை – மனிதன்
       சோதனைக் காலம் சொந்தமாவதில்லை
       வேதனையும் சோதனையும் ஓர்நாள் - இன்ப 
       வேதனத்தை விதைத்து விடும் 
       விளைவுகளும் நலமாய்ச் சொரிந்துவிடும்.

  கையளவில் பிள்ளைவரக் கடந்த காலங்களை அவள் கடத்தியதும் ஒரு கனவாகியது. செழிப்பான செல்வக் களிப்பான குடும்பத்திலிருந்து தனக்காய் ஒரு சிறப்பான குடும்பங் காண கடவைச்சீட்டே அவளுக்குச் சிறகாகியது. ஜேர்மனியும் அவளை வரவேற்றது. 6 மாதங்கள் அவளுக்கோ அழகான வாழ்க்கை. அவள் ஆசை மணாளன் அன்புடனே உலகம் அனைத்தும் சுற்றிவந்தாள் கவிதா. அவள் முகம் நிமிர்த்த உலகம் பூச்சொரிந்தது. இன்பமலர்கள் கொட்டிக் கிடந்தன. குதூகலவாசனை இல்லமெங்கும் நுகரப்பட்டது. புகுந்தவீட்டுப் புது உறவுகள் பாசத்தைப் பாத்திரமின்றிப் பருக்கினார்கள். தெளிவான வாழ்க்கை மேகத்தில் சில இன்ப நட்சத்திரங்கள் மட்டுமே மின்னிக் கொண்டிருந்த போது அந்த வானில் விமானக் கீறல் விழுந்தது போல் அந்தத் தலையிடி ரகுவைத் தடங்கள் செய்தது. Vicks அமிர்தாஞ்சனம், Axeoil, Paracetamol இப்படி இக்கால தலையிடி நிவாரணிகள் எல்லாம் தலையிடிக்கு எதிராய் எதிர்த்துப் போரிடத் தனக்காய்க் கையாண்டான் ரகு. ஆனால் முடியவில்லை. இறுதியாய் ஆண்டவனாம் மருத்துவரை நாடினான். இரத்தஓட்டத்தில் அழுத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. இரத்த அழுத்தம் வழமைக்கு மாறாய் அதிகரித்திருந்தமை உணரப்பட்டது.  அப்படியென்றால் எப்படி?
                                  
                                              கீழுள்ள கணிப்பீடு 80 ஆகவும் மேலுள்ள கணிப்பீடு 110 ஆகவும் இருக்க வேண்டிய நிலை மாறி கீழே 120 மேலே 200 ஆக அதிகரித்திருந்தது. இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மருத்துவப்பயிற்சிகள் மருந்து மாத்திரைகள் எதற்குமே இரத்தஅழுத்தம் குறைவதாயில்லை. அருகே வைத்துத் தாய் போல் அவதானிப்போம் என ஆண்டவனால் படைக்கப்பட்ட மனிதத் தெய்வங்கள் மருத்துவசாலையில் வைத்து 3 கிழமைகள் முயற்சித்தார்கள். தமது கட்டுப்பாட்டுக்குள் இரத்தஅழுத்தத்தைக் கொண்டுவரலாம் என முயற்சித்த  அவர்கள் முயற்சி தோற்றுத்தான் போனது. ''அவனைத் தாண்டி அணுவும் அசையாது''.  விதியை வெல்ல விதியாலும் முடியாது.  

  தொடரும்.....  

  17 கருத்துகள்:

  RAMVI சொன்னது…

  //வேதனைக் காலம் தொடர்வதில்லை – மனிதன்
  சோதனைக் காலம் சொந்தமாவதில்லை
  வேதனையும் சோதனையும் ஓர்நாள் - இன்ப
  வேதனத்தை விதைத்து விடும்
  விளைவுகளும் நலமாய்ச் சொரிந்துவிடும்.//

  உண்மைதான். அருமையான வரிகள் கெளரி.
  அப்பறம் என்ன ஆயிற்று ??

  வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

  ஓர் எதிர்பார்ப்புடன் கதை தொடர்கிறது.
  மனது திக்திக் என்றும் அடித்துக்கொள்கிறது.
  அடுத்த பகுதியைப்படிக்காமல்
  எங்களுக்கும் BP ஏறிவிடும்போல உள்ளது!

  தொடருங்கள். வாழ்த்துகள்.

  Rathnavel Natarajan சொன்னது…

  தொடருங்கள்.

  சந்திரகௌரி சொன்னது…

  பொறுத்திருங்கள். அதிக நாட்கள் விட மாட்டேன். விரைவில் போட்டு உடைத்து விடுவேன்

  சந்திரகௌரி சொன்னது…

  நன்றி ராம்வி

  சந்திரகௌரி சொன்னது…

  நன்றி ஐயா .அதிகமாக எழுத மாட்டீர்கள். ஆனாலும் தவறாது பின்னூட்டம் இட மறக்கமாட்டீர்கள். உங்கள் வருகை இன்றி எந்தன் பக்கம் இருந்ததில்லை

  சந்திரகௌரி சொன்னது…

  அது வேறா . நீங்கள் எங்களை எப்படிப் போட்டு வாட்டி எடுப்பீர்கள். இப்போது தெரிகிறதா . உடனேயே வந்து பதிவு இட்டமைக்கு மிக்க நன்றி.
  பதிலளிநீக்கு

  அம்பலத்தார் சொன்னது…

  துன்பமும் கவலையும்கூட கடந்துபோகும். எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் தூண்டிவிட்டீர்கள்.

  பெயரில்லா சொன்னது…

  வணக்கம். பாத்திரம் இன்றிப் பாசத்தைப் பருகினாகள் என்பது மிகவும் உயர்ந்த கற்பனை. கனக்க எழுதினால் வாசிக்க முடியவில்லை; இரண்டு பதிவாகப் போட்டிருக்கலாம் என்பார்கள். கொஞசம் எழுதினால் மிகுதி எங்கே என்று கேட்பார்கள். அனபுகொண்ட வாசகர்கள் அப்படித்தான் இருப்பார்கள். இருந்தாலும் தொடரும் என்று போட்டிருக்கலாம். ஒரு சினிமாப் படம்பார்க்கக் காசகொடுத்து இடைவேளையுடன் படம் நின்று மிச்சக்காசையும் தியேட்டர்காரன் தரமாட்டான் என்று சொல்ல வீடுதிரும்பியதுபோல் இருக்கிறது உங்கள் கதையின் மிச்சம் இல்லாதது. வாழ்த்துக்கள். (கங்கைமகன்)

  திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

  ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோதரி ! நன்றி !

  சந்திரகௌரி சொன்னது…

  காத்திருப்பதும் இன்பம் என்பார்கள். இது கதைக்கும் பொருந்துமோ

  சந்திரகௌரி சொன்னது…

  இக்கதை நிச்சயமாகத் தொடரும். வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு எவ்வளவை அள்ளிக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். போலிக்கு தமது பக்கமும் வாசகர்கள் தொகை கூட வேண்டும் என்பதற்காக கருத்துரை இடுபவர்கள். ஏதோ கூறுவார்கள். அனைத்தையும் கேட்கத்தான் வேண்டும். என்னுடைய எழுத்துக்கள் விளங்கவில்லை என்று கூறிச் செல்வோரும் உண்டு. அருமையான எழுத்து நடை என்போரும் உண்டு. என்ன செய்வது எமக்குத் தெரிந்ததைச் செய்வோம் . உங்கள் மேலான கருத்துக்கு மிக்க நன்றி

  சந்திரகௌரி சொன்னது…

  நன்றி தனபாலன் அவர்களே.

  சக்தி சக்திதாசன் சொன்னது…

  அருமைச் சகோதரி கெளரி,
  அருமையான் பகிர்வு. உங்களின் ஆக்கங்களை அக்கறையோடு படித்து வருபவன் நான். என் தமிழ்த்தாய் வழித் தொன்றல்களில் இத்தனை சிறப்புடை படைப்பாளர்கள் உண்டு என்பதில் என்னை விடப் பெருமையடைபவர்கள் இருக்க மாட்டார்கள. வாழ்த்துக்கள் சகோதரி
  அன்புடன்
  சக்தி

  சக்தி சக்திதாசன் சொன்னது…

  அருமைச் சகோதரி கெளரி,
  அருமையான் பகிர்வு. உங்களின் ஆக்கங்களை அக்கறையோடு படித்து வருபவன் நான். என் தமிழ்த்தாய் வழித் தொன்றல்களில் இத்தனை சிறப்புடை படைப்பாளர்கள் உண்டு என்பதில் என்னை விடப் பெருமையடைபவர்கள் இருக்க மாட்டார்கள. வாழ்த்துக்கள் சகோதரி
  அன்புடன்
  சக்தி

  மகேந்திரன் சொன்னது…

  அழகான கரு கொண்டு
  தெளிவால வார்த்தைகளால்
  கோர்க்கப்பட்ட இயல்பான ..தொடர்..

  வாழ்வின் ஓட்டத்திற்கு பொறுமையின் கனிவு
  மிக அவசியமான ஒன்று..
  நமக்கென்று விதிக்கப் பட்டவைகளை..
  நேர் நின்று எதிர் கொள்ள ...

  தொடருங்கள் சகோதரி..

  சந்திரகௌரி சொன்னது…

  நன்றி மகேந்திரன்.

  பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்

  தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...