வெற்றியாண்டாய் மலர்வாய்!வார்த்தைகளால் வாழ்த்தொலிகள்
வானவேடிக்கைகளால் வரவேற்புகள்
கோர்த்து வைத்த பாமாலைகளால்
கோர்வாய் உனைப் பாடிக் குதூகலிப்பும்
கோலாகல வரவேற்பும் – நீ
கொண்டுவந்த சேதியென்ன சொல்லிவிடு – நீ
பூப்பதொன்றும் புதுமையில்லை – உலகில்
புரிகின்ற சாதனையில் புதுமை காண்பாய்
புரியாத அழிவுகளால் - இப்பூமி
புரியாது மாள்கிறது, புன்னகை யிழக்கிறது
பூரிப்பாய் வரவேற்ற பூலோகக் கண்களுக்கு
புரிய வைக்கும் சாதனைதான் யாதோ?


சாதனைகள் புரியப் பல வேதனைகள் காண்போம்
சான்றுகள் பெருகப் பல சோதனைகள் காண்போம்
வேதனையும் சோதனையும் கண்டுவிட்டோம்
சாதனையும் சான்றுகளும் சாதிக்க வேண்டும்
சாக்கடைப் புழுவாய் சகதியில் வாழும் மக்கள்
நோக்காடு இன்றி மேன்மை பெறல் வேண்டும்
சுழலுகின்ற பூலோகம் சுகங்கள் தர வேண்டும்
உழலுகின்ற துன்பங்கள் உருண்டோட வேண்டும்
உள்ளத்தில் நற்சிந்தனை உருக்கொள்ள வேண்டும்
செல்லச் சிறாரெலாம் சிந்தையறிவு பெறல் வேண்டும்
அத்தனையும் பெற்றுவிட்டால் அகிலம் போற்றும்
வெற்றியாண்டாய் மலர்வாய் நீ!

                                                             

கருத்துகள்

Ramani இவ்வாறு கூறியுள்ளார்…
வித்தியாசமான புத்தாண்டுச் சிறப்புக் கவிதை
நிச்சயம் புத்தாண்டுக்கும் வெற்றி ஆண்டாக ஆகவேண்டும் என்கிற
ஆசை இருக்காதா என்ன
நிச்சயம் இவ்வாண்டு தங்கள் கவி வாக்குபோல
ஒரு வெற்றி ஆண்டாகவே இருக்கும்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம1
முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
மகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்…
////வேதனையும் சோதனையும் கண்டுவிட்டோம்
சாதனையும் சான்றுகளும் சாதிக்க வேண்டும்
சாக்கடைப் புழுவாய் சகதியில் வாழும் மக்கள்
நோக்காடு இன்றி மேன்மை பெறல் வேண்டும்////

இவ்வேண்டுதல் வரமாய் நிகழ வேண்டும் சகோதரி.
என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இராஜராஜேஸ்வரி இவ்வாறு கூறியுள்ளார்…
பூரிப்பாய் வரவேற்ற பூலோகக் கண்களுக்கு
புரிய வைக்கும் சாதனைதான் யாதோ?


இனிய ஆங்கிலப் புத்தாண்டு
வாழ்த்துக்கள்!
கவி அழகன் இவ்வாறு கூறியுள்ளார்…
Happy new year
புலவர் சா இராமாநுசம் இவ்வாறு கூறியுள்ளார்…
அத்தனையும் பெற்றுவிட்டால் அகிலம் போற்றும்
வெற்றியாண்டாய் மலர்வாய் நீ!

கவிதை அருமை! சொல்லப்பட்ட கருத்தும்,
சொன்ன விதமும் அருமை!
கவிதைக்கும் வாழ்த்துக்கள்
ஆங்கிலப் புத்தாண்டுக்கும் வாழ்த்துக்கள்

புலவர் சா இராமாநுசம்
sasikala இவ்வாறு கூறியுள்ளார்…
சாதனைகள் புரியப் பல வேதனைகள் காண்போம்
சான்றுகள் பெருகப் பல சோதனைகள் காண்போம்
வேதனையும் சோதனையும் கண்டுவிட்டோம்
சாதனையும் சான்றுகளும் சாதிக்க வேண்டும்

மிகவும் அருமை
Rathnavel இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துகள்.
அம்பலத்தார் இவ்வாறு கூறியுள்ளார்…
மலரும் புத்தாண்டு அனைவருக்கும் வெற்றியாண்டாக மலர வாழ்த்துக்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்