வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

திங்கள், 23 ஜனவரி, 2012

இச்சு இச்சு
   


படபடக்குது பட்டாம் பூச்சி
மனசுக்குள்ளே என்ன ஆச்சு
கட்டி அணைத்து இச்சுஇச்சு
கன்னம் ரெண்டும் போச்சுபோச்சு

கதிரவன் முன் எழும்பியாச்சு
சாமிபடத்தில் சந்தனக் குச்சு
சந்தோஷமனதில் ஏத்தி வைச்சு
சக்கரவாக கச்சேரி வைச்சு
கட்டி அணைத்து இச்சுஇச்சு

ஆசையெல்லாம் சேர்த்துவைச்சு
அன்னையர்தின நாளும் ஆச்சு
அன்புச் செல்வம் ஆர்வப்பேச்சு
அன்பளிப்புக் கவிதை வீச்சு
அம்மாவின் வாழ்வின் மூச்சு
கட்டிஅணைத்து இச்சுஇச்சு

பிஞ்சு எண்ண ஆசை நெஞ்சு
பிள்ளை பேசும் வெள்ளைப்பேச்சு
உள்ளம் எங்கும் உண்மை வீச்சு


பொய்மை  வாழ்வு இஞ்சி அளவும்
மிஞ்சிடாது இன்பங் காண
எஞ்சியுள்ள காலம்வரை 
மச்சிபோல காப்போம் வாழ்வை. – என்றும்
விஞ்சி கிடைக்கும் இச்சுஇச்சு.

                              
மச்சு – வீட்டின் கூரை 
              

8 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

GOOD ONE

RAMVI சொன்னது…

//பிள்ளை பேசும் வெள்ளைப்பேச்சு
உள்ளம் எங்கும் உண்மை வீச்சு//

ஆம் கெளரி. கள்ளம் கபடம் அற்ற மழலை பேச்சுக்கு இடு இணை ஏதும் இல்லை.

சிறப்பான கவிதை.

சந்திரகௌரி சொன்னது…

ThANKS

சந்திரகௌரி சொன்னது…

உள்ளத்தில் கள்ளம் சேர மழலைப் பேச்சு மறைந்து போகின்றது: நன்றி ராம்வி

சந்திரகௌரி சொன்னது…

அருமையான கவிதை.
சுண்டி இழுக்கும் தலைப்பு.
மழலைகள் உலகம் மகத்தானது.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

பதிவுக்கும், பகிர்வுக்கு மிக்க நன்றி.

அன்புடன் வை. கோபாலகிருஷ்ணன்.

சந்திரகௌரி சொன்னது…

பின்னூட்டமிட முடியவில்லை ஏனெனெனத் தெரியவில்லைதங்கள் கவிதையைப்
படிக்கும் எவருக்கும்மடியில் குழந்தையைக் கிடத்திக் கொஞ்சுகிற சுகம்
நிச்சயம் பொங்கிப் பெருகும்அத்தனை அருமையான சொல்லாடலுடன் கூடியஅன்புப்
பிரவாகத்தை படைப்பில் உணர முடிகிறதுஅருமையான படைப்புபதிவாக்கித்
தந்தமைக்கு நன்றி

Batticaloa News சொன்னது…

தொடர்ந்து நல்ல ஆக்கங்களை எழுத வாழ்த்துக்கள்

சீனுவாசன்.கு சொன்னது…

அருமை!

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...