வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

வெள்ளி, 13 ஜனவரி, 2012

2012 பொங்கல் திருநாள்


         

ஆதவனே! உன் ஆட்சியில் அண்டமெல்லாம் பூரிப்பு
ஆளும் உன் ஆட்சியில் அகிலத்தில் பல பிறப்பு
ஆண்டவனாய் ஆதிக்கம் செலுத்தும் நீ
வெடித்துச் சிந்தியதால் விண்ணிலே பிறப்புக்கள் 
கிரகங்களாய் பல் சிறப்புக்கள் 
அண்டவெளியின் ஐந்து வீதங்களில்
அற்புதமாய் அடக்கலமாயின
ஆளுக்காள் சிறப்பம்சங்கள் காட்டின - இன்று

பூமித்தாய்க்கோ வயதாகி விட்டது
பிரசவித்த தாயே! பகலவனே!
உமக்கும் எமக்கும் இடையேயுள்ள
நெருக்கம் அதிகமானாலும் குறைந்தாலும்
வாழும் மக்கள் எம்மிடையே குலநடுக்கம்

பூலோகம் இவ்வருடம் அஸ்தமனமாய் 
அண்டவெளியிலே அழியப் போகுதென
அச்சுறுத்தல் ஆரம்பம் அனைவருக்கும் பேரச்சம் - உன்
புன்னகையால் எரிக்கப் போகின்றாயா? - இல்லையுன்
அலைக்கரத்தைச் சுருக்கப் போகின்றாயா?
புன்னகைத்தால் எரிந்திடுவோம்
அலைக்கரம் சுருக்கினால் உறைந்திடுவோம்

எரித்துத் தள்ளும் உன் எரிப்பொரியில்
ஒரு புதுக் கிரகம் உருவாக்கிவிடு
பூமியிலிருந்து மனிதன் புதுக்கிரகம் நாடிப்
புகலிடம் தேடட்டும், புதிதாய் ஓர் உலகு
மனிதன் கைப்பட்டுச் சுவர்க்கம் ஆகட்டும்

பில்லியன் ஆண்டுகள் தாண்டி நீ 
பிறப்பு எடுத்தாலும்
பில்லியன் ஆண்டுகள் தாண்டி நீ
வாழவேண்டும்
நீ வாழ உன் எரிபொருள்கள் 
பெருக வேண்டும்.
நாம் வாழ உன் கதிர் அதிர்வுகள்
கிடைக்க வேண்டும்.

ஆண்டில் ஓர்நாள் மக்கள் இனிப்புப் பொங்கலுனக்கு
இனிதாய்ப் படைக்கின்றார்.
அர்ச்சதை ஏதும் இல்லை மந்திரம் சொல்லவில்லை
புதுப்பானையிலே புத்தரிசி எடுத்ததனுள்
சர்க்கரையும் பாலும் அளவாய்க் கலந்திட்டு
இனிப்புப் பொங்கலை இனிதாய்ப் படைக்கின்றார்
பொங்கலோ பொங்கலென புகழ்ந்து பாடுகின்றார் - இந்நாளை
உழவர் திருநாளென உரக்கச் சொல்கின்றார்
உணவளிக்கும் உழவர் உரிமை பாராட்டுகின்றார் 
உலகத் திருநாளிதென உரக்கச் சொல்வோம்
உலக மக்களெலாம் நன்றி உரைக்கும் நானௌ
போற்றி வணங்கிடுவோம்.

இப்பொங்கல் திருநாளில் உறவினர்கள்> நண்பர்கள்;> சுற்றத்தார் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை என் குடும்பம் சார்பாகச் சொல்லி மகிழ்கின்றேன்.

11 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு வரிகளும் நன்றாக உள்ளது சகோதரி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்.

மகேந்திரன் சொன்னது…

பொங்குகின்ற பொங்கலைப் போல
மகிழ்ச்சி என்றும் நிலைத்து பொங்கட்டும்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
அன்பிற்கினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Ramani சொன்னது…

பில்லியன் ஆண்டுகள் தாண்டி நீ
பிறப்பு எடுத்தாலும்
பில்லியன் ஆண்டுகள் தாண்டி நீ
வாழவேண்டும்
நீ வாழ உன் எரிபொருள்கள்
பெருக வேண்டும்.
நாம் வாழ உன் கதிர் அதிர்வுகள்
கிடைக்க வேண்டும்.//

பொங்க்ல் திரு நாள் சிறப்புக் கவிதை
அருமையிலும் அருமை
பகிர்வுக்கு நன்றி

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

Ramani சொன்னது…

Tha.ma 2

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

Rathnavel சொன்னது…

எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

அப்பு சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..

Karikal@ன் - கரிகாலன் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் சுற்றத்தார்களுக்கும் எனது மனம் கனிந்த இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

RAMVI சொன்னது…

அருமையான வாழ்த்துக்கவிதை.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துகள்

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...