• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

  புத்தாண்டுத் தீர்மானங்கள் - 2012 ஒரு சுயபரிசீலனை                      புத்தாண்டுத் தீர்மானங்கள் - 2012
                               ஒரு சுயபரிசீலனை
  ஆண்டாண்டு தொடர்கிறது ஆளுக்கொரு தீர்மானம் - அன்று
  ஆடையில்லா மனிதனுக்குள் அளவுகடந்த தீர்மானம்
  தேடித் தேடித் சேர்த்தளித்த தீர்மானம் - நாம்
  தெளிந்த வாழ்க்கை தொடர்தலுக்கு ஆதாரம்.
  அறிஞர்கள் ஞானிகள் விஞ்ஞானிகள் தீர்மானம்
  அநுபவிக்கும் மக்கள்நல வாழ்க்கை கொடையாகும்
  விடைதேடி போகும் வாழ்வில் தீர்மானம் 
  விரிவடைந்து போவதுதான் சமகாலம்
  மகேந்திரன் போட்ட மூன்று தீர்மானம் 
  மகிழ்வுடனே நிறைவேற ஆர்வபானம்
  மனம் நிறைந்து ஓடவேண்டும் மூளையெங்கும்
  தினந் தினமாய் முன்னேற்றம் காணவேண்டும்.
  மறைவாக சேர்த்திருக்கும் என்எழுத்து பொக்கிஷங்கள்
  மேடையேறிப் பலரறிய நூலாக வேண்டும்
  நூல் விரித்ததைக் கற்ற எதிர்கால சிற்பிகளும்
  நுண்ணறிவு பெற்றுயர் தமிழ் பயிலவேண்டும்.
  பதின்முன்று ஆண்டுகளாய் பயணிக்காத் தாயகத்தில்
  பதித்தென் கால் பயணித்து மீளவேண்டும் - அச்சிறப்பைப்
  பார்த்தென் மகளும் பரவசம்தான் கொள்ளவேண்டும்
  பாரிலிதன் சிறப்பெடுத்து வாழ்நாட்டு நண்பருக்கு உரைக்கவேண்டும்
  பதிவுலகில் பவனிவரும் நேரமது கூடவேண்டும்
  பதிவிரண்டு வாரமொன்று வழங்க வேண்டும்
  சதிசெய்யும் நேரமதை சந்தித்து மீள வேண்டும்
  சக்கைபோடு போட்டெ ழுத்துலகில் மிளிர வேண்டும்.
  என் தீர்மானம் விரிவாகக் கூறிவிட்டேன் 
  பிறர் தீர்மானம் காண ஆசை கொண்டேன்
  விரைவாக அழைக்கின்றேன் ரமணிசார் உங்கள்
  இவ்வருடத் தீர்மானம் உரைக்கலாமா?
  அன்புத் தோழி ஸ்ரவாணி ஆர்வமுடன் கேட்கின்றேன்
  அவசரமில்லை ஆனாலும் அவசியமாய் ஓர்பதிவு
  இவ்வருடத் தீர்மானம் எடுத்துரைக்க மாட்டீரோ?
  அம்பலத்தார் அவர்களே அக்கறையுடன் அழைக்கின்றேன்
  அம்பலமாக சுவையுடனே இவ்வருட உங்கள்
  அத்தியாவசியத் தீர்மானம் அம்பலப்படுத்தி – என்
  ஆவலைத் தீருங்கள்.
  என் தீர்மானம் அறிய இவவுக்கென்ன ஆர்வமென
  எடுத்தெறிந்து விடாதீர்கள்.
  எழுத்திலே வடிக்கையிலே மனதினிலே நிலைத்துவிடும்
  நிஜமான தீர்மானங்கள். 

  18 கருத்துகள்:

  1. அழைப்பிற்கு மதிப்பளித்து
   எழில்மிகு தீர்மானங்களை
   மிளிர்ந்திடும் சொற்களால்
   சரம் தொடுத்து தந்தமைக்கு
   என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

   பதிவுலகில் விடிவெள்ளி என
   பல்லாண்டு வலம் வர இறைவன்
   அருள் தங்களுக்கு எப்போதும் உண்டு.

   பதிலளிநீக்கு
  2. தீர்மானமான எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.

   சிறு துளி அன்பினை நாம் சொட்ட விட்டாலே போதும். அந்தத் துளி அன்பு மிகப்பெரிய மரமாக பூத்துக்குலுங்கும் படம் வெகு அருமை. பாராட்டுக்கள்.

   பதிலளிநீக்கு
  3. உங்கள் தீர்மானங்கள் கவிதை நடையில் படிக்க
   அழகு , அருமை தோழி.
   அவை விரைவில் நிறைவேற
   என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
   நான் என் தீர்மானங்களை மகி சகோ வின்
   அழைப்பின் பேரில் ஏற்கனவே பதிவு இட்டு விட்டேன்.
   வந்து பார்வை இடவும்.
   நீங்கள் சொல்வது உண்மை. அதை மற்றவர்களிடத்தில்
   எழுத்து வடிவில் உரைத்த பின் உத்வேகம் கூடுவது உறுதி.

   பதிலளிநீக்கு
  4. தீர்மானங்களை அழகாக கவிதையில் சொல்லிவிட்டீங்க..உங்க ஆசைகளெல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள்..

   பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு
   கவி வடிவில் கொடுத்தது கூடுதல் சிறப்பு
   தங்கள் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேற
   மனமார்ந்த வாழ்த்துக்கள்
   தங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி
   இன்னும் இரண்டு நாளில் பதிவிட்டுவிட முயல்கிறேன்

   பதிலளிநீக்கு
  6. தங்களின் ஆர்வம் வெற்றி பெற, அனைவரது தீர்மானங்கள் விரைவில் நிறைவேற அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ! நன்றி சகோதரி !

   பதிலளிநீக்கு
  7. என் மனம் திறக்கச் சொல்லி அன்பாய் கேட்டதற்கு நன்றி. எழுத முயற்சிக்கிறேன்.

   பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்

   ஜொலிக்கும் பெண் சிற்பிகள்

   அன்புடன்
   சம்பத்குமார்

   பதிலளிநீக்கு
  9. உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறட்டும் தோழி
   இன்னும் நிறைய எதிர்பாருங்க வலைசரம் மூலம் உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி
   நேரம் இருப்பின் என் தளம் வாருங்கள்

   பெண் என்னும் புதுமைkovaimusaraladevi.blogspot.com

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...