மூன்றெழுத்து


                       
         

உருவாக உடலில் இடம் தந்த
  அன்னைக்கு மூன்றெழுத்து
உதிரத்தைப் பாலாகப் பருகிடும் 
  பிள்ளைக்கு மூன்றெழுத்து
குரலெடுத்து மொழிவடிக்கும் முதல்வார்த்தை
  அம்மா எனும்சொல் மூன்றெழுத்து
அரவணைத்து வளர்த் தெடுக்கும் 
  அப்பாக்கும் மூன்றெழுத்து
இணைந்தே நடத்தும் இல்லறத்தின் 
  அன்புக்கும் மூன்றெழுத்து 
இனிதாக வளர்ந்துவர அறிவூட்டும்
  கல்விக்கும் மூன்றெழுத்து
தென்றலாய் ஓவியமாய்க் கனிந்த – அந்தக்
  கன்னிக்ககு மூன்றெழுத்து – அவள் 
கருத்தினிலே இடம் பிடிக்கும்
  காதலுக்கு மூன்றெழுத்து
கணவனுடன் கச்சிதமாய் வாழ்ந்துவரும் 
  கற்புக்கு மூன்றெழுத்து – அவள்
கூந்தலிலே காட்சி தரும்
  மலருக்கு மூன்றெழுத்து – அது
நாசி நுழை இன்பம் தரும்
  மணத்திற்கு மூன்றெழுத்து
மணம் தரும் மலரணிந்து செல்லும்
  கோயிலுக்கு மூன்றெழுத்து – அங்கு
மன்றாடி மனமுருகி வேண்டிநிற்கும்
  அருளுக்கு மூன்றெழுத்து
அருளோடு சிறப்பாய் வாழத் துணையாகும்
  தொழிலுக்கு மூன்றெழுத்து
தொழிலால் வாழ்வால் சிறப்பால் கிடைக்கும்
  புகழுக்கு மூன்றெழுத்து
புகழுடம்பு மண்ணில் மாள இறையடிநாடும்
  உயிருக்கு மூன்றெழுத்து
உயிரற்று தீக்கு இரையாகும்  இந்தக்
  கட்டைக்கு மூன்றெழுத்து
கட்டையைச் சுமந்து செல்லும் 
  பெட்டிக்கு மூன்றெழுத்து
அது உருவாக உயிர் தந்த
  மரத்துக்கு மூன்றெழுத்து
மரப்பெட்டியில் அடக்கமாகிய உயிரடையும்
  நிலத்துக்கு மூன்றெழுத்து
பிறப்புத் தொடங்கி இறப்பு வரை – மனிதனுடன்
  தொடர்ந்து வரும் மூன்றெழுத்து

                     
                        






கருத்துகள்

வை.கோபாலகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்னை, பிள்ளை, அம்மா, அப்பா, அன்பு, கன்னி, கல்வி, காதல், கற்பு, மலர், மணம், கோயில், அருள், தொழில், புகழ், உயிர், கட்டை, பெட்டி, மரம், நிலம் என

மூன்றெழுத்தில் என் ’மூச்சு’ இருக்கு, அது முடிந்த பின்னாலும் ’பேச்சு’ இருக்கு ’கடமை’ என் கடமை என்ற ’MGR’ பாடிய பாடல் போல ’அருமை’ யானதோர் ’கவிதை’ தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ஸ்ரவாணி இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்வோடு இணைத்துக் கோர்த்து மூன்று எழுத்தை
அழகாகக் 'கவிதை' தொடுத்து இருக்கிறீர்கள்.
அருமை.
மகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்…
மூன்றெழுத்தின் நிலைத்தன்மைகளை
அழகாய் பகிந்திட்ட உங்கள்
அறிவுக்கு மூன்றெழுத்து....
அம்பலத்தார் இவ்வாறு கூறியுள்ளார்…
உயிரின் இருப்பின் ஆதாரமான மூச்சிற்கும் மூன்றழுத்து.
உயிர் மூச்சிலும் மேலான தமிழிற்கும் மூன்றெழுத்து.
இந்த நல்ல பதிவுக்கும் மூன்றெழுத்து.
பதிவை தந்ததற்கு உங்களுக்கு சொல்லும் நன்றிக்கும் மூன்றெழுத்து.
Rathnavel Natarajan இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை.
நன்றி.
வாழ்த்துகள்.
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அழகான கவிதை சகோதரி ! பாராட்டுக்கள் ! நன்றி !
Ramani இவ்வாறு கூறியுள்ளார்…
இத்தனை இனிமைகளையும் மிக அழகாய்
இணைக்கும் கவிதைக்கும்
அந்தக் கவிதை தரும் சுகத்திற்கும்
மூன்றெழுத்து எனவும் சொல்லி இருக்கலாமோ ?
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பழனி.கந்தசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
ரசித்தேன்.
இராஜராஜேஸ்வரி இவ்வாறு கூறியுள்ளார்…
அழகு கவிதைக்கு பாராட்டுக்கள்..
சிவஹரி இவ்வாறு கூறியுள்ளார்…
மூன்றெழுத்து குறித்த முத்தாய்ப்பான கவிதைவர்கள் அட்டகாசம்.

நன்றி > இதுவும் மூன்றெழுத்து

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்