• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 23 மார்ச், 2012

  அன்று தான் உண்மையில் நான் வருந்தினேன்


  அன்று தான் உண்மையில் நான் வருந்தினேன் 







  உன் அகம் புறம் இரண்டையும்
  ஊடுருவி உன்னை உண்மையுடன்
  உணர்ந்து அறிந்தவனும் நான் தான்

  உன் உள் மனஉழைச்சலை என் முன்னே கூறி
  உள்ளம் நீ நெகிழ்ந்த போது – உன்
  கண்ணைத் துடைக்க மாட்டாத பாவியும் நான் தான்

  உன் வாழ்க்கையில் நீ அதிகம் பார்த்ததும் என்னைத் தான்
  உன்னை விட உன் முகத்தை அதிகம் ரசித்தவனும் நான் தான்

  மேடையில் நீ ஆட நாள் குறித்து போதும் - உன்
  ஆட்டத்தை முதலில் இரசித்தவனும் நான் தான்

  தாயகத்தில் தவித்திருப்போர்க்குத் தானம் வழங்கத்
  தயாள குணம் உனக்கில்லையென்று உன்னை பழித்திருப்பார்க்கு . உன்
  தாராள குணத்தை எடுத்துக்காட்டி சாட்டையடி
  கொடுக்கமுடியாத பாவியும் நான் தான்

  நீ பிறந்தது தொட்டு உனக்கும் எனக்கும்
  ஒரு  இறுக்கமான தொடர்பு இருந்து கொண்டுதான் இருக்கின்றது
  எத்தனை தடவை ஆடை மாற்றி என்முன்னே தோன்றினாலும்
  அத்தனை முறையும் உன்னை ரசித்து உனக்காக சேவைபுரியும்
  என்னை நீ இறுகத் துடைப்பாயே 
  அன்று கூட உன்னை நான் நொந்ததில்லை – ஆனால்
  உன் தவறைத் தட்டிக் கேட்ட தாயின் 
  அதட்டலை என்முன்னே வந்து திட்டித் தீர்த்தாயே – அப்போது
  உன்னை ஓங்கி அறைய முடியாது நின்றேனே – அன்றுதான்
  உண்மையில் நான் வருந்தினேன்.

  25 கருத்துகள்:

  பழனி.கந்தசாமி சொன்னது…

  நல்ல கற்பனை.

  வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

  நல்லதொரு பதிவு. இன்றைய உண்மை நிலமையும் அது தான். வருந்தமட்டுமே முடிகிறது உண்மையில்.

  பெயரில்லா சொன்னது…

  அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்கன்னு...எங்கயோ கேட்ட நினைவு...-:)

  Ramani சொன்னது…

  வரிவடிவில் படிப்பதை விட தங்க்கள் குரலோடு கேட்கையில்
  கவிதைய்ன் உள்ளார்ந்த அர்த்தம் நெஞ்சினுள்
  ஈட்டியாய் மிகச் சரியாய்ப் பாய்கிறது
  ஈற்றடிகள் மிக மிக அருமை
  இப்படியே தொடர்ந்து தர வேணுமாய்
  அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  yathan Raj சொன்னது…

  Supper

  பழனி.கந்தசாமி சொன்னது…

  நல்ல கவிதை.

  அம்பலத்தார் சொன்னது…

  கவிதையும் அதன் ஒலிவடிவமும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  இராஜராஜேஸ்வரி சொன்னது…

  உன்னை விட உன் முகத்தை அதிகம் ரசித்தவனும் நான்தான்.. --

  ரசித்த வரிகள்..

  மாலதி சொன்னது…

  nice

  Rathnavel Natarajan சொன்னது…

  அருமை.

  T.N.MURALIDHARAN சொன்னது…

  கவிதையை ஒலிவடிவிலும் அமைத்தது அருமை. வித்தியாசமான முயற்சி.

  சந்திரகௌரி சொன்னது…

  உங்கள் வருகைக்கும் அபிப்பிராயத்துக்கும் மிக்க நன்றி ஐயா . தொடருங்கள்

  சந்திரகௌரி சொன்னது…

  சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இப்போது .கண்ணாடியாய் பல மனிதர்கள் . பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சார்

  சந்திரகௌரி சொன்னது…

  அது அந்தக் காலம் இப்போது திருப்பி அடிக்கிற காலம் ரெவேரி.

  சந்திரகௌரி சொன்னது…

  எப்போதும் என் குரல் வருகைக்கு உங்கள் பாராட்டுக்கள் கிடைக்கும். என்ன கொஞ்சம் வேலை அதிகம். நீங்கள் தரும் ஊக்கமே பதிவுகள் தொடர்ந்து தர உந்துதலாக இருக்கின்றது. முயற்சிக்கின்றேன் .நன்றி சார்

  சந்திரகௌரி சொன்னது…

  Thanks yathavan

  சந்திரகௌரி சொன்னது…

  மிக்க நன்றி

  சந்திரகௌரி சொன்னது…

  மிக்க நன்றி

  சந்திரகௌரி சொன்னது…

  உண்மைதான். எமது காலங்களில் அதிகம் கண்ணாடியைத்தானே பார்க்கின்றோம் . வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

  சந்திரகௌரி சொன்னது…

  வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

  சந்திரகௌரி சொன்னது…

  மிக்க நன்றி

  சந்திரகௌரி சொன்னது…

  வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

  G.M Balasubramaniam சொன்னது…

  கண்ணாடி உங்களுடன் பேசுவதான கற்பனையா. ?யூகித்துக் கொள்ள வேண்டுமா.? கவிதை படித்து புரியவில்லை. பின்னூட்டங்களுக்கு உங்கள் பதிலைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

  G.M Balasubramaniam சொன்னது…

  இன்னும் சற்று தெளிவாக இருந்திருக்கலாமோ.?கண்ணாடி பேசுவதான கற்பனை யூகிக்க வேண்டுமா.?

  பெயரில்லா சொன்னது…

  வெளிநாட்டில் அடிக்க முடியாமல் இந்திய மண்ணை தொட்டவுடன் கையை ஓங்கிய பெற்றோர் கதைகள் பல...

  பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்

  தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...