கில்லி மனதில் வள்ளி

வானத்தில் தோன்றுவது விடிவெள்ளி
என் மனதில் தோன்றியது வள்ளி
நான் உன்னைக் கண்ட இடம் பள்ளி
நான் உன்னைச் சந்திப்பது தினம் வெள்ளி
நீ என் இதயத்தைத் திருடிய கள்ளி
நான் பார்ப்பதற்கு வெறும் சுள்ளி – ஆனாலும்
நான் ஒரு கில்லி
உன்னோடு நான் விளையாடுவது நுள்ளி
நான் எப்போதும் உண்ணுவது உள்ளி
வைக்காதே என்னை வெகுதூரம் தள்ளி
உன்னுடைய தாய் எனக்கு வில்லி
கோபத்தில் அவள் ஒரு சில்லி ( Chilli )
என்னை எதிர்ப்பது உன்னுடைய மல்லி ( தம்பி )
உன்னோடு நான் வாழத் தேவை சல்லி
போடாதே மனதில் சந்தேகப் புள்ளி
அதனால் நான் ஊத்தப் போவது மில்லி
8 கருத்துகள்:
நல்ல நகைச்சுவையான கவிதை. பாராட்டுக்கள்.
ஒரு மாற்றத்திற்காக எழுதினேன் . நன்றி ஐயா
அப்படிப் போடு.
உங்கள் குரலில் கேட்கும் போது இனிமையாக இருக்கிறது .
என் கல்லூரி நாட்களில் நான் எழுதிய பாடலை நினைவுப்படுத்துகிறது.
நன்றி சகோதரி
நாங்க பாராட்டை வழ்ந்கறோம் அள்ளி
நாங்க வழங்கறோம் பாராட்டை அள்ளி
அதை நாமும் காணலாமே
நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன் உங்களுக்கு நன்றியைச் சொல்லி
அருமை.
வாழ்த்துகள்.
கருத்துரையிடுக