வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

ஞாயிறு, 27 மே, 2012

சொல்லொணாத் துயரம் சோலிங்கனில்
சொல்லொணாத் துயரம் சோலிங்கனில்             

கல்லுக்கும் மண்ணுக்கும் இரும்புக்கும்
சொல்லொணாத் துயரம் சோலிங்கனில்
நல்லா இருந்த நகரத்தைப்
பொல்லாத பாடு படுத்துகிறார்
நல்லநல்ல மனிதவலு நாணிக்கிடக்கிறது
வல்லேறு போல் வாகனச்சத்தம் 
மெல்லிய காதைத் துளைக்கிறது. 

பூமிப்படுக்கையிலோர் புதிய மாற்றத்தைப் 
புரியாத பிரமனும் பூரித்து நிற்கின்றார்
பூமாதேவிக்கோர் புதுவித உணர்வு 
புழுப்போல் நெளிந்து பாம்பாய்தன்னுள்ளே
புகுந்த விளையாடும் குழாயின்    
புகலிட வரவின்நிலை குறித்து.

மெஞ்ஞானம் மறந்த அஞ்ஞானப் புரட்சி
விஞ்ஞான விளிம்பிலே வியத்தகு காட்சி 
தன்ஞானம் மறந்த தடிகொண்ட ஆச்சி
தரக்குறைவாய்ப் பேசும் சளிப்பான பேச்சு.

அழகுக்கும் ஆடம்பரத்துக்கும் 
அளவில்லாப் பெருமைக்கும்
அரசாங்கப் பணமெல்லாம் 
அநியாயமாய்த் தேய்கிறதே
வரியாய்ப் பெற்ற பணமெல்லாம் 
மண்தோண்ட விடலாமோ
குறையாத விலையுயர்வு 
கொள்கையை மறக்கலாமோ

8 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்லதைச் சொல்லும் கவிதை. நன்று. பாராட்டுக்கள்.

மகேந்திரன் சொன்னது…

மாறி வரும் உலகச் சூழலில்
அத்தனை நிலைப்புத்தன்மைக்குமான
மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும் என
அழகாக சொல்லும் கவிதை சகோதரி...

அன்புடன் மலிக்கா சொன்னது…

ஆதங்கக்கவிதை மிக அருமை..

சந்திரகௌரி சொன்னது…

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக நன்றி ஐயா

சந்திரகௌரி சொன்னது…

பூமிப்பந்தில் இதுதான் உலகெங்கும் நடக்கின்றது . முடியாத போது கொந்தளிக்கின்றது

சந்திரகௌரி சொன்னது…

நிச்சயமாக மகேந்திரன் . அதை நாம் தாங்கிக்கொண்டுத்தான் இருக்க வேண்டும்

சந்திரகௌரி சொன்னது…

நீண்ட நாள்களின் பின் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. எல்லோரும் ஓட்டத்தில் பலரை மறந்து விடுகின்றோம்.

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...