வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

திங்கள், 4 ஜூன், 2012

விடியலைத் தேடி!காரிருள் சூழ்ந்திருக்கக் கருமேகம் வானில்
விடியலைத் தேடி விரைகிறது
காலஓட்டத்தில் கலந்திருக்கும் மானிடரும்
ஞால விடிவுதேடி விரைகின்றார்
அஞ்ஞானத்தை அழித்து மெஞ்ஞானத்தில் வெல்ல
மெஞ்ஞானிகள் தேடுகிறார் விடியலை
மெய்ஞானத்தை வென்று விஞ்ஞானத்தை விளக்க
விஞ்ஞானியும் தேடுகிறான் விடியலை
எஞ்ஞானமுமின்றி தன் துணைஞானம் கொண்டு
தன்ஞானம் இழக்கின்றாள் அத்தமிழ்மகள்

ஞாலத்தின் விடியலுக்கு ஆதவன் உதித்தான் - உறவுப்
பாலத்தின் விடியலுக்கு உதித்தவன்
உத்தமனென உறங்குகிறான் கண் விழித்தபடி – அவன்
முழுஉருவும் மூடும் விழிகளுக்குள்
முப்பதைத் தாண்டிய முதிர் கன்னியாய் – அவன்
செப்பிய வார்த்தைகள் பலாக்கனியாய்
காலதேவன் கடுகதி ஓட்டத்தில்
காத்திருப்புக்கள் யுகங்களாய் கழிகின்றன
விடியாத பொழுதுகள் வேதனையின் சுவடுகள் - அவள்
படியாத வாழ்வைப் பறைசாற்றுவதாய் - காதல்
செடியொன்று சருகாகி சாக்கடையில் சகதியாகுமுன்
மலரெடுத்து மாலையாக்கி மன்றல் காண
மனப்பீடை மனந்தாங்கி மணவாளன் மார்பில்சாயும்
விடியலைத் தேடி விசுவாசம் கொள்கின்றாள்01.06.12 முத்துக்கமலம் இணையத்தில் வெளியான எனது படைப்பு

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை ! நன்றி சகோ !

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் சகோதரி.
பொதுவாக "ஞா" எனும் சொல்லைப் பயன்படுத்தி
எழுதப்படும் கவிகள் மிகக் குறைவே..
அதிக அளவில் "ஞா" எனும் சொல்லை பயன்படுத்திய
முதல் கவிதையை பார்க்கிறேன்...

தேடல் எப்போதும் முற்றிலாத ஒன்று.
அதுவும் விடியலைத் தேடுவது
தொட்டுத் தொடரும் ஒரு விடயம்..

நியாயத் தேடல்களும் உரிமைத் தேடல்களும்
மனதின் நிலைப்புத் தன்மைக்கு ஏற்றவாறு
இயைபோடு கிடைக்கும்..

அழகான அற்புதமான கவி சகோதரி..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

காலஓட்டத்தில் கலந்திருக்கும் மானிடரும்
ஞால விடிவுதேடி விரைகின்றார்

விரைந்து வரட்டும் விடியல் !

சந்திரகௌரி சொன்னது…

நன்றி மகேந்திரன் இப்போதுதான் கவனிக்கின்றேன். உண்மைதான் ஞா அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. சில கவிதைகள் நினைக்கும் போது வரிகள் வந்து விழும் .

Ramani சொன்னது…

விடியலைத் தேடும்
விதவிதமான மனிதர்கள் குறித்த பதிவு
அருமையிலும் அருமை
குறிப்பாக இறுதி வரிகள் நான்கும் அற்புதம்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani சொன்னது…

விடியலைத் தேடும்
விதவிதமான மனிதர்கள் குறித்த பதிவு
அருமையிலும் அருமை
குறிப்பாக இறுதி வரிகள் நான்கும் அற்புதம்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...