வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

உண்டு உண்டு எல்லாம் உண்டு

</p
                      
       பாருண்டு பக்தருண்டு படைத்தவனுண்டு
       நீருண்டு நிலமுண்டு நிர்மூலமுண்டு
       காருண்டு காவுண்டு காயுண்டு
       சூடுண்டு சூரியனுண்டு சூரியகாந்தியுண்டு
       காசுண்டு காணியுண்டு காரியமுண்டு
       சீருண்டு சிறப்புண்டு சிந்தனையுண்டு
       தாருண்டு தாரமுண்டு தாயாருண்டு
       நாருண்டு நாமமுண்டு நாதனுண்டு
       வாருண்டு வாரிசுண்டு வாழ்தலுண்டு
       ஊருண்டு உறவுண்டு ஊறுமுண்டு
       ஆருண்டு ஆர்வமுண்டு ஆரோக்கியமுண்டு
       ஏருண்டு ஏற்றமுண்டு  ஏவலுண்டு
       ஏடுண்டு ஏணுண்டு ஏமாளியுண்டு
       ஆடுண்டு ஆற்றலுண்டு ஆற்றாமையுண்டு
       ஈடுண்டு ஈட்டமுண்டு ஈடேற்றமுண்டு
       ஈருண்டு ஈரமுண்டு ஈனலுண்டு
       உண்டு உண்டு அனைத்துமுண்டு – ஆனாலிங்கு
       இல்லை இல்லை நிம்மதியில்லை.
  

நார் – அன்பு           ஆர் – அழகு        ஈடு - வலிமை
நாமம் - புகழ்           ஏண் - வலிமை
வார் - நேர்மை          ஆடு – வெற்றி

                       

6 கருத்துகள்:

Ramani சொன்னது…

ஆயிரம் உண்டுகள் இருந்தென்ன
நிம்மதி என்பது இல்லையெனில்
உண்டுகளை அடுக்கிக்கொண்டு போனவிதமும்
கவிதையை முடித்த விதமும் மனம் கவர்ந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நிம்மதி இல்லையென்றால் பிறகென்ன வாழ்க்கை... அருமையான வரிகள்... அதற்கு விளக்கமும் அருமை... வாழ்த்துக்கள்...

T.N.MURALIDHARAN சொன்னது…

எல்லாம் உண்டு உங்கள் கவிதையில் இனிமையும் உண்டு. நார் என்பதற்கு அன்பு என்ற பொருளுண்டு என்பதஈன்ருதான் தெரிந்துகொண்டேன்.

Kalidoss Murugaiya சொன்னது…

போதும் என்ற மனம் ஒன்று இருந்தால் ..உண்டுகளுக்கு உயர்வும் ..மனதிற்கு நிம்மதியும் உண்டே ..

Karuppasamy Duraichamy Nadar சொன்னது…

Ma ,Mika arumaiyana pathivu .This style is the lyrics of PALANIYAPPA in the tamil movie THIRUVILAIYADAL.All the best by DK .

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
வாழ்த்துகள்.

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...