• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வியாழன், 11 அக்டோபர், 2012

  தலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 1)


         

  கண்ணைத் திறந்தாள் தேவி, மண்டை கனமாக வலித்தது. 1000 வார்ட்டுக்கள் மின் மண்டையைத் தாக்குவது போன்ற வலி. படுத்திருந்த அறையினுள் யாரையுமே காணவில்லை. அவளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த மயக்கமருந்து அவள் பார்வையை  மழுங்கடித்திருந்தது. செயற்கை உலகம் அவளை இயற்கை உலகத்திற்கு அழைத்து வந்திருந்தது. ஆனாலும், அவளால் கட்டிலில் அப்படியே கிடக்க முடியவில்லை. ´´ஐயோ....ஐயோ´´ என்று அலறியபடி ´´எங்கே என்னைக் கொண்டு வந்து போட்டிருக்கின்றீர்கள்´´ என்று பலமாகக் கத்திக் கொண்டு எழுந்திருக்க முயற்சித்தாள். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. அலறல் கேட்டு அறையினுள் ஓடிவந்தான் சுதன். அவள் எழுந்திருக்க முயற்சிப்பதைத் தடுத்தான். வலியிலும் வக்கிரமான அவள் மனவேகம் அவள் படுத்திருக்க முடியாது உதறி எழ முயற்சித்தது. ´´என்ர பிள்ளை..... என்ர பிள்ளை. நான் அவனைப் பார்க்க வேண்டும் என்னை விடுங்கோ....என்னை விடுங்கோ´´ என உதறி எழுந்தாள். அவளைச் சுற்றி நெளியும் வைத்தியசாலைக் குழாய்கள் அவளை இழுத்துப் பிடித்தன. இரத்தம் ஒன்றினுள்ளும் ஒட்சிசன் ஒன்றினுள்ளும் அவள் உடலுக்குள் பிரயாணம் செய்து கொண்டிருந்தன. அறையினுள் கேட்ட ஓசை மருத்துவசாலை முழுவதும் எதிரொலித்தது. தன் காது நுழைந்த ஓசை கேட்டு தடதடவென்று அறையினுள் ஓடி வந்தாள் 
    
                மருத்துவசாலைத் தாதி. அவளைக் கட்டுப்படுத்த முடியாது தடுமாறினாள். உள்ளத்தினுள் உத்வேகம் புகுந்துவிட்டால் மனிதனின் அபாரசக்தி மேலும்  அதிகரிக்கும்.  இரண்டு தாதிகள் அவள் மூலம் வரவழைக்கப்பட்டனர். மூவரும் இணைந்து ஒருவாறாக கட்டுப்படுத்தி மயக்கமருந்தை அவள் உடலினுள் பாய்ச்சினர். மெல்ல மெல்ல கண்கள் மூடின. கைகள் சோர்வடைந்தன. அறையினுள் அமைதி நிலவியது. நரம்பு மண்டலத்தில் பாய்ச்சப்படும் மருந்து உணர்வுகளை செயலிழக்கச் செய்கின்றது. அமைதியான உறக்கத்தைக் கொண்டுவருகின்றது. ´´சுதன் உங்கள் மனைவிக்குச் செய்யப்பட்டிருப்பது சாதாரண ஆபரேசன் இல்லை. மண்டைக்குள் பலத்த காயம் ஏற்பட்டிருக்கின்றது. மேலும் மேலும் மயக்க மருந்தை நாங்கள் கொடுக்கின்ற போது அவவுக்கு கோமா நிலையைக் கொண்டுவந்துவிடும். நீங்கள்தான் அவவைச் சமாதானப்படுத்தவேண்டும்`` கண்கள் கலங்கிய நிலையில் தலையை அசைத்த சுதன் இந்த மயக்கமருந்தைக் கண்டுபிடித்த புண்ணியவானுக்கு மனதார நன்றி தெரிவித்து விட்டு கதிரையில் அமர்ந்தான். 

               வாழ்க்கையே சுமையாகிவிட்டது போன்ற உணர்வு. உலகமே இருண்டுவிட்டது போன்ற உள் மனப்பார்வை. எது எப்போது நடக்கும் என்று புரியாத வாழ்க்கை. அதை நூல் ஏணியில் நடப்பது போன்று ஒவ்வொருவருடனும் பழகவேண்டிய அவசியம் மனிதனுக்கு உண்டு. வாழ்க்கையில் எதுவுமே எமக்கு சொந்தமில்லை எதனையுமே நாம் உரிமை கொண்டாட முடியாது. இனம் புரியாத ஒரு மனஏக்கத்தைச் சுதன் உணர்ந்தான். 

  தொடரும்...............

  18 கருத்துகள்:

  திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

  அடுத்த பகிர்வை படிக்க சுதனுக்கு போல் எங்களுக்கும் மன ஏக்கம்...

  Sasi Kala சொன்னது…

  இனம் புரியாத சோகம் எம்மையும் பற்றிக்கொண்டது.

  Seshadri e.s. சொன்னது…

  முடிவு அருமை!நன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  மஞ்சுபாஷிணி சொன்னது…

  கதையின் தொடக்கமே மனதை பிசைந்தது....

  என்னத்தான் தனக்கு வலி வேதனை என்றாலும் ஒரு பெண் தன் குழந்தையை விட பெரிதாய் தன் உயிரைக்கூட நினைப்பதில்லை என்பதை அறியமுடிகிறது...

  சுதனின் நிலை இன்னும் பரிதாபம்.... மனைவியோ இப்படி தலையில் ஆபரேஷனாகி கட்டுகளோடும் கண்ணிரோடும்...இந்த துக்கம் ஒரு பக்கம் பிள்ளையை பறிகொடுத்த துக்கம் ஒரு பக்கம்....

  நிலையில்லாத உலகில் இந்த க்‌ஷணம் நடப்பது மட்டுமே நிஜம்... அடுத்த நிமிடம் என்ன ஆகும் எது இல்லாமல் போகும் என்று மனிதன் அறிவதில்லை...

  அப்படி அறியமுயன்றால் சண்டை இல்லை, அழுகை இல்லை, சோகம் இல்லை.

  கதையின் தொடக்கமே அடுத்து என்னானதோ என்ற பதட்டப்படவைக்கிறது சந்திரகௌரி....

  கதையின் நடை மிக அருமை....

  தொடர்ந்து தாருங்கள், உங்களுடன் தொடர்ந்து பயணிக்கிறோம்....

  சந்திர வம்சம் சொன்னது…

  ஏதோ ஒரு அழுத்தமான கதையாகத்தெரிகிறது. முடிவு சுகமாக இருந்தால் நல்லது.

  சந்திரகௌரி சொன்னது…

  எதுவாக இருந்தாலும் ஏற்றுத்தானே ஆகவேண்டும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

  சந்திரகௌரி சொன்னது…

  பொறுத்திருங்கள் சகோதரி. உங்கள் அறிவுரை தேவை

  சந்திரகௌரி சொன்னது…

  இன்னும் முடியவில்லை சகோதரா. முடிவுக்காய் காத்திருங்கள் . வருகைக்கு மிக்க நன்றி

  சந்திரகௌரி சொன்னது…

  கதைகள் ஒவ்வொன்றும் வாழ்வின் அடையாளங்கள். வருக்கின்ற பின்னூட்டங்கள் வாழ்க்கையின் தத்துவங்களை எடுத்துக்காட்டுவதாக இருக்க வேண்டும் அந்த வகையில் உங்கள் பின்னூட்டங்கள் உண்மையை எடுத்துவரும் . பலருக்கு பாடமாகவும் அமையும். மிக்க நன்றி சகோதரி . தொடருங்கள்

  சந்திரகௌரி சொன்னது…

  கதைகள் ஒவ்வொன்றும் வாழ்வின் அடையாளங்கள். வருக்கின்ற பின்னூட்டங்கள் வாழ்க்கையின் தத்துவங்களை எடுத்துக்காட்டுவதாக இருக்க வேண்டும் அந்த வகையில் உங்கள் பின்னூட்டங்கள் உண்மையை எடுத்துவரும் . பலருக்கு பாடமாகவும் அமையும். மிக்க நன்றி சகோதரி . தொடருங்கள்

  பெயரில்லா சொன்னது…

  எதுவும் எமக்குச் சொந்தமில்லை.
  எதையும் உரிமை கொண்டாட முடியாது.
  இது தான் யதார்த்தம். நாம் தான் இதை உணர்வதில்லை.
  ஆனால் காலம் இதைக்காட்டியபடியே உள்ளது.
  பார்ப்போம் மிகுதி எப்படி என்று. நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

  மிகவும் அருமையான துவக்கம். விறுவிறுப்பாகவும் ஓர் எதிர்பார்ப்பதைத் தருவதாகவும் சுவாரஸ்யமாகவே செல்கிறது.

  மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவன் வாழ்க என்ற வரிகளும், கடைசியில் கூறப்பட்டுள்ள வரிகளும் மிகவும் நெஞ்சை கனக்க வைத்தன.

  தொடருங்கள் ... ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

  வெளியிட்டவுடன் மெயில் தகவல் லிங்க்குடன் அனுப்பினால் நல்லது. நான் இப்போதெல்லாம் என் டேஷ் போர்டு பக்கம் செல்வது இல்லை.

  தங்கள் வெளியீடுகள் பற்றிய STD. AUTOMATIC தகவல் எனக்குத் தாமதமாக கிடைத்து வருகிறது.

  தங்களின் மெயில் விலாசத்திற்கு ஒருசில மெயில்கள் நான் அனுப்பினேன். அவை எனக்கே பத்திரமாக திரும்ப வந்துவிட்டன. [As Undelivered].

  விருப்பப்பட்டால் புதிய e-mail ID அனுப்பி வைக்கவும்.
  அன்புடன், VGK என் e-mail ID : valambal@gmail.com

  Ramani சொன்னது…

  அடுத்த பதிவை உடன் எதிர்பார்க்கும்படியாக
  ஆர்வத்தைத் தூண்டிப் போகும் அருமையான துவக்கம்
  எப்போதும் பயனுள்ள விஷயங்களை மட்டுமே
  படைப்பாகத் தரும் தங்கள் எழுத்தின் ரசிகன் நான்
  என்பதை பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன்
  (இங்கு 16 மணி நேர மின் தடையில் அவதியுறுவதால்
  உடன் படிக்கவோ பின்னூட்டமிடவோ முடியவில்லை
  தாமத வருகைக்கு மன்னிக்கவும் )

  பெயரில்லா சொன்னது…

  வணக்கம். தங்கள் கதை படித்தேன். சோகங்களின் சொந்தங்களைப் புரிந்து கொண்டேன். தங்கள் கதைகள் சில பீம்சிங்(பழைய சினிமா தயாரிப்பாளர்) இன் படங்கள் போல் சோகத்தில் முடிகிறது. இருந்தாலும் இதயம் சுள்ளிடுகிறது. வாழ்த்துக்கள் .(கங்கைமகன்)

  சந்திரகௌரி சொன்னது…

  மிக்க நன்றி சார் . சிலருடைய பின்னூட்டங்களை ஆவலுடன் எதிபார்த்து இருப்பேன் . அதில் நீங்களும் முக்கியமானவர் . என்னுடைய மின்னஞ்சல் முகவரியில் எந்தவித மாறுதலும் செய்யவில்லை. ஏதோ தவறு நடந்திருக்கின்றது . திரும்பவும் அவற்றை அனுப்பி வையுங்கள் . நன்றி

  சந்திரகௌரி சொன்னது…

  அப்படிஎன்றால் கடினமாகத்தான் இருக்கும். இங்கு நான் வந்து பதினெட்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஒரு நாள் கூட மின் வெட்டு இருந்ததில்லை . அது எவ்வளவு கடினம் என்பது நான் அறிவேன். ஒவ்வொரு பதிவின் பின்னும் உங்கள் பின்னூட்டத்தை எதிர்பார்ப்பேன். உங்கள் வாழ்த்துக்களே எங்கள் எழுத்துக்களுக்கு ஊட்டச்சத்துக்கள் . தொடருங்கள்.

  சந்திரகௌரி சொன்னது…

  முடிவு பற்றித் தீர்மானிக்க வில்லை . அது இன்பமாகவும் இருக்க^லாம். நன்றி கங்கைமகன் அவர்களே

  சந்திரகௌரி சொன்னது…

  மிக்க நன்றி. தொடருங்கள்

  பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்

  தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...