• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 20 அக்டோபர், 2012

  தலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 4)


           
  என் குரலில் கேட்க அம்புக்குறியில்  அழுத்துங்கள்
  ஜேர்மனியில் ராம் பாதங்கள் பட்டன. தனக்குள் ஏற்பட்ட மாற்றம் தன் வாழ்க்கையை மேம்படுத்தப் போவதாய் மனங்குளிர்ந்தான். 

                  ராம் ஆற்றலொன்றும் பெற்றோர்க்குப் புதுமையில்லை. அவன் ஆர்வமொன்றும் பெற்றோர்க்குப் புதிதில்லை. அவன் மனதின் ரகசியங்கள், அவன் தம்மை மதிக்காத போக்கு, தம்மை எதிர்த்து நிற்கும் பண்பு இவையே தேவி சுதன் மனதுக்குள் பாறாங்கல்லாய் வந்தமர்ந்திருந்தன. 

  ´´என்னங்க சுதந்திரத்தை அளவுக்கதிகமாய்க் கொடுத்துவிட்டோமோ. பிள்ளை இப்படி மாறிப்போய்ட்டானேங்க. அவனை அமெரிக்கா அனுப்பியிருக்கக் கூடாது´´

  ´´தேவி நடக்கிறதுதான் நடக்கும். நாம் எவ்வளவு காலம் ராமோடு இருக்கமுடியும். தனியாக வாழும், தனியாக முடிவெடுக்கும் பக்குவம் பெற்றால்த்தானே அவனால் தனித்து வாழமுடியும். அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு எவ்வளவு காலம் அவனால் வாழமுடியும். எம்முடைய கடமை முடிந்துவிட்டது. இன்னும் என்ன ஒரு நல்ல இடமாகப் பார்த்து அவனைக்கட்டிக் கொடுத்துவிட்டால் நிம்மதியாக இருக்கும். கவலைப்படாதே எல்லாம் நல்லபடியாக நடக்கும்´´ சுதன் தேவிக்கு ஆறுதல் கூறினான்.

         ஒருநாள் ஒரு திருமணவிழாவிற்கு  ராம் இசைக்குழுவை அழைத்திருந்தனர். ராம் அவ்விசைக்குழுவில் பாடுவதற்கான பாடல்களை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான். அமெரிக்காவிலிருந்து திரும்பியபின் நடைபெறப் போகும் முதல் இசைநிகழ்வு. தன் புது உத்திகள் எல்லாம் கையாண்டு அந்நிகழ்வை நடத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தான். 

  ´´ராம் பாலும் பழத்திலும் வரும் ஒரு பாட்டை எடுத்துப் பாடேன். நல்லா இருக்கும். எங்கட சனங்களும் ரசிக்கும்´´ என்றாள் தேவி.

  ´´சும்மா இருங்கம்மா உங்கட பாட்டும் நீங்களும். இந்தப் பழைய பாட்டுகள் எல்லாம் இல்லை. எல்லாம் புதிசு. அதுவும் வேறமாதிரி இருக்கும். பாருங்களேன்´´

  ´´பழசுக்கு இருக்கிற மதிப்பு புதிசுக்கு இல்லை ராம். எங்கட சனம் அதத்தான் ரசிக்கும்``

  ´´இந்தக் கதைய விடுங்க. உங்கட சனத்த மாறச் சொல்லுங்க. அவங்க மாற வேண்டும். எப்பவும் பழைய பல்லவிதான். கேட்டுக் கேட்டுப் புளிச்சதைத்தான் கேட்க வேண்டுமா? இந்த லோலாப் பாட்டெல்லாம் யார் கேட்பார்கள்?

  ´´பழசு இல்லாம புதிசு எங்க இருந்து வந்தது``

  ´´அதுக்கு பழசக்கட்டிக் கொண்டுதான் வாழுகின்றீர்களா? உங்கட கதையெல்லாம் கேட்டால் வாழ்ந்த மாதிரித்தான். பழைய பஞ்சாங்மாத்தான் வாழவேண்டும்´´

  ´´பழைய பாட்டு இல்லையென்றால், இந்த Music Group இல்லையென்று அறிவிச்சுப் போடுவன்``

  ´´செய்யுங்கள் பார்ப்பம். இது நான் நடத்துவது. என்னிடமே அவர்கள் கேட்க வேணும். நான் Music Group கொண்டு போகத்தான் போறன். எனது இஸ்டத்துக்குப் பாடத்தான் போகிறேன்´´

  வார்த்தைக்கு வார்த்தை போட்டாபோட்டி. கருத்து மோதல்கள். கலாசார தூற்றல்கள். இனத்தின் இழிவுகள் போன்றன வார்த்தைகளால் ராமால் வீசப்பட்டன. தேவி தன் நண்பர்களிடம் மகன் இப்பாடல்கள் பாடுவான் என்று தம்பட்டம் அடித்துவிட்டால். தன் மகன் தன்னை பலவாறாக எதிர்த்துப் பேசுகின்றான் என்னும் கவலை அனைத்தும் சேர கண்களில் இருந்து கண்ணீர் அவளையும் மீறி பெருக்கெடுத்தது. அவள் கண்ணீரைப் பார்த்த மகன்

  ´´ சும்மா நடிக்காதீங்கம்மா`` என்று கூறிய வார்த்தைகள் கேட்டு ரணமாகியது மனம். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சுதன் தன் கோபத்தை வெளிக்காட்டினான். பட்டென்று எதிர்பாராதவிதமாக கன்னத்தில் விழுந்த தந்தையின் ஆத்திரத்தின் பிரதிபலிப்பு ராம் பொறுமைக்கு விடைகொடுத்தது. பிறந்து 20 வருடங்கள் கடந்துவிட்டான். எத்தனையோ முறை பெற்றோர் அவனைத் தண்டித்திருக்கின்றார்கள். எள்ளளவும் அவர்கள் தண்டிப்பு அவன் வளர்ச்சிக்கும் அன்புக்கும் தடையாக இருந்ததில்லை.

  12 கருத்துகள்:

  1. குரல் பதிவு புதுமை... வாழ்த்துக்கள்...

   உங்களின் குரல் பதிவு மெதுவாக (ஒலி அளவு) உள்ளது...

   நன்றி...

   பதிலளிநீக்கு
  2. பெற்றோர்கள் கண்டிப்பு நல்வழிப்படுத்துவதர்க்கே.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி . இதை பிள்ளைகள் புரிந்து கொள்ளுகின்றார்கள் இல்லையே

    நீக்கு
  3. தலைமுறை இடைவெளிப் பிரச்சனை எங்கும் எல்லோரையும் பாதிக்கத்தான் செய்கின்றன. பெற்றோர் மனம் ரணமாகித்தான் போகிறது.

   “பெற்ற மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு” என சும்மாவாச் சொன்னார்கள்.

   எதையும் அனுசரித்துப்போவோர்கள் மட்டுமே அதிர்ஷ்டசாலிகள்.

   பதிவின் போக்கு நன்றாக்வே செல்கிறது, தொடருங்கள்.

   பதிலளிநீக்கு
  4. அங்கம் 3-4 தொடர்ந்து 2ம் வாசித்தேன்.
   சாதாரண குடும்பங்களில் நடக்கும் அககப்போர் தான்.
   பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
   நல் வாழ்த்து.
   வேதா. இலங்காதிலகம்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மை ஆனால் புலம்பெயர்வில் அதிகம். உங்கள் வரவுக்கு நன்றி . தொடருங்கள்

    நீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...