வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

வெள்ளி, 16 நவம்பர், 2012

கனிந்துவந்த கார்த்திகை

ஒலிவடிவம் கேட்க முக்கோணவடிவத்தை அழுத்துங்கள்

             கனிந்துவந்த கார்த்திகை

கனிந்துவந்த கார்த்திகையே! உன்னை
கவிதைப் பெண்ணாள்
கரங்குவித்து அழைக்கின்றாள்
கன்னிகைக்கு உன்பெயரோ
விண்மீனுக்கும் உன் பெயரோ
வினோதப் பூவுக்கும் உன் பெயரோ
விளக்கீட்டு மாதத்திற்கும் உன்பெயரோ
விநாயகன் தம்பி சரவணனை
விருப்புடன் வளர்த்தவர்கள் உன் பெயர்
விளங்கி நிற்கும் பெண்களன்றோ

விரைந்து வந்த கார்த்திகையே!
விருட்சங்கள் காட்டிடும் வர்ணஜாலங்கள்
எமக்கு உணர்த்திடும் பனிக்கால வாழ்வதனை
விருப்புடன் அணிவோம் வெப்பஆடை
விரைந்து ஏற்றுவோம் வெப்பமூட்டி - உன்
வருகையின் அச்சமாய் வழிவிடுவோம்

மரத்துக்கும் உனக்குமென்ன மனஸ்தாபமோ நங்காய் - உன்
வரவுகண்டு தம் ஆடைகளைக் கழைந்துவிட்டுப்
போர்வையற்றுக் குளிர் காய்கிறதே
மார்கழிப் பெண்ணை எட்டிப்பிடிக்க
மாதங்களுக்குத் தூதாய் வந்தவள் நீயோ
தன்னைப் போர்க்க விலங்கின் போர்வையை
உரித்துப் போர்த்தி உடலை மூடி மனிதன்
உல்லாசமாய் வலம்வர வித்திடும் மாதம் நீயன்றோ
உன்னில் தொட்டுப் பங்குனி வரையும் - குளிர்
உத்தரதாண்டம் ஆடிநிற்க
கனிந்து நீயும் வந்தாயோ
கவிதைப் பெண்ணாள் வரவேற்க


8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆஹா... அழகான வர்ணனை... அருமை...

ரசித்தேன்...

மகேந்திரன் சொன்னது…

மாதங்களில் வசந்தம் பொழியும்
கார்த்திகைக்கு அழகிய வரவேற்பு
சகோதரி...
மனம் இனிக்கும் கவிதை....

அ. வேல்முருகன் சொன்னது…

பனிக் காலத்தை
பாங்காய் வரவேற்றீர்

T.N.MURALIDHARAN சொன்னது…

கார்த்திகை மாதத்திற்கு நல்ல கவிதை வரவேற்பு

சந்திர வம்சம் சொன்னது…

கர்த்திகையை வரவேற்ற விதமே அருமை.

சந்திர வம்சம் சொன்னது…

கார்த்திகை நட்சத்திரமே கொட்டுகிறது தங்கள் தளத்தில்.
அழகான முயற்சி. வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அன்புடையீர்,

வணக்கம்.

நல்லதொரு அழகான படைப்பு. பாராட்டுக்கள்.

தங்களின் வலைத்தளம் பற்றியும்
தங்களின் ஓருசில பதிவுகள் பற்றியும் இன்று
நம் “யுவராணி தமிழரசன்” அவர்களால்
வலைச்சரத்தில் பெரிதும் பாராட்டிப்
பேசப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு இதோ:

http://blogintamil.blogspot.in/2012/11/2.html

இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

தங்களுக்கு என்
மனமார்ந்த பாராட்டுக்களும்
அன்பான வாழ்த்துகளும்.

அன்புடன்
வை.கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in .

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
வாழ்த்துகள்.

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...