வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

வெள்ளி, 23 நவம்பர், 2012

திருமணம்



களவினில் குற்றம் கலந்தது
கடிமணம் உலகினில் விதந்தது
உறவினில் கலங்கங்கள் புகுந்தது
உதவிட பிரிவுகள் எழுந்தது
இருமனம் இணைவதே திருமணம் - இதை
உணர்த்திட மார்பினில் மாங்கல்யம்
உணர்த்திடும் அவசியம் புரிந்ததால்
திருமணம் உலகினிலின் றவசியம்.

மனிதர்கள் மாண்புகள் உணர்ந்துவிட்டால்
மதமது சடங்கது தேவையில்லை
கலாசார பண்பாடு களத்திலில்லை
எழுதாத சட்டமது திருமணமும்
எழுதப்பட்ட சட்டமாய் தேவையில்லை.

குணமது தெரியணும் நெறியது புரியணும்
வளமது பெருகிட வாழ்வது சிறக்கணும்
பணமது நீக்கியே மனமது பார்க்கணும்
விதவைகள் திருமணம் விரும்பியே ஏற்கணும்
தெளிவிலா மனதுடன் திருமணம் வெறுக்கணும்
நாளைய உலகினை நாடிய வாழ்வினை
நாளுமே எண்ணியே வாழ்வினை நடத்தணும்
அன்புடன் துணையினை ஆதரவாய் நடத்தணும்
பிறரது வாழ்வது சிறந்திட திருமணவாழ்வும் சிறக்கணும்

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு வரியும் சிறப்பு... வாழ்த்துக்கள்...

மகேந்திரன் சொன்னது…

மங்கள நாண் பற்றிய அழகிய கவிதை சகோதரி....
சிறக்கட்டும் அனைவரது திருமண வாழ்க்கையும்...

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

// மனிதர்கள் மாண்புகள் உணர்ந்துவிட்டால்
மதமது சடங்கது தேவையில்லை
கலாசார பண்பாடு களத்திலில்லை
எழுதாத சட்டமது திருமணமும்
எழுதப்பட்ட சட்டமாய் தேவையில்லை.//

இரு மனம் சேர்ந்தால் திருமணம். காலச் சூழலுக்கேற்ற நல்ல கவிதை!

சிவகுமாரன் சொன்னது…

\\\பணமது நீக்கியே மனமது பார்க்கணும்
விதவைகள் திருமணம் விரும்பியே ஏற்கணும்///
புரட்சியான கருத்துகள்.
காலத்திற்கேற்ற வரிகள்.

அருமை

T.N.MURALIDHARAN சொன்னது…

திருமணம் பற்றிய கவிதை அருமை

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அழகான வரிகளுடன் அற்புதமான கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...