• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 7 ஜனவரி, 2013

  மறக்குமா நெஞ்சு மறக்குமா?


  Image Sharing


  கவிதையை என் குரலில் கேட்க பச்சை அம்புக்குறியை அழுத்துங்கள்.  ஓ நெஞ்சே! ஓ நெஞ்சே!
  ஒரு வயதில் நானுடுத்தி விளையாடியதாய்
  ஒருமுறை என்னம்மா எடுத்துக்காட்டியதாய்
  சிறுவயதில் என் நெஞ்சில் நிலையாய் ஓர் எண்ணம்
  சிந்தித்துப் பார்க்கிறேன் சிந்தனையில் எட்டவில்லை
  சிவப்புக்கரை சேலையென்று சொன்ன - அச்சேலையை
  மறந்துவிட்டாயா? நெஞ்சே மறந்துவிட்டாயா?

  நெஞ்சம்:  மறக்கும் நெஞ்சம் மறக்கும்


  பத்துவயதில் பவித்திரமாய் வைத்திருந்து
  பத்துமுறை உடையணிந்து பக்கத்தில் படுக்கவைத்து
  நித்தமும் நகையணிந்து சுத்தமாய் குளிக்கவைத்து
  முத்தமும் தித்திப்பதாய் தந்தாயென தாயுரைத்த
  முத்துத் தோடணிந்த சித்திரப் பாவையை
  சித்தத்தில் கலங்கி மொத்தமாய்த் தெரியவில்லை
  கச்சிதமாய்க் காட்டிவிடென் சித்திரப் பாவையை
  மறக்குமா? நெஞ்சம் மறக்குமா?

  நெஞ்சம்:  மறக்கும் நெஞ்சம் மறக்கும்

  ஓடும் பஸ்ஸில் பாய்ந்து ஏறியதும்
  உதவும் கரங்களை உதறித் தள்ளியதும்
  உண்ணும் கண்களை உறுத்துப் பார்த்ததும்
  உரசிய உடல்களை ஊசியால் பதித்ததும்
  நிஜமாய் வந்து நிழலாய் மறைகிறது
  நினைத்துப் பார்க்கிறேன் நினைவில் முகமில்லை
  மறந்துவிட்டாயா?  நெஞ்சே மறந்துவிட்டாயா? 

  நெஞ்சம்:   மறக்கும் நெஞ்சம் மறக்கும்

  பெண்ணென்றும் ஆணென்றும் மொழியென்றும் பேதமில்லை
  பெற்றோரும் மற்றோரும் சுற்றமாய் இருந்ததில்லை
  கற்றலும் மறக்கவில்லை களிப்பும் குறைந்ததில்லை
  கையுணவு காய்ந்தும் கதைகள் குறைந்ததில்லை
  கூடிக்குலாவி நின்றோம் கொட்டமடித்து நின்றோம்
  பல்கலையும் பயின்று பாதை மாறிவிட்டோம்
  பழகிய உறவுகளும் பறந்து மறைந்துவிட்டார்
  பாடிப்பழகிய நட்பைத் தேடியும் காணவில்லை
  சாடையாய் முகவடிவம் அகக்கண்ணில் தெரிகிறது
  மறக்குமா?  நெஞ்சம் மறக்குமா?  

  நெஞ்சம்:  மறக்கும் நெஞ்சம் மறக்கும்
          துன்பத்தை மறந்து மனம் இன்பத்தை நினைத்திருக்க
          இரண்டு மனம் இறைவன் படைக்கவில்லை
          மறக்கவேண்டும் மனம் அமைதி அடைவதற்கு
          சிறக்கவேண்டும் உள்ளம் மறதி துணையிருக்க
           9 கருத்துகள்:

  மகேந்திரன் சொன்னது…

  ஆகா...
  அருமையான ஆக்கம் சகோதரி...

  மனதில் நிலைகுத்தி உள்ள ஒவ்வொரு
  நிகழ்வுகளையும் மிக அழகாக
  வார்த்தைகளாக்கி இருக்கிறீர்கள்...
  நல்லதையெல்லாம் மனதில் வைத்து
  அல்லவைகளை அகற்றத்தான் துடிக்கிறோம்....
  மனம் ஒரு மந்திரச் சாவி அல்லவா...
  எவ்வாறு பூட்டினாலும்
  திறந்துகொள்கிறது....

  Ramani சொன்னது…

  சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி
  என்பதற்கு சரியான உதாரணம்
  தங்களின் இந்தப் பதிவு

  எப்போதும் இசை அமைப்பாளர்களின் குரலில்
  அவர்களின் பாடலைக் கேட்டுப்பார்த்தால்
  அதன் சுவையே அலாதிதான்

  தங்களின் அருமையான கவிதையை
  தங்கள் இனிமையான குரலில் கேட்க
  அந்தச் சுவையை ரசித்து மிக மகிழ்தோம்

  மனம் தொட்ட அருமையான கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  RAMVI சொன்னது…

  கவிதையை உங்கள் குரலில் கேட்டது சிறப்பாக இருந்தது கெளரி.
  கவிதை மிக அருமை. ‘ மறக்க வேண்டும் மனம் அமைதி அடைவதற்கு ’என்கிற வரிகள் மிகச் சிறப்பு.

  Rathnavel Natarajan சொன்னது…

  அருமையான கவிதை.
  நன்றி.

  சந்திரகௌரி சொன்னது…

  நன்றி சகோதரன் . என்னதான்மனிதன் முயன்றாலும் சில விடயங்கள் எங்களையும் அறியாது மீறிப் போகின்றபோதுதான் உலகத்தைப் பார்த்து வியந்து போகின்றோம்

  சந்திரகௌரி சொன்னது…

  நன்றி சார்

  சந்திரகௌரி சொன்னது…

  நன்றி ராம்வி.

  சந்திரகௌரி சொன்னது…

  நன்றி ஐயா . அருமை என்னும் உங்கள் வார்த்தை எண்கள் பதிவுகளுக்குப் பெருமை

  முத்து குமரன் சொன்னது…

  //மறக்க வேண்டும் மனம் அமைதி அடைவதற்கு//
  மறக்க வேண்டும் என்ற நினைவே மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. ஞாபகம் வருவதாலேயே மீண்டும் மறக்க தோன்றுகிறது. எளிதாக மறக்க முடிந்தால் இறைவனை பற்றி யாருக்கு நினைக்க தோன்றும்.

  கவிதை அருமை. நேரம் இருப்பின் என் வலையையும் காண அழைக்கிறேன்.
  http://muthuchitharalkal.blogspot.com/2013/01/blog-post_11.html

  தவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை

          உலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்...